போரும் வாழ்வும் வாசிப்பு

வணக்கம் Abilash,

தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

நான் தங்களிடம் கடந்த முறை உரையாடும் போது கூறியதைப் போல் போரும் அமைதியும் வாசிக்க ஆரம்பித்து சற்று ஏறக்குறைய 80 பக்கங்கள் கடந்து விட்டேன். ஆசிரியர் ஒவ்வொரு அத்தியாயயத்திலும் பல வகை மனிதர்களை அறிமுக படுத்துகிறார் ஆனால் அம்மனிதர்களின் பெயர்கள் அந்த அந்த அத்தியாயத்தை கடந்த பின் மறந்து விடுகிறது. இப்படி மனிதர்களை நினைவு படுத்தி தொகுக்க முடியாததால் ஆசிரியரின் கூற்றை முழுதாக உள்வாங்க இயலவில்லை என்று தோன்றுகிறது. இது நார்மல் தானா? இன்னும் சில அத்தியாயங்கள் கடந்த பின் சரியாகி விடுமா? அல்லது என் வாசிப்பில் எதாவது திருத்தம் செய்ய வேண்டுமா?

குறிப்பு :
நான் தினமும் ஒரு அத்தியாயம் முதல் இரண்டு அத்தியாயம் வரை அலுவலகம் முடிந்து இரவு 11 மணி வாக்கில் படித்து வருகிறேன்.
அன்புடன்
ராஜா வெங்கடேஷ்

அன்புள்ள ராஜா
பெயர் மறப்பதில் சிக்கலில்லை. முக்கியமான நான்கு பாத்திரங்களை நினைவில் இருத்திக் கொண்டால் போதும். போரும் வாழ்வும் படிப்பது ஒரு புது ஊருக்குப் போய் வாழ்வது போல். உங்கள் மன அமைப்பையே மாற்றி அமைக்கும் அனுபவமாய் அது அமையும். என்னுடைய வேண்டுகோள் ஒன்று தான். பிளாகிலோ முகநூலிலோ வாரம் ஒருமுறை இந்நாவல் பற்றி ஒரு குறிப்பு எழுதுங்கள். அல்லது மெஸஞ்சரில் இது போல் கருத்துக்களாய் கேள்விகளாய் என்னிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். அந்நாவல் அனுபவத்தை தொகுத்துக் கொள்ள இது நிச்சயம் உதவும். வாழ்த்துக்கள்!

Comments

போரும் அமைதியும் மின்னூலாக கிடைக்கிறதா அண்ணா...
கிடைக்கிறது. ஆனால் ஆங்கிலத்தில். தமிழில் சொக்கலிங்கத்தின் மொழியாக்கம் சிறப்பானது. அது மின்னூலாக இல்லை
நான் சமீபமாக இப்படி குறிப்பெடுத்து வாசிக்கத் தொடங்கியிருக்கிறேன். நல்ல அனுபவத்தை ஏற்படுத்துகிறது.