தீப்தி நேவல் கவிதைகள் - 8

Image result for deepti naval

(The Silent Scream தொகுப்பில் இருந்து …)

9.   நாற்காலியில் கட்டப்பட்டு
ஏங்க! கொஞ்சம் கேளுங்க … அவிழ்த்து விடுறீங்களா?
இந்த முடிச்சுகளை அவிழ்த்து விடுங்களேன், ப்ளீஸ் … சிஸ்டர், போகாதீங்க!
வாயை மூடு!
அவிழ்த்து விடுங்களேன் ப்ளீஸ்! என்னை விடுங்க! என்னை காயப்படுத்துறாங்க!
ச்சூ சொன்னேன்ல! வாயை மூடு!
என் காதுகளை பிய்ச்சு எடுக்குறாங்க!
பாருங்க! என் காதுகளை பிய்ச்சு எடுக்குறாங்க!
யாரும் அப்பிடி பண்ணல … உட்காரு!
உன் கம்மல்களை கழற்றுறாங்க …

இல்லை! என் காது! என் காது! பாருங்க …
உட்காரு! இல்ல மூஞ்சிய பேத்துருவேன்!
அதோ … இப்போ … நல்ல பொண்ணா இரு!
….
சிஸ்டர்!
என்ன…
என் காதுகளை நான் தந்துட்டா,

என்னை விட்டிருவாங்களா சொல்லுங்க?

Comments