கூகுளுக்கே வெளிச்சம்!


என் பிளாகில் பதிவுகளை தேட வாசகர்கள் பயன்படுத்தும் கீவெர்ட்ஸ் என்னென்ன என அடிக்கடி பார்ப்பேன். விசித்திரமாய் ஏதாவது ஒன்று தட்டுப்படும். இன்று அதிர்ச்சியாய் ஒன்றை பார்த்தேன்: “அம்மா பீ” என உள்ளிட்டு ஒருவர் தேடி என் பிளாகுக்கு வந்திருக்கிறார். நான் அந்த தலைப்பில் ஒன்றும் எழுதியிருக்கவில்லை என்றாலும்.
 அவர் மனதில் அப்படி என்ன தான் இருந்திருக்கும். ”அம்மா” என்றது ஜெயலலிதாவையா? அல்லது தன் சொந்த அம்மாவையா? அம்மாவின் மலம் பற்றி ஏன் ஒருவரது மனம் சஞ்சலப்பட வேண்டும்? அதனால் ஏன் அலைகழிக்கப்பட வேண்டும்? அச்சொற்களை முத்தமிட்டு அவர் பாலியல் கிளர்ச்சி அடைகிறாரா?

எவ்வளவு ஆராய்ந்தாலும், எழுதிக் குவித்தாலும் மனிதர்களின் மனதின் ஆழத்தில் என்னென்ன அடியொழுக்குகள் குறுக்குமறுக்காய் பாய்கின்றன என நம்மால் கணிக்கவே முடியாது. எந்த உளவியலாளனையும் விட மனித மனத்தை அனுதினம் நிர்வாணமாய் பார்ப்பது கூகிள் மட்டுமே! அது நம் காலத்தின் கடவுளின் கண்.

பாருங்கள், இவர் என்ன தான் தேடியிருக்கிறார் என அறிய அதே கீவெர்ட்ஸை கூகிள் செய்தேன். நேரடியாய் தமிழ் பாலியல் கதை தளங்களுக்கு அது என்னை கூப்பிட்டு சென்றது. கூகிளுக்கு நம் மனதின் அலைகள் பற்றி சந்தேகமே இல்லை. 

Comments