Friday, May 26, 2017

ஈகையும் பொதுப்புத்தியும்


சமீபத்தில் ஒரு மின் சக்கர நாற்காலி வாங்கும் பொருட்டு நண்பர்களிடம் உதவி கோரி வந்தேன். இது குறித்து எழுதவும் செய்தேன். அப்போது ஒரு அறக்கட்டளை நடத்தும் நண்பரையும் நாடினேன். அவரது எதிர்வினை சுவாரஸ்யமாக இருந்தது: அவர் தயங்கினார்; உங்களுக்கு இவ்விசயத்தில் உதவினால் பிறர் கேள்வி கேட்பார்களே என்றார். எனக்கு அவரது கவலையின் காரணம் விளங்கியது. பரவாயில்லை என்றேன். வேண்டுமென்றால் கடனாக தருகிறேன் என்றார். அவர் நல்ல மனம் படைத்தவர். அதனால் கடன் தர முன்வருகிறார். ஆனால் ஊனமுற்றவருக்காக உபகரணம் வாங்க உதவுவதில் அந்த தயக்கம் எங்கிருந்து வருகிறது? இதை ஒரு குற்றமாக சமூகம் கருதும் என அவர் ஏன் அஞ்சுகிறார்?

Wednesday, May 24, 2017

இன்னும் கடிதங்கள் இல்லை - பித்யுத் பூஸன் ஜேனா


 Image result for bidyut bhusan jena

இன்னும் கடிதங்கள் இல்லை!
தபால் பெட்டியில் அடைக்கலம் கொள்ளும் மௌனம்
இறந்த தேகத்தை எடுத்த பின்
ஒரு அறையை இறுக்கிப் பிடிக்கும் மௌனம்,
உலர்ந்த இலைகளின் மத்தியில்,
முன்னொரு காலத்தில் தெய்வம் இருந்த கற்களில்,
இடங்கொள்ளும் மௌனம்,
அலமாரியின் தீண்டப்படாத மூலையில் –
கலைக்கப்படாத தூசுப்படலத்தின் கீழ்
பாக்கி உள்ள மருந்து, மாத்திரை புட்டிகளில்
வாழும் மௌனம் –
ஒரு சிலந்தியின் கூடு.


(Muse India இதழில் வெளியான Still No Letters எனும் கவிதையின் முதல் பத்தியை மட்டும் தமிழாக்கி இருக்கிறேன். பித்யுத் ஒரு ஒரிய கவிஞர். ஆங்கிலத்திலும் எழுதக் கூடிய இவர் ஒரு ஆங்கிலப் பேராசிரியர்)

உதவி கோருவதன் அகவிடுதலை


உதவி கோர மிகவும் தயக்கம் கொண்டவன் நான். பள்ளியில் படிக்கையில் (ரெண்டாம் வகுப்பு என நினைக்கிறேன்) இரண்டு கால்களிலும் காலிப்பர் அணிந்திருப்பேன். எனக்கு டாய்லட் போக வேண்டுமெனில் ஆயாக்கள் யாராவது தூக்கி செல்ல வேண்டும். எனக்கு அவர்களை அழைத்து சொல்ல மிகவும் சங்கடமாக இருக்கும். அடைக்கிக் கொள்வேன். ஒருநாள் அடக்க முடியாமல் கால்சட்டைக்குள் மலம் கழித்து விட்டேன். நாற்றம் அடிக்க சக மாணவர்கள் என்னை கேலி செய்தார்கள். விரைவில் வகுப்பில் செய்தி பரவி பிறகு ஆசிரியர் மூலம் ஆயாவை அழைத்து அவர் என்னை தூக்கி சென்று அலம்பி விட்டார். எனக்கு உடம்பு நடுக்கம் வீட்டுக்கு சென்ற பின்னும் நிற்கவில்லை.

