Sunday, December 31, 2017

எனக்கே என் கவிதைகள் பிடிக்கவில்லை!

Related image

எழுத்தாளர்களில் ரெண்டு வகை. 1) சதா கண்ணாடியில் தம்மை பார்த்துக் கொள்பவர்கள்; 2) தம்மைக் கண்டு லஜ்ஜை கொள்பவர்கள். நான் ரெண்டாவது வகை.
 எனக்கு நான் எழுதும் எதுவும் பெரிய ஈர்ப்பு தராது. என் புத்தகங்களை மீள வாசிக்கையில் எனக்குள் அதிருப்தியே எழும். என் கதைகள், நாவல், கட்டுரைகள் என எவையும் எனக்கு விருப்பமானவை அல்ல. எனில் அவற்றை ஏன் பிரசுரிக்கிறேன்?
நான் என்னை எனது சரியான விமர்சகனாய் கருதுவதில்லை. எனது மதிப்பீட்டில் எனக்கே முழுநம்பிக்கை இல்லை. நான் வெகுசாதாரணமாய் கருதும் என் எழுத்துக்களில் சிலவற்றை வெகுவாய் ரசிக்கும் வாசகர்கள் எனக்குண்டு. நான் முக்கியம் என தற்காலிகமாய் நம்பியவற்றை வாசகர்கள் நிராகரிப்பதும் உண்டு..இதனாலே ஒரு கட்டத்தில் நான் என் எழுத்தை மதிப்பிடுவதை நிறுத்தி விட்டேன், கழுதை எப்படியும் போகட்டும் என அவிழ்த்து விட்டு விட்டேன். புதிதாய், தெளிவாய், நளினமாய், நாணயமாய் பொய்யின்றி எழுதுகிறேனா என்பது மட்டுமே ஒரே அளவுகோல்.

காந்தியும் பெண்களும்

Image result for ஆப்பிளுக்கு முன் சரவணகார்த்திகேயன்


தன்னுடைய பாலியல் பரிசோதனைகளை காந்தி அளவுக்கு துணிச்சலாய் முன்வைத்தவர்கள் இல்லை. இன்று நாம் நமது இச்சைகளை துணிந்து முகநூலில் பேசும் ஒரு சுலபமான காலகட்டத்தில் வாழ்ந்தாலும் காந்தியின் துணிச்சல் நமக்கு உண்டா?
 நமது படுக்கையறையில் என்னென்ன விசித்திரங்கள் நடக்கின்றன என சொல்ல தைரியம் உண்டா? சொல்லப் போனால் இன்று தான் நாம் நமது அந்தரங்கங்களை ரொம்ப கவனமாய் மறைத்து தேர்ந்தெடுத்த ஒரு சில விசயங்களில் மட்டும் மிக வெளிப்படையாய் இருக்கிறோம். ஒருவித நேர்மறை பட்டவர்த்தமே நமக்கு ஏற்ற இன்றைய துணிச்சல், நமக்கு தோதான வெளிப்படை, முகம் சுளிக்க வைக்காத சுய தம்பட்டம்.

புத்தாண்டைக் கொண்டாடுவோம்!

Image result for new year

புத்தாண்டு வாழ்த்துக்கள் அன்பர்களே

வரும் ஆண்டில் யாருக்கும் வளைந்து கொடுக்காமல் விருப்பம் போல் செயல்படுவோம். நாம் மகிழ்ந்தால் உலகமே மகிழும். நாம் சிறந்தால் உலகம் சிறக்கும். இது நம் மண். இது நமக்கானது மட்டுமே. இது நம் காலம். புரவி போல் அதில் ஏறி பாய்ந்து செல்வோம். கொண்டாடுவோம்!

Wednesday, December 27, 2017

வாங்க வாங்க


எங்கே போச்சு சர்ச்சைகள்?

