Tuesday, August 1, 2017

புதியவர்கள்

பிரதிலிபி இணையதளம் புது எழுத்தாளர்களுக்கு வைத்த சிறுகதைப் போட்டியின் நடுவராக செயல்பட்டு எனக்குப் பிடித்த கதை ஒன்று தேர்ந்தெடுத்தேன். வணிக வடிவில் எழுதும் புது படைப்பாளிகளில் சிலரின் ஆழமான, கவித்துவமான, விளையாட்டுத்தனமான மொழி என்னைக் கவர்ந்தது. குறிப்பாக கவிஜி மற்றும் கனவுப்பிரியனுக்கு நல்ல எதிர்காலம் உண்டு என நம்புகிறேன்

இது அறிவிப்பு

'மர்ம தேசம்' போட்டி முடிவுகள்

இவை என் மதிப்பீடுகள்:

இரவு சூரியன் – கவிஜி

அழகிய மொழி. அற்புதமான கற்பனை. குறிப்பாய் புறாக்கள் மார்பை கொத்தும் இடம்! முடிவு மட்டுமே பிரச்சனை – செயற்கையாக உள்ளது.

வெள்ளைப் பொய்கள் – கனவுப்பிரியன்
சுவாரஸ்யமான விளையாட்டுத்தனமான மொழி. ஆனால் கதை சரியாக உருப்பெறவில்லை.

ஜெனியின் டைரி குறிப்புகள் 
கனவுப்பிரியனின் இக்கதையும் அழகாய் சுவாரஸ்யமாய் எழுதப்பட்டதே. ஆனால் முடிவு செயற்கையானது.


ஒரு பனி இரவில் –  ஆவுடையப்பன் சங்கரன்:
கச்சிதமான ஒரு வணிக திகில் கதை. ஆனால் இது ஒரு துப்பறியும் நாவலாக எழுதப்பட வேண்டியது எனத் தோன்றுகிறது. இந்த கதைக்களன் சிறுகதைக்கானது அல்ல.

1 comment:

Asokan Kuppusamy said...

நானும் மூன்று கதைகள் ”பொம்மை” ஒரு டைரியின் குழப்பம், கவலையோ கவலை” பதிவிட்டிருந்தேன். கருத்து சொல்லியிருந்தால் திருத்தி கொள்வதற்கு ஏதுவாய் இருந்திருக்கும்