Monday, July 31, 2017

போதையில் பல வகை

Image result for addiction

போன வாரம் இங்கே ஒரு கூட்டம் நடந்தது. இணைய (போர்னோகிரபி, சமூக வலைதளங்களின்) போதை பற்றி ஒருவர் விரிவாக பேசினார். ஏற்கனவே நாம் கேள்விப்பட்டது தான். இணையம் நமது நரம்பணுக்களின் சர்க்யூட்டை மாற்றி அமைக்கிறது. உடனடி கிளர்ச்சிக்காய் மனம் ஏங்கத் துவங்குகிறது. எதையும் ஊன்றி பொறுமையாய் கவனிக்க முடியாமல் மனம் சிதறுகிறது, தத்தளிக்கிறது, அலைபாய்கிறது. இது தான் இணைய போதை. இது நம்மில் கணிசமானோருக்கு மிதமான அளவில் உண்டு. நான் ரெண்டாயிரத்தின் துவக்கத்தில் சென்னைக்கு படிக்க வந்த போது ஜெயமோகன் என்னிடம் இணைய போதை பற்றி எச்சரித்தார்.

Sunday, July 30, 2017

தல்ஸ்தாயும் தஸ்தாவஸ்கியும்: யார் சிறந்த கலைஞன்?

Image result for tolstoy dostoevsky

அன்புள்ள அண்ணன்,

உங்களுடைய டால்ஸ்டாய் தாஸ்தாவஸ்கி கட்டுரையை முழுவதும் வாசித்தேன். இந்த கட்டுரைக்காக எத்தனைக் கடைகளில் தீராநதியை தேடி தேடி அலைந்தேன் தெரியுமா. ஏன் என்று தெரியவில்லை இத்தனைக் காலமும் இந்தக் கட்டுரையை நான் பார்க்காதவாறு ஏதோ ஒன்று என்னை தடுத்துக் கொண்டிருந்தது. நேற்று ஒரு ரம்மியமான ஒரு உணவர்வு தாஸ்தாவஸ்கியின் படைப்புகள் மீது ஏற்பட்டது. அது குறிப்பாக தாஸ்தாவஸ்கி என்னும் ஆளுமையின் மீதே ஏற்பட்டது என சொல்லலாம். அந்த ரம்யமான உணர்வு இதுதான்: தாஸ்தாவஸ்கி ஒரு கலைஞன். இதுவும் என்னை அதிகம் பாதித்தது. மேற்கத்திய இலக்கியத்தில் நாம் ஜாய்ஸ் ஐயும் ஹெம்மிங்க்வேயையும் கலைஞர்கள் என்று நாம் முன் யோசனை எதுவுமின்றி சொல்லிவிடுவோம். நேற்றைய முன்நாள் வரை இந்த குறிப்பிட்ட உணர்வு எனக்கு ஏற்பட்டதே கிடையாது. தாஸ்தாவஸ்கி ஒரு கலைஞன். அவன் ஒரு கலைஞன்

Friday, July 28, 2017

சுஜாதாவை ஏன் வாசிக்க வேண்டும்? ”கனவுத் தொழிற்சாலை” நாவலை முன்வைத்து

Image result for சுஜாதா
சுஜாதாவை ஒரு இலக்கிய வாசகன் தயக்கமின்றி நுணுகி வாசிக்க வேண்டும் என நம்புகிறேன். முக்கியமான காரணம் சுஜாதாவின் உயிரோட்டமும் விளையாட்டுத்தனமும் நிறைந்த மொழி. அவரது பெரும்பாலான கதைகளில் (லா.சா.ர போல) உக்கிரமான வாழ்க்கை சித்தரிப்புகள் ஒன்றுமில்லை. (மௌனி போல) மிக கவித்துவமான, (பாலகுமாரன், ஜெயமோகன், இமையம் போல) நாடகீயமான தருணங்களை அவர் எடுத்துக் கொள்வதில்லை (”நகரம்” போன்ற மிகச்சில கதைகளை தவிர்த்து). ஜெயமோகனின் ”ஜகன்மித்யை” போன்ற தத்துவார்த்த கனம் உள்ள கதைகளை அவர் எழுதியதில்லை. சுஜாதாவின் கதைகள் மிக மெல்லிய டாய்லெட் பேப்பர் போன்றவை. அக்கதைகளின் பலமே அவரது மொழி தான். மிக எளிய கருக்களை தனது அவதானிப்பு, புத்திசாலித்தனம், துடிப்பான மொழி கொண்டு அபூர்வமான கதைகள் ஆக்கி இருக்கிறார். இந்த மொழிக்காகத் தான் நாம் சுஜாதாவைப் படிக்கிறோம்.

உங்கள் ஜன்னலுக்கு வெளியே அந்த மரம் - பித்யுத் பூஸன் ஜேனா

Image result for bidyut bhusan jena

உங்கள் ஜன்னலுக்கு வெளியே அந்த மரம்
இலைகளை உதிர்க்க துவங்கி விட்டது.
அதைக் காண விருப்பமில்லையா,
திரையை விலக்கி,
ஜன்னல் கதவை சற்றே திறந்து?

Wednesday, July 26, 2017

தல்ஸ்தாயும் தஸ்தாவஸ்கியும்: கதறி அழுவதும் மயங்கி எழுவதும்


Image result for tolstoy dostoevskyதல்ஸ்தாய்க்கும் தஸ்தாவஸ்கிக்குமான வேறுபாடுகள் என்ன? ரஷ்ய இலக்கிய வாசகர்கள் அடிக்கடி இக்கேள்வியை கேட்டுக் கொள்வார்கள். இருவரில் யார் மேல் என்ற கேள்வி அடுத்து எழும். இது கிட்டத்தட்ட விஜய்-அஜித் ரசிகர்களின் மோதல் போலத் தான் (நான் தல்ஸ்தாயையும் தஸ்தாவஸ்கியையும் இவர்களுடன் ஒப்பிடவில்லை; ரசிகர்களின் விளையாட்டுத்தனமான மோதலை குறிக்க சொன்னேன்.) ஆனாலும் இரு எழுத்தாளர்களையும் துல்லியமாய் வரையறுக்கவும் புரிந்து கொள்ளவும் இக்கேள்விகள் முக்கியம் தான்.

Sunday, July 23, 2017

இமைப்பொழுதில் காலாவதி ஆகிப் போகிறோம்

Image result for bigg boss tamil
காலம் கற்பனை செய்ய முடியாத வேகத்தில் போகிறது. நான் பெங்களூர் வந்த பிறகான இரு மாதங்களில் ஊரில் எவ்வளவோ பரபரப்பான விசயங்கள் நடந்து விட்டன. குறிப்பாக பிக் பாஸ். பிக் பாஸ் ஏற்படுத்தும் சலசலப்புகள் கூட எனக்கு பேஸ்புக்கில் மேய்வதன் மூலம் மட்டுமே தெரிய வந்தது. அதனால் ஒரு அத்தியாயம் பார்த்தேன். ரொம்ப அலுப்பு. அதன் பிறகு தொடரவில்லை.

வீடு என்பது வீடு அல்ல

Image result for poetics of space

இப்போதெல்லாம் மாலை நான்கு மணிக்கு வேலை முடிந்த பின் நூலகம் சென்று விடுகிறேன். இந்த வாரம் முழுக்க நூலகத்திலே கூடுகட்டினேன். ஆங்கிலத்தில் ஒரு ஆய்வு நூலுக்கான ஆரம்ப கட்ட பணியில் இருக்கிறேன். வீடு, அறை ஆகிய உருவகங்கள் தமிழ் கவிதை மற்றும் கதைகளில் கடந்த முப்பதாண்டுகளில் எப்படி மாறி வந்துள்ளன, இம்மாற்றங்களின் சமூக, அரசியல் பின்னணி என்ன, உளவியல் என்ன என்பது ஆய்வுத் தலைப்பு.

Monday, July 17, 2017

டி.ஐ.ஜி ரூபாவும் சசிகலாவும் - செல்வந்தர்களை வழிபடுவதன் சிக்கல்

Image result for roopa ias + sasikala

சமீபத்தில் சசிகலாவை சிறைவைக்கப்பட்டுள்ள பரப்பன அக்ரஹார சிறையில் நடக்கும் ஊழல்களை டி.ஐ.ஜி ரூபா மீடியா முன்பு அம்பலப்படுத்த பெரும் சர்ச்சையானது. சிறை அதிகாரிகளுக்கு சசிகலா 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாகவும், சசிகலாவுக்கு நட்சத்திர சலுகைகள் வழங்கப்படுவதாகவும் கூறினார். சசிகலாவுக்கு என்று தனியாக வரவேற்பாளர் அறை, சமையலறை, ஏஸி வசதி கொண்ட இடம், அங்கு அவருக்கு சமைக்கவும் பணி செய்யும் வேலையாட்களாக சிறைக்கைதிகள், டிவி, மொபைல் போன் ஆகிய வசதிகள் தரப்பட்டுள்ளதாகவும், தினமும் வீட்டில் இருந்து கொண்டு வரப்படும் உணவு அவருக்கு வழங்கப்படுவதாகவும் ரூபா குற்றம் சாட்டினார். ரூபா இது குறித்து விசாரணை நடத்தும் போது பதிவு செய்த காணொளிகளை சிறை அதிகாரிகளே அழித்து விட்டதாகவும், சி.சி டிவி பதிவு உள்ளிட்ட ஆதாரங்களையும் அழித்து விட்டதாகவும் சாடினார்.