தீப்தி நேவல் கவிதைகள் (4)

Image result for deepti naval

5.   சேய்க்கை வெதுவெதுப்பாய் வைத்திருப்பதாய் நீ சொன்னாய்

… அதன் பிறகு ஒரு வாடகைக்கார் கூட நிற்கவில்லை
சேய்க்கை* வெதுவெதுப்பாய் வைத்திருப்பதாய் நீ சொன்னாய்
மிக இதமாய் மழை தூவியது
மூன்றாவது அவென்யுவில் நடந்தேன்
வேகமாய் பரவசமாய்!

… அதன் பிறகு ஒரு வாடகைக்கார் கூட நிற்கவில்லை

57வது தெருவில் இருந்து 75வது வரையில்
பதினெட்டு வீட்டுத்தொகுதிகள், அங்கு
வளைவில் ஒரு தொலைபேசிச் சாவடியில் இருந்து
உன் எண்ணிற்கு அழைத்தேன்

நான் வந்து கொண்டிருக்கிறேன், அத்துடன் மழை …
அது எவ்வளவு சுகம்
எனச் சொல்ல மட்டுமே!
நண்பா,
எங்கிருக்கிறாயோ அங்கிருந்து
இறங்கி
என்னை நோக்கி நடந்து வர மாட்டாயா …·         செய்க் – அரிசியில் இருந்து உருவாக்கப்படும் ஜப்பானிய மது

Comments