Sunday, May 21, 2017

மொழித் திணிப்பு 2

இதுவரை இந்தி திணிப்பு பற்றி பேசினோம்.
இனி தமிழுக்கு வருவோம். ஐம்பதுகளுக்குப் பிறகு திராவிட கட்சிகள் தமிழ் தேசிய அலையை பரவலாக்கினார்கள். அதை அரசியல் வெற்றி சூத்திரமாக்கினார்கள். தமிழுணர்வை நம் ரத்தத்தில் கலந்தார்கள். ஆனால் தமிழ்ப்பற்று, தமிழார்வம் எத்தனை பேருக்கு இங்கு உண்டு? உண்மையை சொன்னால், வடக்கத்திய அரசு இந்தியை திணிப்பது போலத் தான் தமிழக அரசு தமிழை நம் மீது திணித்தது.

மொழித் திணிப்பு 1


இந்தியை ஒரே தேசிய (அரசாங்க) மொழியாக்கி அனைத்து மாநிலத்தவரும் கற்க செய்யலாமா எனும் விவாதம் நடந்து வருகிறது. இரு தரப்பு வாதங்களையும் பொறுமையாக கேட்டால் இது பண்பாடு vs நடைமுறை தேவைகளுக்கு இடையிலான மோதல் என புரியும். எது முக்கியம்? பண்பாடா நடைமுறையா? இந்தியை 50% மேல் இந்தியர்கள் பேசுகிறார்கள் என ஒரு வாதம். இல்லையில்லை, இந்தி பேசும் மாநிலங்களில் கூட பல வட்டார மொழிகளே பிரதானமாய் பேசப்படுகின்றன. இந்தி ஒரு பொது தொடர்பு சாதனம் மட்டுமே என இன்னொரு வாதம். தென்னிந்தியர்கள் இந்தி பேசி என்ன நடைமுறை பயன்? இது ஒரு வாதம். இல்லை இல்லை, இந்தி அறிந்தால் தான் தேசிய ஒருமைப்பாடு நிகழும் என பதில் வாதம்.

Thursday, May 11, 2017

மும்முறை தலாக் விவகாரத்தில் சட்டத்தின் எல்லை என்ன?


மேற்சொன்ன விசயம் பற்றி ஒரு சுவாரஸ்யமான தெளிவான கட்டுரை இன்றைய ஆங்கில ஹிந்துவில் வெளியாகி உள்ளது (Triple Talaq and the Constitution). தில்லியை சேர்ந்த வழக்கறிஞர் கௌதம் பாட்டியா எழுதியிருக்கிறார். உச்சநீதிமன்றம் இவ்வழக்கு விசாரணையை இன்று ஆரம்பிக்க இருக்கிறது. மோடி இவ்வழக்கு பற்றி கருத்து சொன்னது (இஸ்லாமிய சகோதரிகளின் உரிமையை பாதுகாக்க வேண்டும்) இஸ்லாமிய தனிப்பட்ட சட்டங்களுக்கு எதிரான பா.ஜ.க நிலைப்பாட்டை உறுதி செய்துள்ளது. சிறுபான்மையினருக்கு என்று தனிப்பட்ட உரிமைகள் இருக்கக் கூடாது, அனைத்தும் அனைவருக்கும் பொதுவாக இந்நாட்டில் இருக்க வேண்டும் எனும் பா.ஜ.க வாதத்தின் பின்னால் உள்ள துர்நோக்கம் இஸ்லாமியருக்கு அளவுக்கு அதிகமான சுதந்திரத்தையும் வாய்ப்புகளையும் காங்கிரஸின் முற்போக்கு ஆட்சி அளித்து விட்டது; அவர்களை நாங்கள் வழிக்கு கொண்டு வருவோம் எனும் சேதியை பெரும்பான்மை இந்துக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும். அதற்கு அவர்கள் இந்த மும்முறை தலாக் விவகாரத்தை பயன்படுத்துகிறார்கள். அதே சமயம் பா.ஜ.க ஆட்சி நடந்த மாநிலங்களில் நிகழ்த்தப்பட்ட கலவரங்களில் இஸ்லாமியர் கொல்லப்பட்டு ஒடுக்கப்பட்ட நிகழ்ச்சிகளை மூடி மறைத்து இஸ்லாமியர் ஒடுக்கப்பட்டோர் அல்ல அத்துமீறி வசதிகளை, சுதந்திரத்தை அனுபவிக்கும் தரப்பினர் எனும் பிம்பத்தையும் ஏற்படுத்த இவ்வழக்கு பா.ஜ.கவுக்கு உதவும். இஸ்லாமியர் பிற்போக்கானவர்கள் எனும் தோற்றத்தை ஏற்படுத்தவும் பயன்படும். எப்படி நோக்கினும் இந்துத்துவர்களுக்கு லாபம் அதிகம். இந்த அரசியல் சூழலில் சட்டம் இவ்வழக்கை எப்படி நோக்க முடியும் என கௌதம் விவாதிக்கிறார்.

