Saturday, September 30, 2017

யுத்தத்துக்காக ஆயுதமா ஆயுதத்துக்காக யுத்தமா? (2)

Image result for kane and abel murder


இனி யுத்தத்துக்கு வருவோம்.
உலகின் முதல் கொலை எப்படி நடந்திருக்கும்? ஒரு வலுவான எதிரியை ஒருவன் கட்டையால் அடித்தோ கல்லால் மண்டையை பிளந்தோ, அல்லது கத்தி அல்லது ஈட்டி கண்டு பிடிக்கப்பட்ட பிறகென்றால் குத்தியோ கொன்றிருக்கலாம். ஆனால் இந்த ஆயுதங்கள் எதுவுமே இல்லை. எந்த ஆயுதங்களுமே சாத்தியப்படாத இடத்தில் அவன் வசிக்கிறான். அவன் கொல்ல வேண்டிய ஆள் அவனை விட வலுவானவர். பக்கத்தில் போய் கழுத்தை நெரித்து கொல்ல முடியாது. அப்படி எனில் கொலையே நடந்திருக்காது.

யுத்தத்துக்காக ஆயுதமா ஆயுதத்துக்காக யுத்தமா? (1)

Image result for crowd tamil theatre
இது ஒரு கோழியா முட்டையா என்பது போன்ற சிக்கல் என உங்களுக்கு தோன்றலாம். ஆனாலும் இக்கேள்விக்கு என்னிடம் தெளிவான விடை ஒன்று உள்ளது. மேலும் இக்கேள்வி வெகுசுவாரஸ்யமானது என்றும் எனக்குத் தோன்றுகிறது.
மனிதனின் தேவைகள் ஒரு பண்டத்தை உற்பத்தி பண்ணத் தூண்டுகிறதா அல்லது நேர்மாறா? சமீபத்தில் ஒரு சமூகவியல் வகுப்பில் ஒரு மாணவி மார்க்ஸிய கோட்பாடு பற்றி பேசும் போது இவ்விசயத்தை குறிப்பிட்டாள். தேவையே பொருட்களின் உற்பத்தியை நேரடியாய் தீர்மானிக்கிறது என்றாள். நான் அவளிடம் கேட்டேன், “ஒரு அழகிய சுரிதார் பார்த்ததும், ஒரு புது போன் சந்தையில் வந்ததும் உங்களுக்கு அதை வாங்கத் தோன்றுகிறது. அங்கே தேவையா அல்லது அப்பொருள் நமக்குள் தூண்டும் ஆசையா நம்மை வாங்க வைக்கிறது? அதே போல ஒரு புதுப்படம் வெளியாகி அதைப் பற்றி மீடியாவில் பரபரப்பாய் பேசினால் போய் பார்க்கத் தோன்றுகிறது. நாம் பார்க்க ஆசைப்பட்டதனால் அப்படம் வெளியானதா அல்லது அப்படம் வெளியானதால் நமக்கு பார்க்க ஆசை தோன்றியதா?

ஹெச்.ஜி ரசூல் படைப்புலகம் பற்றி ஒரு கூட்டம்


Friday, September 29, 2017

ஒரு கடிதம்

வணக்கம் Abilash,

நான் சமீபத்தில் தான் தங்களை பின் தொடர ஆரம்பித்து, படிபடியாக தங்கள் தளத்தில் உள்ள கட்டுரைகளை வாசிக்க ஆரம்பித்து உள்ளேன்.

நான் பின் தொடரும் இளம் தமிழ் எழுத்தாளர்களில் உங்களின் கட்டுரைகளும், அவற்றின் நுட்பமும் என்னை மிகவும் வியக்க வைத்து தற்போது தங்களின் பழைய கட்டுரைகளை தேடி தேடி படித்து வருகிறேன். இதை சற்றும் முகஸ்துதிக்காக கூறவில்லை.

நான் இளம் தமிழ் எழுத்தாளர்களின் புத்தகங்கள் அவ்வளவாக படித்ததில்லை.

தங்களுடைய பரிச்சயம் எனக்கு இளம் எழுத்தாளர்களு டன் ஆன திறப்பை ஏற்படுத்தி தரும் என்று நம்புகிறேன்.

தங்களுக்கு என்னுடன் உரையாடுவதில் எந்த ஒரு இடையூறும் இல்லையெனில், உரையாடு க
- அன்புடன்
Rajavenkates Rajamanickam

Wednesday, September 27, 2017

Stalking: பெண்ணுடலின் சிக்கல் (2)


 Image result for stalking

பாலியல் பெண்களின் உடல்மொழியின் லிபி. ஆனால் உடலுறவு விழைவு இதில் பெரும்பாலும் இருப்பதில்லை.
 இந்த முரண் ஆண்களுக்கு விளங்குவதில்லை. உதாரணமாய், ஒரு வைபவத்தின் போது, வீட்டில் விருந்தில், கோயில் பிரகாரத்து வரிசையில் பட்டுப்புடவை சரசரக்க நிலவிளக்கு போல் ஜொலிக்கும் ஒரு பெண் பல ஆண்கள் கவனத்தை ஈர்க்கலாம். அவளது நகர்வும் சைகைகளும் கண்களின் பொலிவும் ஆண்களுக்கான அழைப்பை கொண்டிருப்பதாய் தோற்றம் காட்டலாம். ஆனால் உண்மையில் அப்பெண்ணுக்கு அப்போது பாலுறவு எண்ணமே இராது. அதேநேரம் பாலுணர்வைத் தூண்டும் உடலை ஒரு முக்கியமான மனுஷியாய் தன்னை அவ்விடத்தில் காட்டிக் கொள்ள அவள் பயன்படுத்துவாள். இதைப் பெண்கள் மிக மிக அநிச்சையாய் செய்கிறார்கள். ஐம்பது வயதுப் பெண் கூட தன்னை அலங்கரித்து பொற்சிலை போல் காட்டிக் கொள்ள எத்தனிப்பது இதனால் தான்.
ஒரு பெண் பாலுணர்வைத் தூண்டும்படியாய் தன்னை காட்டிக் கொள்ளும் போது பாலியல் கிளர்ச்சியை ஆணிடம் ஏற்படுத்துவது அவளது நோக்கம் அல்ல. (நூறு ஆண்கள் உள்ள கூட்டத்தில் ஒரு பெண் அப்படி செய்வது எவ்வளவு ஆபத்தானது! எந்த பெண்ணும் தன்னை பார்க்கிற ஆண்கள் எல்லாம் தன்னிடம் வர வேண்டும் என விரும்ப மாட்டாள்.)

Stalking - பெண்ணுடலின் சிக்கல் (1)

Image result for women in temple
ஒரு பெண் தன்னை, தன் உடலை, அழகாய், கவர்ச்சியாய், மனதை கொக்கி போட்டு இழுக்கும்படியாய், காட்டும் போது அதன் நோக்கம் என்ன? ஆணை கவர்வது என இன்று சுலபமாய் நாம் சொல்லி விட முடியாது. கணிசமான பெண்கள் அதை ஏற்க மாட்டார்கள். தம்மை வெளிப்படுத்துவது, தன்னம்பிக்கையுடன் தன்னை கட்டமைப்பது, தனக்காகவே தன்னை அலங்கரிப்பது, சுதந்திரமாய் இருப்பது என பல கோணங்களில் பெண்கள் தமது உடல் வசீகரத்தை அர்த்தப்படுத்துவார்கள். ஆனால் இங்கு ஒரு முரண் உள்ளது: தன்னை அலங்கரித்து அழகாய் காட்டிக் கொள்வதோ தனது உடல் வடிவை, நெளிவை, நளினத்தை, தோலின் மிளிர்வை புலப்படுத்தி தன்னை கவர்ச்சியாய் காட்டுவதோ ஒருவித காட்சிப்படுத்தல் தானே? அதாவது இன்னொருவர் காண அன்றி நாம் ஏன் நம்மை ஒரு குறிப்பிட்ட விதமாய் காட்டிக் கொள்கிறோம்? இது சரி என்றால் ஆண் பார்ப்பதற்கு அன்றி (லெஸ்பியன் எனில் மற்றொரு பெண் கவனிப்பதற்கு அன்றி) வேறு எதற்காய் பெண்ணுடல் காட்டப்படுகிறது?

இதையும் ஏற்றுக் கொண்டோம் என்றால் “அழகாய் தெரியும்” ஒரு பெண்ணை ஒரு ஆண் இச்சையுடன் ”பார்க்கலாமா”? “ரசிக்கலாமா?” பெரும்பாலான பெண்கள் ஆண்கள் தம்மை உற்றுப் பார்த்தால் எரிச்சலும் அருவருப்பும் அடைவார்கள். இது தான் நான் சொல்ல வரும் பெண்ணுடலின் முரண்போலி (paradox). பெண்கள் தம்மை ஆண்கள் உடல்ரீதியாய் ரசிப்பதையும் விரும்புகிறார்கள். அதே நேரம் நேரடியாய் ரசிப்பதில் உறுத்தலும் அருவருப்பும் கொள்கிறார்கள். இதைப் பற்றி நேரடியாய் அல்ல எனிலும் பிராயிட் பேசியிருக்கிறார்.
உடலுறவின் போது எதிர்ப்புணர்வு சுகத்தை அதிகப்படுத்துகிறது என்கிறது. ஆடை நீக்கப்படும் போது தன்னிச்சையாய் அதை மறுத்து உடலை கைகளால் மறைக்கும் அல்லது ஆடையை இறுகப் பிடித்துக் கொள்ளும் பெண் அந்த முரண்-எதிர் நிலையின் போது உச்சபட்ச களிப்பை, உன்மத்த மகிழ்ச்சியை, கிளர்ச்சியை பெறுவதாய் பிராயிட் சொல்கிறார்.
ஆனால் பெரும்பாலான சமயங்களில் ஒரு பெண் தன்னை அழகாய் காட்டிக் கொள்வது பாலியல் நோக்கத்தில் அல்ல. இங்கு தான் நாம் பிராயிடிடம் இருந்து விலகி யோசிக்க வேண்டும். பாலியல் ஈர்ப்பு நம்மிடம் எப்போதும் ஒரு வாசனை போல் நீடிக்கிறது. ஆனால் பாலியல் நோக்கம் எப்போதும் இருப்பதில்லை.
பெண்கள் தமது சுயத்தை உடல் மூலமாய் வெளிப்படுத்துகிறார்கள். பெண்களுக்கு உடல் ஆதி மொழியாக, முதன்மை மொழியாக உள்ளது. அதனாலே பெண்கள் மத்தியில் கைகளைப் பற்றுவது, தோளைத் தழுவுவது, கூந்தலை வருடுவது, தொட்டுப் பேசுவது மிக இயல்பாக உள்ளது. அதே போன்று, யார் பேச்சையாவது கவனிக்கையில் அவர்கள் தம் கூந்தலை சரிசெய்தபடி, காலாட்டியபடி, நகங்களை நீவியபடி, முகத்தை, முழங்கையை தொட்டபடி இருப்பார்கள். ஆண்களோ தமக்கும் உடலுக்கும் சம்மந்தமே இல்லை எனும்படி இருப்பார்கள்.
இதனாலே உடல்ரீதியாய் சமூகம் தன்னை எப்படிப் பார்க்கிறது என்பதில் பெண்கள் அதீத கவனம் கொள்வார்கள். சில பெண்களிடம் உடல் பிரக்ஞை குறைவாக இருக்கலாம். ஆனால் தன் உடல் பற்றின சுய-எண்ணம் இல்லாத பெண்களே இல்லை எனலாம். பெண்களின் மனநிலை அவர்களின் உடலில் – பௌதிகமாகவே – வெளிப்படுவதை நான் அருகிருந்து கவனித்திருக்கிறேன். ஒருநாள் அவர்களின் கூந்தலும், தோலும், கண்களும் மிளிரும். இன்னொரு நாள் வறட்சியாய் இருப்பார்கள். ஒரு நாள் பூரிப்பாகவும் இன்னொரு நாள் உலர்ந்து சுருங்கியும் இருப்பார்கள். அவர்கள் அகம் என்பது புறத்தின் – உடலின் – நீட்சி மட்டுமே.
ஆக ஒரு பெண் தன்னை யார் எனக் காட்டிக் கொள்வது பிரதானமாய் உடலால் தான். இயல்பாகவே இதில் பாலியலும் கலந்து கொள்கிறது. ஒரு ஆன்மீகச் சொற்பொழிவு ஆற்றும் போதும், பாராளுமன்றத்தில் காரசாரமாய் விவாதிக்கும் போது பெண்ணிடம் அவளது பாலியல் உடல் தகதகத்தபடி இருக்கிறது. ஆனால் பால் இச்சை இருப்பதில்லை. இந்த நுணுக்கமான வேறுபாடு முக்கியம். இதை ஆண்கள் பெரும்பாலும் அறிவதில்லை. ஏனெனில் உயிரியல் சார்ந்து அவர்கள் தம்மை பாலியல் ஜொலிக்க உடலால் வெளிப்படுத்துவதில்லை. முரண்பாடுகள் மத்தியில் இயல்பாய், எளிதாய், சுலபமாய் சிந்திக்கவும், செயல்படவும் ஆண்களால் முடிவதில்லை. ராமாயணத்தில் சீதா ஏன் சிறைபட்ட நிலையில் அவ்வளவு பொறுமையாய் காத்திருக்கிறாள்? அவள் தனது கற்பின், விரதத்தின் சக்தியால் ராவணனை சாம்பலாக்கி இருக்க முடியும் என சொல்லப்படுகிறது. ஒரு பக்கம் ராமனுக்காய் ஏங்குகிறாள். ராவணனிடம் இருந்து விடுபட்டுப் போக தவிக்கிறாள். ஆனால் தானாகவே விடுபட்டுச் சென்றால் அது ராமனின் ஆண்மைக்கு இழுக்கு என பொறுக்கிறாள். வெறுப்பையும் ஏக்கத்தையும் அனுபவித்தபடியே, தன் அக உந்துதலுக்கு முற்றிலும் மாறாக அவளால் நீண்ட காலம் இருக்க முடிகிறது. ராமனால் மீட்கப்பட்டு, பின்னர் அவனாலே நெருப்பில் இறங்கி தன்னை நிரூபிக்க நிர்பந்திக்கப்படும் போதும் அவள் கொதிப்பதில்லை. நெருப்பின் ஊடாய் ஒரு தெய்வத்தை போல் வெளிவந்த பின்னரே அவள் பூமிக்குள் மறைகிறாள். ஏன் அதை முன்னரே செய்திருக்கலாமே? இது தான் பெண்ணின் அடிப்படையான உளவியல். சிவப்பு விளக்கின் போது பொறுமையாய் காப்பார்கள். பச்சை விளக்கின் போது வாகனங்கள் நெருக்கி ஒலி எழுப்ப ஒதுங்கி வழிவிடுவார்கள். ஆனால் அடுத்த முறை சிவப்பு விளக்கு எரியத் துவங்கும் போதே அவசரமாய் பாய்ந்து சென்று மறைவார்கள்.
 எதையும், கறுப்பு-வெள்ளையாக பார்க்கும், நேராக தர்க்கரீதியாய் புரிந்து கொள்ளும் ஆணுக்கு பெண்களின் இந்த தலைகீழ் லாஜிக் புரியாது. பிரச்சனை அது அல்ல. இதுவரையிலும் ஆண்களும் அப்படி தம் எதிர்பாலினத்தை புரிந்து கொள்வதற்கான முயற்சிகள் எடுத்ததில்லை. ஆனால் இன்று அதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளது.
 முன்பு எப்போதையும் விட பெண்கள் இந்த உலகை ஒரு வெல்லக்கட்டியை சுற்றி வரும் எறும்புகள் போய் மொய்க்கிறார்கள். எங்கள் பல்கலையில் மாணவர் சேர்க்கையின் போது பெண்களுக்கான cut-off ஆண்களை விட அதிகம். ஏனென்றால் ஆண்கள் குறைவாகவே மதிப்பெண் பெறுகிறார்கள். அவர்களால் பெண்களுடன் மோதி ஜெயிக்க முடிவதில்லை. ஒரே cut-off வைத்தால் பல்கலையில் ஆண்-பெண் சதவீதம் 20-80 என இருக்கும். ஆக, ஆண்களுக்கு என்றே ”இட-ஒதுக்கீடு” வைத்திருக்கிறார்கள். கல்வியில் மட்டுமல்ல வேலைத்தேர்விலும் மனிதவள அதிகாரிகள் பெண்களுக்கே முன்னிரிமை அளிக்கிறார்கள். ஆண்களை விட அவர்களால் திறமையாய் பல வேலைகளை ஒரே சமயம் செய்ய முடிகிறது. மேலான தொடர்பாடல் திறன் இருக்கிறது. பொறுப்பாய் இருக்கிறார்கள். மெல்ல மெல்ல எதிர்காலத்தில் உலகம் எனும் வெல்லக்கட்டியை முழுக்க பெண்களே கவர்ந்து விடுவார்கள். அப்போது ஆண்கள் தம்மை பெண்களுக்கு ஏற்ப தகவமைக்க நேரிடும்.
இப்போதே அதற்கான நெருக்கடி ஆண்களுக்கு ஆரம்பித்து விட்டது. தன்னிச்சையாய், சுதந்திரமாய் வாழ முயலும் ஒரு இளம் தாயின் கதையை உக்கிரமாய் பேச முயலும் “தரமணி” எப்படியான சர்ச்சைகளை எல்லாம் சந்திக்கிறது பாருங்கள்! பெண்களின் கொதிப்பு நிலை உயர்ந்து கொண்டே வருகிறது. பத்து வருடங்களுக்கு முன் இந்நிலை இல்லை என்பதை நான் உறுதியாக கூற முடியும். என் நண்பர் ஒரு புள்ளிவிபரம் சொன்னார். கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் விவாகரத்து ஏற்படுத்திய மனச்சோர்வால் பெண்களை விட அதிகமான எண்ணிக்கையில் ஆண்கள் தற்கொலை புரிந்திருக்கிறார்கள். இன்னொரு பக்கம், காதலர்களும் கணவர்களும் தம் துணைகளை கொடூரமாய் தாக்குவதும் கொல்லுவதும் கணிசமாய் அதிகரித்திருக்கிறது. சினிமாவில் பெண்களை கேலி செய்யும் பாடல்கள் முன்பு பிரசித்தம். இப்போதோ பெண்களை பழிக்கும் பாடல்கள்! ஏன்?
 இன்றைய பெண்களை எதிர்கொள்ள முடியாத நெருக்கடியில் ஆண்கள் வன்முறை மிக்கவர்களாய் மாறுகிறார்கள். இது பெண்களின் பாலுள்ள சிக்கல் அல்ல. அவர்களை புரிந்து கொள்ள இயலாமையின் சிக்கலே. நாம் காதலுக்கும் திருமணத்துக்கும் பிறகான வன்முறையை ஒதுக்கி விட்டு, இப்போதைக்கு தெரியாத ஒரு பெண்ணை ஒரு ஆண் அணுகுவதில் உள்ள அடிப்படையான சிக்கலுக்கு, அதனால் விளையும் stalking போன்ற அடுத்து குற்றங்களுக்கு வருவோம்.

