ஆளுநர் எனும் கங்காணி – திருமாவேலன்

Image result for vidyasagar governor + modi
”ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஓர் ஆளுநர் இருக்க வேண்டும் என்று சொல்லும் அரசியலமைப்புச் சட்டம், அந்த ஆளுநர் அரசியலமைப்புச் சட்டப்படி இயங்க வேண்டும் என்று சொல்கிறது. அ.தி.மு.க அமைப்பு சட்டப்படி இயங்குபவரை எப்படி அரசியலமைப்புச் சட்டப்படி இயங்குபவராக சொல்ல முடியும்?

மத்தியில் ஆளும் கட்சிக்குக் கங்காணி வேலை பார்க்கும் ஆட்களாகத் தான் ஆளுநர்கள் இருந்துள்ளார்கள். அது காங்கிரஸாக இருந்தாலும், பா.ஜ.க-வாக இருந்தாலும் வேறுபாடில்லை. கவர்னர் ஜெனரல்கள் ஆண்ட பிரிட்டிஷ் காலத்தில், தங்களது உத்தரவுகளைச் செயல்படுத்த மாகாணங்களில் கவர்னர்களை வைத்திருந்தார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை சுதந்திர இந்தியாவில் அமைத்த பிறகும் ஆளுநர்கள் எதற்கு? எடுத்திருக்க வேண்டும். ஆனால், அதே காரியத்தை தொடர்ந்து செய்வதற்கு இருக்கட்டும் என்று நேரு நினைத்தார். அதை அம்பேத்கரும் ஏற்றுக் கொண்டது தான் காலக்கொடுமை.”
(”மைனாரிட்டியா … பினாமியா?, திருமாவேலன், ஆனந்த விகடன், 6-9-17”)

Comments