“மிஷ்கினைத் துப்பறிவோம்”: எதிர்வினைகள்

 Image result for mysskin

இம்மாத உயிர்மையில் வெளியாகியுள்ள எனது கட்டுரை ”மிஷ்கினை துப்பறிவோம்”. அதற்கு உற்சாகமான ஆர்வமுட்டும் எதிர்வினைகள் தொடர்ந்து வருகின்றன. இதழ் வெளியான அன்றே நண்பரும் எழுத்தாளரும் நடிகருமான ஷாஜி என்னை போனில் அழைத்து நீண்ட நேரம் பேசினார். அவர் மிகுந்த உணர்ச்சிகரமான நிலையில் இருந்தார். “மிஷ்கினை நீண்ட காலம் கூட இருந்து அறிந்த ஒருவர் எழுதுகிற விசயத்தை எப்படி அவரை ஒரே ஒருமுறை மட்டுமே சந்தித்த நீங்கள் எழுதினீர்கள்?” என்ற கேள்வியை திரும்பத் திரும்ப கேட்டார். அவரது வியப்பு எனக்கு மேலும் வியப்பாக இருந்தது. அந்தளவுக்கு சிறப்பாகவா எழுதியிருக்கிறேன்? மிஷ்கினின் ஆளுமையைப் பற்றின எனது ஒரு எளிய அவதானிப்பாகவே அதைக் கருதி இருந்தேன். ஒருவிதத்தில் சமீபத்தில் சாருவைப் பற்றி நான் எழுதியதன் நீட்சி தான் இது.
Image result for ஷாஜி

 எப்படியோ ஷாஜிக்கு பிடித்திருந்தது எனக்கு மிகுந்த உவகையும் திருப்தியும் அளித்தது. அவர் கூர்மையான மனிதர். ஆழமான வாசகர். அவருக்கு சரியாகப் பட்டதென்றால் நான் ஒரு நல்ல கட்டுரையைத் தான் எழுதியிருக்கிறேன் எனப் பொருள்! இக்கட்டுரையைப் பற்றி மிஷிகினிடம் அவர் பேசினதாகவும், இதை அவர் மிஷ்கின் வாசிக்கும் பொருட்டு அனுப்பித் தரப் போவதாகவும் சொன்னார். ஷாஜி “துப்பறிவாளன்” படம் பற்றி பல அற்புதமான விசயங்களை என்னிடம் அன்றிரவு பகிர்ந்து கொண்டார். அதையெல்லாம் கேட்டிருந்தது ஒரு அபாரமான அனுபவம்.

ஷாஜியுடனான உரையாடலைத் தொடர்ந்து இந்த மின்னஞ்சல்கள் வந்தது பின்னிருந்து அணைத்து காதலி அளிக்கும் முத்தங்கள் போல் இருந்தன. யமுனைச்செல்வனுக்கும் விஜயகுமாருக்கும் நன்றிகள்! என்னைப் போன்ற ஒரு எளிய எழுத்தாளன் வேறென்ன எதிர்பார்க்க முடியும்? இது போன்ற எதிர்வினைகள் தாம் என்னைத் தொடர்ந்து பித்துப் பிடித்தது போல் எழுதச் செய்கின்றன.

 தொடர்ந்து என்னை இது போல் நேசியுங்கள்!

வணக்கம் அபிலாஷ்.

மிஷ்கினை துப்பறிவோம் கட்டுரை வாசித்தேன்படைப்புகளைக்கொண்டு படைப்பாளனை அணுகுவதில் எனக்கு உடன்பாடில்லை எனினும்கட்டுரை அருமைஒரே ஒரு குறை.. கட்டுரை இன்னும் விரிவாக இருந்திருக்கலாம் என்பதேஉள்ளடக்கத்தைச் சொல்லவில்லைஒருவேளை எடிட்டிங்கில் சுருக்கப்பட்டிருக்கலாம்இதுபோன்ற கட்டுரைகளை ஆங்கிலத்திலும் நீங்கள் எழுதவேண்டும்.


நன்றி
யமுனைச்செல்வன்

அன்புள்ள அபிலாஷ் அவர்களுக்கு ,

வணக்கம் .
உயிர்மை நவம்பர் கட்டுரையை ஒரே மூச்சில் படித்தேன். நீங்கள் உளவியல் சார்ந்து எழுதும் கட்டுரைகள் வாசிக்க அதிசுவாரஸ்யமாக உள்ளன; பெண்ணுடல் குறித்தும் கோபிகிருஷ்ணன் குறித்தும் நீங்கள் முன்னர் எழுதிய, பேசியவை நினைவுக்கு வருகின்றன. உங்களின் இதைப்போன்ற பொது உளவியல் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு வெளிவரவேண்டும் என விரும்புகிறேன்.


மைக்கேல் ஹென்கேவின் Amour என்ற பிரெஞ்சு படத்தை நேரமிருப்பின் நீங்கள் பார்க்கவேண்டும். அந்தப் படத்திற்கும் கட்டுரைக்கும் தொடர்புண்டு. இது குற்றம் பார்த்தல் அல்ல; மிஷ்கினை எனக்கு மிகவும் பிடிக்கும். நாம் அறிந்த ஒன்றை நமக்குப் பிடித்த ஒருவர் சொல்வதால் வரும் இன்பம்.


The confessions of a mask எழுதிய மிஷிமா தற்கொலை செய்துகொண்டார். அந்த சாமுராய்களின் தற்கொலை முறைக்காட்சியும் படத்தில் இருந்தது. அப்போதும் உணர்ச்சி மிகுந்த ஒரு நிலைக்குச் சென்றேன். இவ்வாறாக இரண்டுமுறை.

முன்னமே அறிந்து அதைக் காண்பதால் வரும் இன்பம், அறிதலால் வரும் இன்பம்.
அது நாம் கைகோர்க்கும் புள்ளி அல்லவா?!

நன்றி.

அன்பொடு
விஜயகுமார் .


Comments

Anonymous said…
Hi Abolish, trust you are doing well, I'm a avid reader of your blog.wishing you good health and prosperity.. yet to read your article on myshkin..

Cheers..
jkdocdickens said…
அன்புள்ள அபிலாஷ் , இந்த உயிர்மை இதழை வாங்க தவற விட்டு விட்டேன் ... உங்களது கட்டுரை யை வாசிக்க முடியவில்லை ....மிஷ்கின் பற்றிய கட்டுரை .....எப்பொழுது உங்கள் வலைப்பூவில் பதிவேற்றுவீர்கள் ....பதிவேற்ற ஏதேனும் தடை உள்ளதா ?
Stalin said…
சமீபத்தில் நண்பர் ஒருவர் தற்செயலாக எனக்கு பிடித்த எழுத்தாளர் குறித்து கேட்ட போது,உங்கள் பெயரை தான் கூறினேன் அபிலாஷ்.மிகவும் contemporaryயாக உங்கள் எழுத்தை உணர்வதாக காரணம் கூறினேன்.
நண்பர் விஜயகுமார் கூறியதை போல் உளவியல் சார்ந்து வெளிப்படும் கூர்மையான அவதானிப்புகள் தான் உங்கள் எழுத்தை தொடர்ந்து படிப்பதற்கு என்னை ஈர்த்தது.
அதிலும் உங்களின் கடைசி புதினம் மறக்க முடியாத வாசிப்பனுவம்.அது சார்ந்து நடந்த உரையாடல்களை அறிந்துக் கொள்ள நீண்ட நாட்களாகவே விருப்பம்.
நன்றி ஸ்டாலின்!