Monday, September 5, 2016

விஷ்ணு இந்து மதத்துக்குள் வந்த கதை


விஷ்ணு இந்து மதத்துக்குள் வந்த கதை சுவாரஸ்ய்மானது. நான் வாசித்த சில நூல்களின் படி ஆதி ஆரிய சடங்குகளிலும் தொன்மங்களிலும் விஷ்ணு இல்லை. ஆரியர்களின் அப்போதைய கடவுள் இந்திரன். அவர்களின் குலக்குறி கருடன். ஆரியர்களுக்கு போட்டியாக இருந்த சில வலுவான இனக்குழுக்கள் ஒன்றின் கடவுள் தான் விஷ்ணு. பின்னாளில் இந்த இனக்குழுவும் ஆரியர்களின் குழுவும் ஒன்றிணைய ஆரியர்கள் விஷ்ணுவை தம் வழிபாட்டுக்குள் இழுத்துக் கொள்கிறார்கள்.


கருடனை அவனுக்கு பணிந்த ஒரு சிறு தெய்வமாக, வாகனமாக்குகிறார்கள்.

இந்த பாடலில் காளியன் எனும் நாகத்தை கண்ணன் முறியடித்த கதை வருகிறது. இந்த நாகமும் ஒரு இனக்குழுவின் குலக்குறியாக இருக்க வேண்டும். ஆயர்கள் நாகர்களை முறியடித்து ஒரு உபதெய்வமாக்கி கொள்கிறார்கள்.


பல்லாயிரம் வருடங்களுக்கு பிறகு இந்த விஷ்ணுவே இந்து மதத்தின் பிரதான கடவுள் ஆகிறார். அவரது அவதாரமான ராமனின் தேரில் ஏறி பா.ஜ.க இந்தியாவை படையெடுத்து வெல்கிறது.

No comments: