வாலு - மம்தா காலியா

Related image

என் தொப்புளைப் பார்க்கையில்
உன் நினைவு வருகிறது, அம்மா.
உனக்குள் அந்த தொப்புள் கொடியில்
நானெப்படி மிதந்திருப்பேன் அம்மா.
நான் ஒரு எலியைப் போன்றிருந்திருப்பேன்,
அவசர மூச்சுகள் விடும் ஒரு நெளிநெளியான சுருள்.
நீ, நிச்சயம், உன் படைப்பாக்கத்தில்
பெருமை கொண்டிருக்க மாட்டாய் -
நான் பார்க்க அப்பாவைப் போன்று இருந்தேன்
நம் பாத்ரூமை பகிர்ந்து கொண்ட
அந்த பக்கத்து வீட்டுக்காரரைப் போன்று இல்லை

எனும் நிம்மதியைத் தவிர.

Comments