தீப்தி நேவல் கவிதைகள் - 5

1Image result for deepti naval

    6) நான் உன் கைகளில் மிதக்கிறேன்

நான் உன் கைகளில் மிதக்கிறேன்
சிந்திக்காதிருக்க முயல்கிறேன்

நீ சலனமற்று இருக்கிறாய்
என் சுயத்தை பற்றியபடி


நம்மிடையே ஒரு மெழுகுவர்த்தியும்
அப்பால் இவ்வுலகமும் …

நீ என்னுடன் இருப்பாய்
எப்போதும் இருப்பாய்
ஒளி மறையும் போது
ஏன் இப்படி … ஏன் இப்போதும்

யாருக்காகவாவது காத்திருக்கிறேன்?

Comments