Friday, January 6, 2017

புத்தக கண்காட்சியில் நாளை பேசுகிறேன்


இவ்வருட சென்னை புத்தகக் கண்காட்சியில் தினமும் மாலை சிற்றரங்கில் நிகழும் இலக்கிய உரையாடல்களை ஒருங்கிணைக்கும் பொறுப்பை பபாசி வாசகசாலை அமைப்புக்கு வழங்கி உள்ளது. இது ஒரு மகிழ்ச்சியான சேதி. வாசகசாலையினரின் துடிப்பும் ஒருங்கிணைக்கும் திறனும் நாம் நன்கு அறிந்ததே. புத்துணர்ச்சியும் கணிசமான வாசகர் பங்களிப்பும் கொண்டதாய் இவ்வருட நிகழ்ச்சிகள் அமையப் போகிறது என்பதில் ஐயமில்லை.
நாளை (சனிக்கிழமை) மாலை 4: 30க்கு நான் சிற்றரங்கில் நவீன கவிதைகளை எளிமையாய், சுருக்கமாய் அறிமுகப்படுத்தும் வண்ணம் பேசப் போகிறேன். நவீன கவிதையின் வாசனை கூட அறியாத எளிய வாசகன் தான் என் இலக்கு. புதுக்கவிதை, அதன் வகைமைகளான வானம்பாடிக் கவிதை, நவீன கவிதை, இரு வகைமைகளின் பொது இயல்புகள், நவீன கவிதையின் அடிப்படையான குணங்கள், முக்கியமான கவிஞர்கள் என பல எடுத்துக்காட்டுகளுடன் காணொளி பயன்படுத்தி பேசப் போகிறேன். எண்பதுகள் துவங்கி ரெண்டாயிரத்தின் முதல் பாதி வரையிலான கவிஞர்களை எடுத்துக் கொள்கிறேன். கவிதையை விளக்குவதோ அதை எழுத கற்றுத் தருவதோ அல்ல நோக்கம். ஒரு கவிதை ஏன் நவீன கவிதை என அறியப்படுகிறது என வாசகனுக்கு புரிய வைப்பதே என் நோக்கம்.

நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். தீவிர இலக்கிய உரையாடல்களை எளிதாக சுவாரஸ்யமாக நம் அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்வோம். வாருங்கள்!

No comments: