அம்பேத்கரும் மோடியும்

Image result for ambedkar modi

நேற்று என் வீட்டருகே ஒரு திடலில் ஒரு அரசியல் தட்டியை கண்டு திகைத்து நின்று விட்டேன். ஒரு பக்கம் அம்பேத்கர், இன்னொரு பக்கம் மோடி. விடுதலை சிறுத்தைகள் பா.ஜ.கவுடன் கூட்டம் நடத்துகிறார்களோ என குழம்பிப் போனேன். கவனித்தேன். அது பா.ஜ.க நடத்தும் தலித்துகளுக்கு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி. நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும் உள்ளூர் தலித் தலைவர்களுக்கோ உதவி பெறுபவர்களுக்கோ அம்பேத்கரையும் மோடியையும் இணைத்துப் பார்ப்பதில் சங்கடமில்லை. இது இப்படியே போனால் அடுத்த ஐந்தாண்டுகளில் பா.ஜ.க விடுதலை சிறுத்தைகளை முழுங்கி விடும் எனத் தோன்றுகிறது. தமிழகத்தில் தலித்துகளையே இந்துத்துவர் தம் பிரதான இலக்காக கருதுகிறார்கள். தலித்துகளில் அம்பேத்கரை கற்றுணராதவர்கள் எளிதில் இந்துத்துவ பிரச்சாரத்துக்கு அடிமையாகி விடுகிறார்கள். அதன் மூலம் சாதியமைப்பில் தாம் மேல்நிலையாக்கம் பெறுவதாய், ஏற்றுக் கொள்ளப்படுவதாய் அவர்களுக்கு மனப்பிராந்தி ஏற்படலாம். பா.ஜ.க அம்பேத்கரை ஒரு இந்துத்துவா பிம்பமாய் மறுகட்டமைக்கும் காலம் தொலைவில் இல்லை.

Comments