நீ நடந்தால் நடை அழகு!

இவ்வார குமுதத்தில் ரஜினியின் நடிப்பு பாணி எப்படி தனித்துவமாய் வெகுஜன தமிழ் ஸ்டைலையும் ஹாலிவுட் பாணியையும் கலந்து வெளிப்படுத்துகிறது என விளக்கும் ஒரு கட்டுரையை வெளியிட்டிருக்கிறேன். அதற்கு முலநூலில் ஹரன் பிரசன்னா எழுதியுள்ள ஒரு நல்ல எதிர்வினையை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்...

"ரஜினியைப் பற்றி அபிலாஷ் எழுதி இருக்கும் கட்டுரை - நீ நடந்தால் நடை அழகு - குமுதத்தில் குமுதம் அளவில் வந்துவிட்டது. மிகத் தீவிரமாக விரிவான பின்புலத்தில் எழுதப்படவேண்டிய கட்டுரை அது. ரஜினி நடிக்க வந்த காலகட்டத்தையும் ரஜினியின் நடிப்பையும் சேர்த்துப் பார்த்து எழுதவேண்டிய கட்டுரை. மிக அவசரமான எடுத்துக்காட்டுகளால் அபிலாஷ் எழுதி இருக்கிறார். தமிழின் மிகச் சிறந்த நடிகர் ரஜினி. அதீத நடிப்பு கொடிகட்டிப் பறந்த காலத்தில் எது தேவையான நடிப்பு என்பதை உணர்ந்த ஒரே நடிகர். அதேபோல் எப்போது அதீத நடிப்பு தேவை என்பதையும் உணர்ந்தவர் அவர். நாடகீய நடிப்புக்கும் யதார்த்த நடிப்புக்கும் இடையே தேவையான நேரத்தில் தேவைக்கு மட்டும் சென்றுவந்தவர் ரஜினி. இப்படி நடிப்பதன்மூலம் ஒருவர் சூப்பர் ஸ்டார் ஆகமுடியும். நல்ல நடிகர் என்ற பெயரைப் பெறமுடியாது என்பது தமிழ்நாட்டின் சாபம். ரஜினிக்கு அதுதான் நேர்ந்திருக்கிறது #குமுதம்."

Comments