Sunday, May 7, 2017

அஜ்வா – இடைநிலை நாவல்களில் ஒரு மைல்கல்

Image result for அஜ்வா நாவல்

சரவணன் சந்திரனின் ஒரு சிறப்பு என்னவெனில் அவர் எப்போதும் எழுதுவதற்கு ஒரு புதுமையான விசயத்தை எடுத்துக் கொள்வார். அது ஒரு இளைஞன் கீழ்த்தட்டில் இருந்து மெல்ல மெல்ல போராடி உயர்தட்டுக்கு வரும் கதையாக இருக்கலாம் (”ரோலக்ஸ் வாட்ச்”). அதை அவர் பாலகுமாரன் தாக்கம் இல்லாமல் எழுதுவார். எந்த லட்சியவாதமும், அறமும் இல்லாத ஒரு தலைமுறையில் வாழ்க்கைப் போட்டி மனிதனை எப்படி புரட்டிப் போடுகிறது, சமூகமாக்கல் அவனுக்கு எப்படி அவசியமாகிறது என பேசுவார். அவர் பேசும் சமகால, காஸ்மோபொலிட்டன் உலகம், அதன் நுண்ணுணர்வு தமிழ் இலக்கியத்திற்கு புதிது. அவரது சமீபத்தைய நாவலான ”அஜ்வாவில்” வாழ்க்கையில் பட்டும்படாமலும் வாழும், எதிலும் உணர்வுபூர்வமாய் ஒன்ற முடியாத மனிதர்களைப் பற்றி எழுதுகிறார். உண்மையில், இந்நாவலை போதை மருந்து அடிமைகளின் கதை என்பதை விட இப்படி விளக்குவது தான் பொருத்தமாக இருக்கும்.

ரூபாய் நோட்டு தடை: உண்மையான பொருளாதார நோக்கமும் அதன் பாலியலும்

   Image result for modi
ஆயிரம், 500 ரூ நோட்டுக்கள் தடை செய்யப்பட்டு (இதை நான் எழுதும் போது) 44 நாட்கள் ஆகின்றன. கறுப்புப் பணத்தை ஒழித்து, மொத்த பண பரிவர்த்தனையையும் டிஜிட்டலாக்கும் அரசின் நோக்கம் தொடர்ந்து ஒரு பக்கம் விதந்தோம்பப்படுகின்றன. இன்னொரு பக்கம் அவஸ்தைப்படுபவர்கள் இந்த பிரச்சாரங்களின் திசையில் காறித் துப்புகிறார்கள். பா.ஜ.கவின் ஆரம்ப கட்ட ஆதரவாளர்கள் கூட இன்று அமைதியாகி தலை குனிந்து விட்டார்கள்.
வீட்டின் நிலவறையில் சங்கிலியில் கட்டி வைக்கப்பட்டு தொடர்ந்து அலறும் ஒரு பைத்தியத்தை போல் இந்த ரூபாய் நோட்டு விவகாரம் அவர்களுக்கு மாறி விட்டது. தம் காதுகளை பொத்திக் கொள்கிறார்கள். பிறரையும் அவ்வாறு இருக்க தூண்டுகிறார்கள். ஆனால் ஒன்றுமே கேட்கவில்லை என பாவனை செய்ய அவர்களுக்கு இனியும் துணிச்சல் இல்லை. மோடி பக்தர்களுக்கும் பதற்றத்தில் கைகள் லேசாய் நடுங்குகின்றன.

