ரசிகன் - வீழ்ச்சியைப் பற்றின நாவல் - குலசேகரன் பாண்டியன்

ஆர். அபிலாஷ் எழுதிய ரசிகன் என்கிற நாவலை நடுவில் வேறெதையும் படிக்காமல் சமீபத்தில் வாசித்தேன். எனக்கே ஆச்சரியம். நாவல் சுவாரசியமாயிருந்தது. ஆனால் எல்லாவற்றையுமே கொஞ்சம் தாண்டிவிட்டால் மீதியை கடப்பது கடினமில்லை.
  பள்ளி மாணவனின், வளர்ந்த பின் புலானாய்வு பத்திரிகையாளனின் தன்னிலையில் நாவல் சொல்லப்படுகிறது. தேசிய ஊழலில் தொடர்புள்ள பெண் தலைவரின் பாலியல் பேச்சை வெளிப்படுத்துவதால் அவன் தலைமறைவானவன். இப்போதும் முன்பு பள்ளி பருவத்திலும் நண்பனாயிருக்கும் சாதிக் என்பவனை பற்றிதான் இந்த நாவல். ஏனோ தன்னைப்பற்றிய எழுத்தாயில்லை. சாதிக் அறிவுஜீவி, பத்திரிகையாளன்,  கம்யூனிஸ்ட், இலக்கியவாதி,  விமர்சகன் , பெண்கள் விரும்புக்கூடியவன், வினோதன், அன்னியன் மெர்சோ போல் அபத்தமாக இயங்குவன் என எல்லாமே.  பின்னால் அவன் ரஜினி ரசிகர் மன்றத்தி்ன் பெரிய தலைவன்.
அவன் எப்படி தீவீர ரசிகனான் என்பதை நாவல் முட்டி உடைக்காமல் பெரும்பாலும் வாசிப்பின் யூகத்துக்கே விடுகிறது. இது விலகல் எழுத்துமுறையாயிருக்கிறது. மற்றையபாணி இதை விளங்கிக்கொள்ளவே முயலும்.
மேலும் நம்பகத்தன்மை எல்லாவற்றுக்கும் அடிப்படையானது. அதுவுமில்லாமல் கதைசொல்லி கதைக்காகவே ஒட்டுண்ணியாயிருக்கிறான். உம்மாவும் பர்வீனும் நாலு நாள் பட்டினி கிடந்தாலும் இயங்காமல்,  போய் மூட்டை கூட தூக்க மாட்டென்கிறான். வேண்டுன்றே தன்னை முட்டாளாக காட்டுகிறான். பிறகு பல பக்கங்களுக்கு அரசியல் இலக்கிய உரையாடல்களை வைக்கிறான். வேண்டுமென்றே சினிமாவில் போல் ரத்த அடிபட்டாலும் உடனே எழுந்துகொள்கிறார்கள்.

நேரடியான ஒரு வீழ்ச்சியை ஆயிரம் விதமாக வாசகன் அர்த்தம்கொண்டாலும் பிரதி என்னவாக புரிந்துகொள்கிறதென்பதே முக்கியம்.

Comments