ஒரு சொல்லில் உள்ளது கவிதை

இன்று அதிகாலை நடையில்
முதன்முதலாக சந்தித்தோம்
நானும் ஒரு பனித்துளியும்
ஒரு வாழ்நாள் முழுவதும்
பேசிக் கொண்டிருந்து விட்டு
பரஸ்பரம் காணாமல் போனோம்!
- எம். யுவன்

# "போனோம்" என்பதில் உள்ளது இது கவிதையாகும் மாயம்.

Comments

Anonymous said…
இந்த கவிதையின் இறுதி வரிகளில் ஒருநாள் முழுக்க பேசிக் கொண்டிருந்துவிட்டு பின்னர் காணாமல் போனோம் என்பதில் முரண் இருப்பதாக தோனுகிறது, அது எப்படி அதிகாலை பனித் துளியோடு ஒருநாள் முழுக்க பேசிக் கொண்டிருக்க முடியும், சூரியன் உதித்ததுமே பனித்துளி மரணித்துவிடுமே! பின்னர் ஒருநாள் என்பது முரண் அல்லவா?..
//இந்த கவிதையின் இறுதி வரிகளில் ஒருநாள் முழுக்க பேசிக் கொண்டிருந்துவிட்டு பின்னர் காணாமல் போனோம் என்பதில் முரண் இருப்பதாக தோனுகிறது, அது எப்படி அதிகாலை பனித் துளியோடு ஒருநாள் முழுக்க பேசிக் கொண்டிருக்க முடியும், சூரியன் உதித்ததுமே பனித்துளி மரணித்துவிடுமே! பின்னர் ஒருநாள் என்பது முரண் அல்லவா?..//
பனித்துளி உயிர்த்திருக்கும் அந்த குறைவான காலப்பொழுது கவிஞனுக்கு ஒரு நாள் பொழுதாய் செல்கிறது. காலம் என்பது மனதின் கட்டமைப்பு என்பது யுவனின் கவிதைகளில் மீள மீள வரும் சேதி.
அருமையான கவிதை.