தீப்தி நேவல் கவிதைகள் (2)   Image result for deepti naval

1. என் மௌனத்தை பகிர்ந்திட

அனுமதித்திடு
சிலநேரம்
உன்னை அழைக்க
உன் எண்ணை சுழற்றி …
ஒன்றும் சொல்லாதிருக்க
என் மௌனத்தை
உன்னுடன் பகிர்ந்திட


2.   மயில்கள் குறுக்கிடும் பகுதி
அதி அட்டகாசமாய் அவை நகர்ந்தன
மயில்களை போலவேயன்றி
கூட்டமாய்
அற்புத ஒளியில் மிதந்தபடி!

தட்டையாய் பாதங்கள் பதித்து
தென்றலால் இழுத்து செல்லப்பட்டு
கழுத்தை மேனோக்கி வளைத்துப் பார்த்த விதம்

ஒளிப்பெருக்கில் பின்னெறிந்து
மஞ்சள் கடுகு வயலின் பின்னணியில்
இறகுகள் மெல்ல நடுங்க
தம் நீலங்களையும், பச்சைகளையும் அவை பரப்பின

காரை நிறுத்தினேன்
நம்ப முடியாது நோக்கினேன்
என்னவொரு கம்பீரம்!

சாலையை கடக்கின்றன மயில்கள்…

பி.கு: Black Wind தொகுப்பில் இருந்து…

Comments