Image result for சாரு ஜெயமோகன்
இப்போதெல்லாம் ஏன் முன்பு போல் அதிகம் சர்ச்சைகள் நடப்பதில்லை, ஏன் எழுத்தாளர்களை சட்டையை கிழித்துக் கொண்டு மண்ணில் புரள்வதில்லை என ஒரு நண்பர் கேட்டார். எனக்குத் தோன்றின சில எளிய பதில்கள் இவை:

Tuesday, December 26, 2017

ஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (4)


 Related image
உன்னதம் இல்லையென்றால் நெருக்கடிக்கான தீர்வு தான் என்ன?
என் பெயர் ராமசேஷன்நாவலின் பிற்பகுதியில் ஆதவன் இதற்கு பதில் தேடுகிறார். ராமசேஷனின் உண்மையான பிரச்சனை அவனுக்கு எதிலும் பிடிப்பில்லை, நம்பிக்கையில்லை என்பதல்ல. அவன் எதையும் ஒரு தனிப்பெரும் உண்மையாய் பார்க்க முடிவதில்லை என்பதே அவனது பிரதான நெருக்கடி. வெளுப்பான, தளதளப்பான, தன்னம்பிக்கை மிகுந்த பணக்காரியான மாலாவுடன் இருக்கையில் அப்படி இல்லாத ஒரு பெண்ணுக்காக ஏங்கி அவன் மனம் எம்பித் தாவுகிறது. அப்படியானவளே பிரேமா. ராமசேஷனின் அதே மத்திய வர்க்கத்தை சேர்ந்த, பிராமணப் பெண். அழகற்றவள், மாநிற நிறத்தவள். இது குறித்த குற்றவுணர்வு கொண்டவள். இப்படி எல்லா விதங்களிலும் அவள் மாலாவுக்கு எதிர்சாரி. ஆனால் இந்த பிரேமாவை அடைந்து அவளுடன் படுக்கையில் உறவு கொள்ளும் போது ராமசேஷனின் மனதில் சட்டென மாலா வந்து நிறைகிறாள். அவள் மீதான இச்சை பெருகுகிறது.

பெண்கள் இப்படித் தான் நினைக்கிறார்களா?


பெண் உளவியல் பற்றி நான் எழுதின கட்டுரைகளின் தொகுப்பு இது, எனது ஒன்பதாவது நூல். உயிர்மை வெளியீடு. இம்மாதம் 30ஆம் தேதி வெளியாகிறது.
அனுபவம், குடும்பம், வேலையிடம், சமூகம், பெண்ணுரிமை, மனநலம், சினிமா, ஆடை ஒழுக்கம், உடல், பேச்சு, திருமணம் என வெவ்வேறு தளங்களில் பெண் மனம் எப்படி செயல்படுகிறது என இந்நூல் பேசுகிறது.
இது ஒரு கராறான உளவியல் நூல் அல்ல. ஒரு எழுத்தாளனாய், சாமான்யனாய் பெண்களை அணுகி அவர்களை புரிந்து கொள்ள நான் செய்த முயற்சிகளே இது. கடந்த பத்து வருடங்களில் என் அணுகுமுறையில் நேர்ந்துள்ள மாற்றங்களையும் இது பிரதிபலிக்கிறது.

Sunday, December 24, 2017

டி.டி.வி தினகரனின் அதிர்ச்சி வெற்றி: அடுத்து என்ன நடக்கும்?

இடைத்தேர்தலில் தினகரனின் வெற்றியைக் கண்டு பல அரசியல் விமர்சகர்களைப் போல நானும் குழம்பிப் போனேன். இது சம்மந்தமான டி.வி விவாதங்கள், கருத்துக்கள், பேஸ்புக் பதிவுகளை கவனித்ததன் மூலம் நான் புரிந்து கொண்டவற்றை கீழ்வருமாறு தருகிறேன்.
1)   ஒரு கட்சி தோற்கும் போது அதன் பிரதிநிதிகள் மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம் என பணிவுடன் கூறி விட்டு, தோல்விக் காரணத்தையும் குறிப்பிடுவார்கள். இம்முறை எடப்பாடி அணியினரால் எந்த காரணத்தையும் அப்படி சொல்ல இயலவில்லை. பண விநியோகம் தான் ஒரே காரணம் எனச் சொல்ல முடியாது. ஏனென்றால் எடப்பாடியினரும் பணம் பட்டுவாடா செய்தார்கள்.
 திமுகவினரோ ஒரு பக்கம் இத்தோல்வியில் மகிழ்ச்சி காண்பது சற்றே விசித்திரமாக உள்ளது. அவர்கள் அதிர்ச்சியையோ கசப்பையோ வெளிப்படுத்தியதாய் தெரியவில்லை. மாறாக, பாஜக மத்தியில் இருந்து அதிமுகவை கட்டுப்படுத்துவது, அதன் காரணமாய் ஆளும் அரசு செயலிழந்து போயிருப்பதைக் கண்டு மக்கள் கசப்படைந்து தினகரனுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ததாய் திமுகவின் பழ கருப்பையா கூறினார். இந்த இடைத்தேர்தல் இழப்பு பொருட்படுத்தத் தக்கது அல்ல என்பது திமுகவின் தரப்பு. ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் தேர்தல் வந்தால் திமுகவே வெல்லும் என அக்கட்சியினர் நம்புகிறார்கள்.