(தொடரும்) 

தனிமனிதன் எனும் பிரமை (6)

Image result for monkey's tail

நமது உடல் நமது கட்டுப்பாட்டில் முழுக்க இருக்கிறது என்பது கூட ஒரு கற்பிதம் தானே என ஆதர்ஷிடம் கேட்டேன்.
 ஒரு காலத்தில் தலித் பெண்கள் மேலாடை அணியக் கூடாது என ஒடுக்குமுறை நிலவியது. இன்றும் ஆடைக் கட்டுப்பாடு, ஆடை ஒழுக்கம் சார்ந்து பல சர்ச்சைகள் நிலவுகின்றன. இங்கு என்ன உடை அணிய வேண்டும், உடலை எப்படி முன்னிறுத்த வேண்டும் என்பதில் கூட அடிப்படையான உரிமையே நமக்கு இல்லையே? (இது குறித்து பூக்கோ செய்துள்ள ஆய்வுகளை அறிவோம்.)
நம் உடல் நம் கட்டுப்பாட்டில் உள்ளதென்றால் ஏன் “கௌரவக் கொலைகள்” நடக்கின்றன? ஏன் சதா நாம் தாக்குப்படுவோம் எனும் அச்சத்துடன் பெண்கள் இருக்கிறார்கள்? ஏன் லாக் அப் சித்திரவதைகள், கொலைகள் நடக்கின்றன? நீங்கள் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு லுங்கியோ நைட்டியோ அணிந்து கொண்டு போக முடியுமா? அலுவலகத்தில் படுத்துக் கொண்டு வேலை செய்ய முடியுமா? திரையரங்கில் தேசிய கீதம் இசைக்கப்படும் போது நீங்கள் உட்கார்ந்திருக்க முடியுமா?

