இன்னும் எத்தனை அனிதாக்கள் நமக்கு வேண்டும்?

பலரும் அனிதாவின் மரணத்தை உள்ளார விரும்புவதை நான் கவனிக்கிறேன். நமக்கு அரசியல் பதாகையாக மனித உயிர்கள் தேவைப்படுகின்றன. அதை உயிர்க்கொடை என்கிறோம். ஏன் தலைவர்கள் எப்போதும் உயிர்க்கொடை செய்வதில்லை என யோசித்திருக்கிறோமா? இங்கு உயிர்க்கொடை பற்றி பேசுபவர்களில் எத்தனை பேர் இந்த நொடி நீட்டுக்காக உயிர் விட தயாராக இருக்கிறீர்கள்? இன்னொருவர் அதை செய்ய வேண்டும் என ஏன் கோருகிறீர்கள்?
அரசியலுக்காக உயிர் விடுவதை கொண்டாடும் நமக்கும் கெடா வெட்டி சாமி கும்பிடும் எளிய மக்களுக்கும் என்ன வித்தியாசம்? அங்கே கடவுள் என்றால் இங்கே லட்சியம். அவ்வளவு தானே?
நீங்கள் இதை கொண்டாட கொண்டாட, இதை உயிர்த்தியாகம் என மகத்துவப் படுத்த படுத்த, மேலும் பல அனிதாக்கள் எதிர்காலத்தில் உயிர்விட தூண்டப்படுவார்கள். ஒரு நாகரிக சமூகம் இதை ஒரு போதும் செய்யாது!

Comments