Saturday, December 23, 2017

கேரளத்துப் பெண்களை நோக்கி ஏன் தமிழர்கள் ஈர்க்கப்படுகிறார்கள்?

Image result for malayali women
நண்பர் சரவணகார்த்திகேயன் முகநூலில் எழுதியுள்ள ஒரு ஆர்வமூட்டும் பதிவுகேரள நன்னாட்டிளம் பெண்கள்”. நமது இலக்கியவாதிகளோ அறிவுஜீவிகளோ எடுத்துக் கொள்ளாத ஒரு முக்கியமான விசயத்தை இதில் எடுத்துக் கொண்டிருக்கிறார். ஏன்  கேரளத்துப் பெண்களை நோக்கி தமிழர்கள் ஈர்க்கப்படுகிறார்கள்?

2ஜி வழக்கு தீர்ப்பும் பேரறிவாளனும்


2ஜி அலைக்கற்றை தீர்ப்பு சம்மந்தமான இரு விதமான முகநூல் பதிவுகளைப் படித்தேன். ஒருவகை - இது கார்ப்பரேட் அரசியல் மோதல்களில் நம் கண்ணுக்குத் தெரியும் சிறு முடிக்கற்றை மட்டுமே. அவர்களுக்குள் அடித்துக் கொண்டு சமரசமாகி விட்டார்கள். பரஸ்பரம் மிரட்ட இந்த வழக்கை பயன்படுத்திக் கொண்டார்கள். இவ்வழக்கில் குற்றம் நிச்சயம் நடந்திருக்க வேண்டும். ஆனால் குற்றவாளிகள் ஒன்று ராஜாவும் கனிமொழியும் அல்ல, அல்லது அவர்கள் மட்டும் அல்ல. பெருந்தலைகள் பலர் எந்த தொல்லையும் இன்றி ஜாலியாக தப்பித்து விட்டார்கள்.

Friday, December 22, 2017

இலக்கிய நிகழ்வுகளில் கருத்து மோதல்கள் அவசியமா? (2)

Image result for jeyamohan

விஷ்ணுபுரம் இலக்கிய நிகழ்வை ஒட்டி எனக்கும் ராஜகோபாலுக்குமான விவாதத்தின் தொடர்ச்சி இது. தன் பின்னூட்டத்தில் அவர் சொல்கிறார்.
// இந்த உரையாடல்கள் ஒரு எழுத்தாளரை கௌரவிக்கும் நிகழ்வு.//

இந்த கூற்றும் விசித்திரமாய் உள்ளது. கௌரவிக்கும் நிகழ்வுகளை நான் கண்டிருக்கிறேன். இந்நிகழ்வுகளில் எழுத்தாளரைப் பற்றி விமர்சகர்களோ வாசகர்களோ போற்றிப் பேசுவார்கள். ஆனால் உங்கள் நிகழ்ச்சிகள் வாசகர் கேள்விகளுக்கு எழுத்தாளன் பதிலளிக்கும் நிகழ்வுகள். சொல்லப் போனால், உங்கள் நிகழ்ச்சியில் தான் கடுமையான சிக்கலான கேள்விகளை நான் எதிர்கொண்டேன். வேறு எழுத்தாளர்களும் அவ்வாறே உணர்ந்திருப்பார்கள் என புரிந்து கொள்கிறேன். என் பிரச்சனை அது அல்ல. இக்கேள்விகளை ஜெயமோகன் மட்டுமே எழுப்பினார் என்பதே என் பிரச்சனை. அவர் மட்டுமே ஒரு இலக்கிய நிகழ்ச்சியின் முழுமையான பங்கேற்பாளராய் இருந்தார். பிறர் விலகி நின்று கவனித்தனர். நீங்கள் ஏன் ஜெ.மோவைப் போன்று கடும் வினாக்களை எழுத்தாளனை நோக்கி எழுப்பவில்லை, இவ்வினாக்கள் உருவாக்கிய கருத்துக்களை ஒட்டி விவாதங்கள் நிகழ்த்தவில்லை என்பதே என் ஒரே கேள்வி.