ஐ.பி.எல் 2017 – மூன்றாவது வாரம்


ஐ.பி.எல் 2017இன் ஆட்டங்கள் மூன்றாவது வாரத்தை கடக்கையில் எதிர்பார்த்தது போல் மும்பை மற்றும் கொல்கொத்தா அணிகள் தலா பத்து மற்றும் எட்டு புள்ளிகள் பெற்று முன்னிலையில் உள்ளன. இந்த அணிகளுடன் play offs எனப்படும் இறுதிப் போட்டிக்கான தேர்வுப் போட்டிகளில் பங்கு பெறப் போகும் அணிகள் எவை என்பது தான் இப்போதுள்ள ஒரே கேள்வி. தொடரின் துவக்கத்தில் கச்சிதமான கட்டுப்பாட்டான அணியாக தென்பட்ட பூனே எதிர்பாராத விதமாய் படுபாதாளத்துக்கு சென்று விட்டது. எப்போதுமே திறமையை விட திட்டமிடலையும் உழைப்பையும் அணி ஒற்றுமையையும் முதன்மையாய் கருதும் ஹைதராபாத் அணி இந்த இயல்புகள் காரணமாய் மூன்றாவது இடத்தில் உள்ளது.

ஐ.பி.எல் 2017 – ரெண்டாவது வாரம்


 நான் இதை எழுதும் போது எட்டு புள்ளிகளுடன் வெற்றிப்படிக்கட்டில் முதல் படியில் மும்பை இந்தியன்ஸ் அணி இருக்கிறது. அதற்கு சற்று பின்னால் ஆறு புள்ளிகளுடன் கொல்கொத்தா அணி உள்ளது. தில்லி, பூனே, பஞ்சாப், ஹைதராபாத் (சன் ரைசர்ஸ்) ஆகிய அணிகள் தலா நான்கு புள்ளிகளுடன் அடுத்த இடத்தை வகிக்கின்றன. ஆக வலுவான அணிகள் முன்னிலையில் உள்ளன.

ஐ.பி.எல் 2017: ஒரு முன்னோட்டம்


Image result for ipl 
ஐ.பி.எல் கோயில் விழாவை ஒட்டின திருவிழா போல. கோயிலுக்கும் திருவிழாவுக்கும் சம்மந்தம் இருப்பதில்லை. திருவிழாவுக்கு வேடிக்கை பார்க்கிறவர்கள், வாடிக்கையாளர்கள், பொழுதுபோக்காளர்கள் என கூட்டம் கூட்டமாக வருவார்கள். கடந்த வருடத்தில் இருந்து இந்தியா தொடர்ந்து பல்வேறு டெஸ்ட் தொடர்களை ஆடி வந்தது. அதற்கு வந்து ஆதரவு வந்த பார்வையாளர்களும் இப்போது ஐ.பி.எல்லுக்காக குழுமும் பார்வையாளர்களும் முழுக்க வேறு. ஐ.பி.எல்லில் குழந்தைகள், பெண்கள், குடும்பங்கள் அதிகம் வருகிறார்கள். கிரிக்கெட்டை நுணுகி ஆராய்ந்து விவாதித்து ரசிப்பதற்கான ஆட்டம் அல்ல ஐ.பி.எல். ஐ.பி.எல்லில் பார்வையாளர்களுக்கு பல சமயம் என்ன ஷாட் ஆடப்படுகிறது, ஆட்டம் என்ன நிலையில் இருக்கிறது என யோசிக்க நேரம் இருக்காது. அவர்கள் நொறுக்குத்தீனி தின்று, கோக் குடித்து, செல்பி எடுப்பதற்குள் பாதி ஆட்டம் முடிந்து விடும். மீதி ஆட்டம் அவர்கள் எழுந்து நின்று துள்ளி ஆரவாரிப்பதற்கானது. இதனாலே சிக்ஸர்களும் பவுண்டரிகளுமாய் ஐ.பி.எல் முழுக்க முழுக்க தீபாவளியாக இருக்கிறது. ஐ.பி.எல் 2017உம் அப்படித் தான்.

