தீப்தி நேவல் கவிதைகள் - 6

Image result for deepti naval

   7)  கொந்தளிப்பு – I

(பம்பாய் கலவரங்கள் – டிசம்பர் 6, 1992)
படுக்கையில் இருந்து முன்னறைக்கு, படுக்கைக்கு
தயக்கமாய் அலைகிறேன்
அவ்வப்போது, மின்தூக்கி நகர்கிறது, ஆனால் யாரும் வெளியேறுவதில்லை,

நாளிதழை வைத்து விட்டு காபி கோப்பைக்காக கைநீட்டுகிறேன்
காலையில் இருந்து எனது ஏழாவது கோப்பை –

டிவியில் சேனல்களை மாற்றுகிறேன்
உயிரும் துடிப்புமாய் உள்ள ஒன்றே ஒன்று

பால்கனிக்கு செல்கிறேன், சாலைக்கு அப்பால் வெறிக்கிறேன்


ஒரு மஞ்சள் நிலா வெற்று மரத்தில் இருந்து தன்னை கழற்றிக் கொள்கிறது
டிஷ் ஆண்டெனாவுக்கு மேல் நகர்கிறது
ஜன்னலுக்கு வெளியே ஆகாயம் சாம்பலாகிறது
அது மீண்டும் வருகிறது, நடுங்கச் செய்யும் மாலை
எனக்குள் பொறியில் மாட்டியபடி, அமர்ந்து

ஒற்றை மயிரிழையை இழுக்கிறேன் …

Comments

GG KRISHNAN said…
ஒரு கலவரம் குறித்த தகவலை கேட்ட பின்னர் ஒரு பெண்ணின் குறிப்பாக ஒரு பெண்ணின் மனநிலை என்னவெல்லாம் சிந்திக்கும் என்பதை மௌனமான ஒரு கொந்தளிப்பாக சொன்னது மிகவும் நன்றாகயிருந்தது இதுவரைக்கும் இப்படியான கவிஞரை தோழி தீப்தியை வாசிக்காமலிருந்தது வருத்தம்.