தனிமனிதன் எனும் பிரமை (5)

Image result for endhiran black sheep scene
Who is the black sheep?

என் மொழி எப்படி முழுக்க முழுக்க வாசகருடனான உரையாடலால், மோதலால், அவர்களை சென்று சேரும் எனது முனைப்பால் மாறியது, மாறுகிறது, எப்படி எனது எழுத்து முற்றிலும் நான் எதிர்பாராத விதங்களில் வாசகர்களால் புரிந்து கொள்ளப் படுகிறது, உணரப் படுகிறது என நான் எழுத்தாளனாய் மலர்ந்த காலத்தில் உணர்ந்து கொண்டேன்.
 எழுத்து என்னையே மீறிச் செல்லும் இடங்களை உணர்ந்தேன். எத்தனையோ பேர்களின் கருத்துக்கள் என் சிந்தனைக்கு செறிவூட்டுகின்றன. நான் யோசிப்பதும், எழுதுவதும் எந்தளவுக்கு என்னுடையவை எனும் ஐயம் இப்போது எனக்கு வலுவாக எழுகிறது. என் எழுத்தில் நான் மிக மிகக் குறைவாகவே “நானாக” இருக்கிறேன்.
 என் தரப்புகள், நம்பிக்கைகள், பிடிவாதமான அபிப்ராயங்கள், பிடிப்புகள் நிலைப்பதில்லை. நான் ஓடும் நதி போல் மாறிக் கொண்டே இருக்கிறேன். அப்படி என்றால் இந்நதியின் பரப்பில் தோன்றும் ஆயிரமாயிரம் அலைகளில் எந்த அலை நான்?

Monday, September 25, 2017

தனிமனிதன் எனும் பிரமை (4)

Image result for sewage workers

நான் அனுதினமும் இடஒதுக்கீட்டை கடுமையாய் எதிர்க்கும் மேற்தட்டு மாணவர்களிடம் உரையாடுகிறேன். அவர்கள் அப்படியே மேற்சொன்ன தனிமனித வாதத்தை பேசுகிறார்கள். மனிதனின் ஆதாரமான திறமையின் அடிப்படையிலே அவனுக்கான வாய்ப்புகள் அமைய வேண்டும் என்கிறார்கள். ஆனால் ஆதாரமான திறமை என ஒன்று இல்லை; அது கட்டமைக்கப்பட்டது என அவர்களுக்கு புரிவதில்லை.

தனிமனிதன் எனும் பிரமை (3)

Image result for ayn rand + fountainhead
நான் போன பதிவில் குறிப்பிட்ட ஆதர்ஷ் சமீபமாய் ஐயன் ரேண்டின் நூல்களை படித்து வருகிறார்.
 ரஷ்யாவில் பிறந்து அமெரிக்காவுக்கு புலம் பெயர்ந்து எழுத்தாளராய் அங்கு மலர்ந்த ஐயன் ரேண்ட் The Fountainhead மற்றும் Atlas Shrugged ஆகிய நாவல்களுக்காகவும், தனது தனிமனிதவாத கருத்துக்களுக்காகவும் இன்றும் பிரசித்தமாய் விளங்குபவர். அவர் தனிமனிதவாதத்தின் போர்க்கொடி என்பதால் பதின்பருவத்தினர் தொடர்ந்து அவரது நாவல்களின் பெரும் ரசிகர்களாக விளங்குகிறார்கள். இன்றும் எந்த கல்லூரிக்கு சென்றாலும் யாராவது அங்கு The Fountainhead படித்துக் கொண்டிருப்பார்கள்.

தனிமனிதன் எனும் பிரமை (2)

Image result for boys movie

கலைஞர்கள், படைப்பாளிகள், படைப்பு மனம் கொண்டவர்கள் ஒரு சிறுபான்மையினராக வாழ்க்கை முழுக்க நீடித்த பதின்பருவத்தில் வாழ்வார்கள். தொடர்ந்து “தன்னை” முன்வைக்க போராடிக் கொண்டிருப்பார்கள். பதின்வயதின் சிக்கல்களான வன்முறை, தீவிர போதைப் பழக்கம், கருத்து மோதல், சுய அடையாளத்தை சத்தமாய் அறிவிப்பது, பாலியல் பொறாமை மோதல்கள் ஆகியனவற்றை நாம் இலக்கிய குழுக்களில் இன்றும் காணலாம்.