Saturday, May 6, 2017

அம்பேத்கரும் மோடியும்

Image result for ambedkar modi

நேற்று என் வீட்டருகே ஒரு திடலில் ஒரு அரசியல் தட்டியை கண்டு திகைத்து நின்று விட்டேன். ஒரு பக்கம் அம்பேத்கர், இன்னொரு பக்கம் மோடி. விடுதலை சிறுத்தைகள் பா.ஜ.கவுடன் கூட்டம் நடத்துகிறார்களோ என குழம்பிப் போனேன். கவனித்தேன். அது பா.ஜ.க நடத்தும் தலித்துகளுக்கு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி. நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும் உள்ளூர் தலித் தலைவர்களுக்கோ உதவி பெறுபவர்களுக்கோ அம்பேத்கரையும் மோடியையும் இணைத்துப் பார்ப்பதில் சங்கடமில்லை. இது இப்படியே போனால் அடுத்த ஐந்தாண்டுகளில் பா.ஜ.க விடுதலை சிறுத்தைகளை முழுங்கி விடும் எனத் தோன்றுகிறது. தமிழகத்தில் தலித்துகளையே இந்துத்துவர் தம் பிரதான இலக்காக கருதுகிறார்கள். தலித்துகளில் அம்பேத்கரை கற்றுணராதவர்கள் எளிதில் இந்துத்துவ பிரச்சாரத்துக்கு அடிமையாகி விடுகிறார்கள். அதன் மூலம் சாதியமைப்பில் தாம் மேல்நிலையாக்கம் பெறுவதாய், ஏற்றுக் கொள்ளப்படுவதாய் அவர்களுக்கு மனப்பிராந்தி ஏற்படலாம். பா.ஜ.க அம்பேத்கரை ஒரு இந்துத்துவா பிம்பமாய் மறுகட்டமைக்கும் காலம் தொலைவில் இல்லை.

இலக்கிய வெறுப்பை சமாளிப்பது எப்படி?

நான் எழுத வந்து ஒன்பது வருடங்கள் ஆகின்றன. நான் கடைபிடிக்கும் ஒரு தற்காப்பு நடவடிக்கை இது: இலக்கியவாதிகள் அல்லது வாசகர்களுடன் மது அருந்த மாட்டேன். அல்லது நான்குக்கு மேல் இலக்கியவாதிகள் குழுமியிருக்கும் அறைக்குள் மாட்டிக் கொள்ள மாட்டேன். ஏனென்றால் இந்த இரு சந்தர்பங்களிலும் இலக்கியவாதிகளுக்கே பிரத்யேகமாக உள்ள வெறுப்பு ஒரு ஆவி போல் வெளியே வருவதை காண நேரிடும்.

Thursday, May 4, 2017

முற்போக்கும் கடவுள் நம்பிக்கையும்

 Image result for சமஸ்
சமீபத்தில் சமஸ் தமிழ் ஹிந்துவில் எழுதின “நான் இந்துவாக வாழ்வதாலே மதவாதி ஆகிவிடுவேனா?” அவரது மிகச்சிறந்த கட்டுரை என்பேன். அவர் எழுதியதிலேயே சற்றே தத்துவார்த்தமான, சிக்கலான கட்டுரையும் தான் இது. அதனாலே அதன் மைய வாதம் எளிய வாசகர்கள் பலருக்கும் புரிந்திருக்காது. பலரும் அது இந்துத்துவாவுக்கு வக்காலத்து வாங்கும் கட்டுரை என எளிமையாக புரிந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் நேர்மாறாக இந்துத்துவாவை எதிர்கொள்ள சிறந்த வழி ஒன்றை அக்கட்டுரை முன்வைக்கிறது. குறிப்பாக முற்போக்காளர்கள் மக்களின் உளவியலை, பண்பாட்டை புரிந்து கொண்டு போராட்டங்களை முன்னெடுப்பதற்கு மத நம்பிக்கையை பழிக்காமல் இருப்பது அவசியம் என்கிறது.