Sunday, September 18, 2016

ராம்குமாரின் மரணம்: திரைக்கதையில் ஓர் பிறழ்வு

ராம்குமார் போலீசின் திரைக்கதையை மீறி நீதிபதியிடம் வாக்குமூலம் கொடுத்ததில் இருந்தே அவருக்கான நாட்கள் எண்ணப்பட்டு விட்டன. அதனால் தான் அவருடன் ஜெயிலில் எப்போதும் காவலர்கள் தங்க வைக்கப்பட்டார்கள். அது கண்காணிப்புக்கு அல்ல, மிரட்டலுக்கு. இப்போது தம் திரைக்கதைக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என அவர் கதையை முடித்து விட்டார்கள்.

ராம்குமார் குறித்து நான் இறுதியாய் எழுதிய கட்டுரையில் இனிமேல் இந்த வழக்கின் உண்மைத் தகவல்கள் ராம்குமார் வழியாக வெளிவர முடியாது. போலீசுக்கு ஒத்துழைப்பதன் மூலம் மட்டுமே ராம்குமார் உயிர் பிழைக்க முடியும். அப்படி செய்யும்பட்சத்தில் அவர் ஆயுள் தண்டனையுடன் தப்பிக்க முடியும். ராம்குமார் முன்னிருக்கும் தீர்வுகளில் சிறந்தது இது தான் என்றேன்.
அவர் அப்படியே செய்து தன் உயிரையாவது காப்பாற்றி இருக்கலாம்!


No comments: