இன்னும் கடிதங்கள் இல்லை - பித்யுத் பூஸன் ஜேனா


 Image result for bidyut bhusan jena

இன்னும் கடிதங்கள் இல்லை!
தபால் பெட்டியில் அடைக்கலம் கொள்ளும் மௌனம்
இறந்த தேகத்தை எடுத்த பின்
ஒரு அறையை இறுக்கிப் பிடிக்கும் மௌனம்,
உலர்ந்த இலைகளின் மத்தியில்,
முன்னொரு காலத்தில் தெய்வம் இருந்த கற்களில்,
இடங்கொள்ளும் மௌனம்,
அலமாரியின் தீண்டப்படாத மூலையில் –
கலைக்கப்படாத தூசுப்படலத்தின் கீழ்
பாக்கி உள்ள மருந்து, மாத்திரை புட்டிகளில்
வாழும் மௌனம் –
ஒரு சிலந்தியின் கூடு.


(Muse India இதழில் வெளியான Still No Letters எனும் கவிதையின் முதல் பத்தியை மட்டும் தமிழாக்கி இருக்கிறேன். பித்யுத் ஒரு ஒரிய கவிஞர். ஆங்கிலத்திலும் எழுதக் கூடிய இவர் ஒரு ஆங்கிலப் பேராசிரியர்)

Comments

Ramani S said…
மௌனத்தின் அடர்த்தியை
உரக்கச் சொல்லிப் போகும் கவிதை
அருமையிலும் அருமை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்