Tuesday, December 6, 2016

எளியவர்களை அடித்து வலியவர்களை தப்பிக்க விடும் திட்டம்

செலவுகள், நஷ்டம் ஆகியவற்றை கணக்கிட்டு பார்த்து கழித்த பின் ரூபாய் நோட்டு தடையினால் அரசுக்கு கிடைக்கும் லாபம் 58,200 கோடி. ஆனால் 7th pay commission படி அரசு ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டிய சமபள உயர்வு ஒரு லட்சம் கோடி கூடுதல் செலவை கொண்டு வருகிறது. வங்கிகள் கார்ப்பரேட்டுகளின் வாராக்கடனை தள்ளுபடி செய்ததில் ஏற்பட்ட நஷ்டம் 70,000 கோடி. இது போக நமது பொருளாதாரம் இந்த தடையினால் சந்தித்த பெரும் பின்னடைவு, மக்களுக்கு ஏற்பட்ட சிரமங்கள், நெருக்கடி ஆகியவற்றை கணக்கிடுகையில் இந்த தடை ஒரு பயனற்ற கண் துடைப்பு நாடகம் என புரிகிறது
ஒரு பக்கம் செலவுகளை அதிகப்படுத்துவது, பெருங்கடனாளிகளை தப்ப விடுவது, இன்னொரு பக்கம் கறுப்பு பணத்தை கட்டுப்படுத்துகிறோம் என பாவ்லா பண்ணுவது. சமீபத்தில் கறுப்பு பணம் வைத்திருப்பவர்கள் அதில் 50% அரசுக்கு செலுத்தினால் மீதி பணம் வெள்ளையாகி விடும் எனும் மசோதாவை மைய அரசு கொண்டு வந்துள்ளது. இது கோடிக்கணக்கில் கறுப்பு பணம் வைத்திருப்பவர்களை மறைமுகமாய் தப்ப விடும் மற்றொரு முயற்சி.
எளிய மக்களிடம் இவ்வளவு கராறாய் பணமில்லாமல் வ்ங்கி அட்டை பயன்படுத்தி பரிவர்த்தனை செய்து பாருங்களேன் என சொல்ல முடிகிற நம் அரசுக்கு அதே கரார்தனத்தை பெருந்திருடர்களிடம் காட்ட வக்கில்லை. பெப்ரவரி மாத மாநில தேர்தல்களில் தான் மக்கள் இதற்கு தமது எதிர்வினையை காட்ட இருக்கிறார்கள். அரசு கூறுவது போல் ரூபாய் நோட்டுத்தடையை மக்கள் உண்மையிலேயே பாராட்டுகிறார்கள் என்றால் பா.. பெரும் வித்தியாசத்தில் இத்தேர்தலில் வெல்ல வேண்டும். பார்க்கலாம்!
இந்த விசயங்களை எல்லாம் விரிவாக அலசி முன்வைக்கும் முக்கியமான கட்டுரை இது:

No comments: