ஒரு பிறந்த நாள் கவிதை – ஸ்ரீனிவாஸ் ராயப்ரோல்

சூழ்நிலையின் தேவைக்கு மேலாக
நான் என்றுமே இருந்ததில்லை
என்னிடம் என்னை விட அதிகமாய் வேண்டிய
ஒரு சூழ்நிலையில் என்றும் நான் இருந்ததில்லை
இதயத்தின் புரவிகள் மூளையின் வாதங்களை
கழற்றி விட்டு பாய்ந்தோடிய நிலை ஏற்பட்டதில்லை
என்றுமே தமது ஓட்டிகளை அறியாத
குதிரைகளின் மீது நான் அமர்ந்ததில்லை
உடனடி தருணத்தைக் கடந்து நான்
மேலெழுந்தது இல்லை
என் உடனடி விடையை கோரிய
ஒரு தருணம் எனக்கு என்றும் ஏற்பட்டதில்லை.
என் நண்பர்களின் முகங்களை எதிர்கொள்ள
ஒரு புதிய முகம் எனக்கு என்றும் தேவைப்பட்டதில்லை
என்னை நோக்கி திரும்ப புன்னகைக்க
முகங்கள் இல்லா நண்பர்கள் எனக்கென்றும் இருந்ததில்லை.
Comments