Wednesday, September 28, 2016

மனம் இணைய இதழில் என் பேட்டி

உங்களது இலக்கியப் பயணம் எந்த இடத்தில் தொடங்கியது?
என்னுடைய எழுத்துப் பயணம் என்பது எதிர்பாராத பல திருப்பங்களைக் கொண்டது. நான் அறிவார்ந்த ஆள் கிடையாது. முழுக்க உணர்ச்சிகளின் உலகத்தில்தான், நான் தொடர்ந்து பயணித்து வந்திருக்கிறேன். சுமார் பதினான்கு வயதில் கவிதைகள் எழுத ஆரம்பித்தேன். பிறகு, சிறுகதைகளை எழுதிப் பார்த்தேன். அப்போது, கட்டுரைகளுக்கும் எனக்கும் சம்பந்தமே இருந்ததில்லை. அப்படியாக வளர்ந்து வருகிறபோதுதான், கவிஞர் மனுஷ்யபுத்திரன் உடனான நட்பு கிடைத்தது. அப்போது எனக்கு மொழிபெயர்ப்பில் பெரிய ஆர்வம் இருந்தது. சில மொழிபெயர்ப்பு கவிதைகளை எழுதிக்கொண்டுபோய், அவரிடம் காண்பித்தேன். அதைப் படித்த மனுஷ்யபுத்திரன், அதைப் பதிப்பிக்கலாம் என்று சொன்னார். ஆனால், சில காரணங்களால் அது பதிப்பிக்க முடியாமல் போனது. இந்த சமயத்தில்தான், உயிரோசை என்கிற இணையதளத்தை மனுஷ் ஆரம்பித்தார். அதில் நிறைய புதுமுக எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தினார். அப்படி, அதில் எழுத எனக்கும் வாய்ப்பளித்தார். அங்கேதான், ஒரு கட்டுரையாளனாக நான் உருவானேன். தொடர்ச்சியாக எழுத எழுத, அதன்மேல் ஒரு தீவிரமான ஈடுபாடு வந்துவிட்டது. இதுதான், பின்னாட்களில் ஒரு நாவலாசிரியனாக உருவாகக் காரணமாக அமைந்தது!

அவரா இவரா?


ஒருவர் சில நாவல்களை எழுதி பிரசுரிக்காமல் வைத்திருக்கிறார். அவரை நாவலாசிரியர் என்று அழைக்கலாமா? அல்லது வேறு எப்படி அழைப்பது? சரி, நாவலாசிரியர் என அறியப்பட பிரசுரமும், அது பரவலாக வாசிக்கப்படுவதும் ஒரு அளவுகோல் என வைப்போம். மற்றொருவர் பல நாவல்கள் எழுதி பிரசிரித்திருக்கிறார். ஆனால் விமர்சகர்களும் வாசகர்களும் அவை நாவலே அல்ல என்று நிராகரித்து விட்டனர். இப்போது அவர் நாவலாசிரியரா இல்லையா?

Monday, September 26, 2016

மலரினும் மெல்லிது காமம்

மலரினும் மெல்லிது காமம்
சிலர்அதன் செவ்வி தலைப்படு வார்

நண்பர் ஹமீர் முஸ்தபா பார்க்க கோபமான மார்க்ஸியவாதி போல் தோன்றினாலும் அவர் ஒரு தமிழ் பேராசிரியரும் கூட. அவர் தான் மேற்குறிப்பிட்ட குறளை எனக்கு அறிமுகப்படுத்தினார். விளக்கினார். எனக்கு அப்போது பதினாறு வயதிருக்கும். “வள்ளுவன் கூறுவது போல் காதல் அப்படி புலப்படாத ஒரு சூட்சுமப் பொருளா என்ன?” எனக்குத் தோன்றியது. அழகான பெண்களை பார்த்தால் காதல் வருகிறது. ஆக காதல் அழகான பெண்ணுடலில் இருக்கிறது. இப்படித் தான் நான் புரிந்து வைத்திருந்தேன். முஸ்தபா எனக்கு விளக்கினார். “அப்படி இல்லப்போ. மலரின் மென்மை மலரில் இல்லை. காதலின் அழகு மலரின் மென்மையை விட மாயமானது.”

Sunday, September 25, 2016

கனவுக்குள் கனவாக காதல்

 Image result for கவிஞர் தாமரை
 “இது ஒரு கனவு நிலை…
கனவுக்குள் கனவாய் எனை நானே கண்டேனே”
தாமரையின் இந்த வரிகள் கேட்கும்போது நகுலன் ஒருவேளை ரொமாண்டிக்காக கவிதை எழுதியிருந்தால் இப்படித் தான் எழுதியிருப்பார் என தோன்றியது.

Sunday, September 18, 2016

ராம்குமாரின் மரணம்: திரைக்கதையில் ஓர் பிறழ்வு

ராம்குமார் போலீசின் திரைக்கதையை மீறி நீதிபதியிடம் வாக்குமூலம் கொடுத்ததில் இருந்தே அவருக்கான நாட்கள் எண்ணப்பட்டு விட்டன. அதனால் தான் அவருடன் ஜெயிலில் எப்போதும் காவலர்கள் தங்க வைக்கப்பட்டார்கள். அது கண்காணிப்புக்கு அல்ல, மிரட்டலுக்கு. இப்போது தம் திரைக்கதைக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என அவர் கதையை முடித்து விட்டார்கள்.

Thursday, September 15, 2016

சொகுசு அரசியலின் காலம்


அரசியல் இன்று கார்ப்பரேட்மயமாகி விட்ட பின் அரசியல் தலைவர்கள் ரோட்டில் இறங்கி போராட விரும்புவதில்லை. அரசியல் இன்று வெகு சொகுசாகி விட்டது. ஒரு பெரும் அரசியல் தலைவர் மக்கள் பிரச்சனைக்காக பத்து நாள் உண்ணாவிரதம் இருந்ததாய், போராடி சிறை சென்றதாய் கடைசியாய் எப்போது கேள்விபட்டீர்கள்? ஒரு அரசியல் தலைவர் சாலையில் அமர்ந்ததாய் கடைசியாய் எப்போது கேள்விப்பட்டீர்கள்? ஆமாம் கேஜ்ரிவால் செய்தார். அதனால் தான் அவர் உடனடியாய் கவனிக்கப்பட்டு கிட்டத்தட்ட ஒரு ரட்சகனாகவே பார்க்கப்பட்டார். இன்றும் போராட்டங்களை சிறு கட்சிகள் மட்டுமே நடத்துகின்றன. பெரும் கட்சிகள் அறிக்கை விடுவது, பணம் கொடுத்து ஆட்களை திரட்டி பொதுக்கூட்டங்கள் நடத்துவது, பேரணி போவது என முதலாளித்துவ வடிவம் எடுத்து விட்டன.

Sunday, September 11, 2016

குற்றமே தண்டனை

Image result for kutrame thandanai

குற்றமே தண்டனை படத்தை முதல் அரைமணிநேரம் பார்க்கிற எவருக்கும் இது தமிழில் மிக முக்கியமான படைப்பு என உடனே விளங்கி விடும். நம் சினிமாக்களில் வழக்கமாய் ஒளிப்பதிவு கதை சொல்வதற்கான ஒரு எளிய கருவி மட்டுமே. ஆனால் ஒரு நுணுக்கமான திரைக்கலைஞனுக்கு மட்டுமே ஒளிப்பதிவை விஷுவல் மொழியாக பயன்படுத்த தெரியும். தமிழில் மிஷ்கின், ராம் போன்றோரை உதாரணம் காட்டலாம். எனக்கு இவ்விதத்தில் எம்.மணிகண்டனை இவர்களுக்கு வெகு அருகில் வைக்க தோன்றுகிறது.

ஏக்கத்தின் விஷ்வரூபங்கள்

சமீபத்தில் மனுஷ்யபுத்திரனிடம் எழுத்தாளர்களின் இலக்கிய சண்டைகள் குறித்து உரையாடிக் கொண்டிருந்தேன். அவர் சொன்னார் “எழுத்தாளர்கள் மிகவும் உணர்வுவயப்பட்டவர்கள். சட்டென சீண்டப்படுவார்கள். லேசாய் உதாசீனித்தாலே தாம் அவமதிக்கப்பட்டதாய் கொந்தளிப்பார்கள். அவர்களின் தற்காலிக கோபதாபங்களை பொருட்படுத்தி அதைக் கொண்டு அவர்களை மதிப்பிடக் கூடாது.” முழுக்க முழுக்க உண்மை இது.

Saturday, September 10, 2016

பாமரனின் நகைச்சுவை

எம்.ஸி.ஸியில் முதுகலை படிக்கும் போது விடுதியில் சார்லஸ் எனக்கு நெருக்கமான நண்பன். இலக்கியம், அரசியலில் ஆர்வம் கொண்டவன். எங்கள் வாசிப்பு பின்னணி, நுண்ணுணர்வு, வாழ்க்கைப் பார்வை வேறு. அவன் சிறுகதை ஒன்று ஏற்கனவே விகடனில் வெளியாகி இருந்தது. கச்சிதமான, நேரடியான சித்தரிப்பு கொண்ட ஒரு கதை. நானும் அப்போது சொல்புதிதில் ஒரே ஒரு கதை வெளியிட்டிருந்தேன். கல்லூரியில் நண்பர்களுடன் எழுதின கவிதைகளை தொகுத்து ஒரு சிறுநூலாய் பிரசுரித்திருந்தேன். அவனுக்கு வெகுஜன எழுத்து, அரசியல், பொருளாதாரம், வரலாற்றில் ஆர்வம். எனக்கு தத்துவம், இலக்கியம் மட்டுமே உலகம்.

தமிழ் நாடு பிரீமியர் லீக்: அரசியலும் இளம் நட்சத்திரங்களும்

(கடந்த வார கல்கியில் வெளியான கட்டுரை)
தமிழக கிரிக்கெட் வாரியம் பல்வேறு தமிழக மாவட்ட வீரர்களை கொண்டு ஒரு மினி ஐபிஎல் நடத்துகிறது: TNPL – Tamil Nadu Premier League. கோவை, மதுரை, திண்டுக்கல், திருவள்ளூர், சேப்பாக், தூத்துக்குடி, காஞ்சிபுரம், காரைக்குடி ஆகிய மாவட்டங்கள் பங்கேற்கின்றன. அம்பானியின் பினாமி நிறுவனம், தந்தி டிவியின் குழுமம், லைக்கா எனும் சினிமா தயாரிப்பு நிறுவனம் போன்ற சில பெரும்புள்ளிகள் அணிகளை வாங்கி இருக்கிறார்கள். ஸ்டார் சேனலில் நேரடி ஒளிபரப்பு, மாதவன், சமந்தா போன்ற திரைநட்சத்திரங்கள் பங்கேற்ற துவக்க விழா, டீன் ஜோன்ஸ், பிரெட் லீ, ஸ்ரீகாந்த், லஷ்மண் சிவராம கிருஷ்ணன் போன்ற பிரபல வர்ணனையாளர்கள் என் டி.என்.பி.எல் ஒரு நட்சத்திர, சர்வதேச தோரணை கொண்டிருக்கிறது.
முக்கியத்துவம்
டி.என்.பி.எல்லின் பிரதான கவர்ச்சி அது அதிகம் கிரிக்கெட் புழங்காத மாவட்டங்களில் T20 கிரிக்கெட்டை கொண்டு போகிறது என்பது. சேப்பாக்கில் ரஞ்சி டுரோபி நடந்தால் கூட அதைப் பார்க்க பாதி மைதானமாவது கிரிக்கெட் விசுவாசிகளால் நிறைந்து விடும். ஆனால் தமிழகத்தின் வேறு மாவட்டங்களில் நேர் எதிரானது. இப்போது திண்டுக்கல், நெல்லை போன்ற மாவட்ட மைதானங்களில் ஆடப்படும் டி.என்.பி.எல் குடும்ப பார்வையாளர்க்ள், இளைஞர்களை பெருமளவில் ஈர்க்கிறது. இது வருங்காலத்தில் தமிழக கிரிக்கெட்டுக்கு நன்மை பயக்கும். சிறுநகர, கிராமத்துக்கு மக்களையும் இந்த எலைட் ஆட்டத்தை நோக்கி இழுக்கும்.

ரியோ ஒலிம்பிக்ஸ்: இனி ஒரு விதி செய்வோம்!


(சில வாரங்களுக்கு முன் கல்கியில் வெளியான கட்டுரை)

ரியோ ஒலிம்பிக்ஸில் மூன்று பெண்கள் நம்மை பெருமைப்பட வைத்திருக்கிறார்கள். பி.வி சிந்து, சாக்ஷி மாலிக், தீபா கர்மக்கர்.
அதுவும் பி.வி சிந்து பேட்மிண்டன் விமன்ஸ் சிங்கிள்ஸில் இறுதி ஆட்டம் வரை சென்று வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். சிந்து ஆந்திராவை சேர்ந்தவர். அவரை இப்போது ஆந்திரபிரதேசமும், தெலுங்கானாவும் ஆளுக்கு ஒரு கையை பிடித்து இழுத்து உரிமை கொண்டாடுகிறார்கள். இரு மாநிலங்களும் அவருக்கு வீடு, கோடிக்கணக்கில் பணம் என பரிசளிக்கிறது. மொத்த தேசமுமே அவரது வெற்றியை கொண்டாடுகிறது.
சிந்துவுக்கு அரை இறுதியை விட காலிறுதி இன்னும் சிரமமாக இருந்தது. காலிறுதியில் அவர் சீனாவின் வாங் இஹானுடன் மோதினார். வாங் இஹான் வலுவானவர். அவரது ஆற்றலும் வலுவும் ஆட்டம் முழுக்கவும் சரியவே இல்லை. சிந்து அவருடன் கடுமையாய் போராடியே வென்றார். இஹானுக்கு டிராப் ஷாட் எனப்படும் வலைக்கு அருகில் பந்தை சொட்டி விழும் கணக்காய் மென்மையாய் தட்டி விடும் ஷாட் நன்றாய் வந்தது. சிந்துவின் சிறப்பு அவரது உயரம் மற்றும் தோள் வலிமை. அதுவும் கத்திரிக்கோல் போல் கோர்ட்டுக்கு குறுக்குமறுக்காய் அடிக்கும் cross shots, அவற்றை அவர் துள்ளி எழுந்து அடிக்கும் அவரது பாணி அட்டகாசம். காலிறுதியில் இந்த ஷாட்டை தான் அதிகம் நம்பினார்.

Thursday, September 8, 2016

ஆறில் இருந்து அறுபது வரை

நான் இரவு வீட்டுக்கு திரும்பும் போது என் குடியிருப்பில் உள்ள மற்றொருவரும் கூட வருகிறார். அவரது வீடு முதல் மாடியில். நான் அவரை கடந்து தான் மூன்றாவது மாடிக்கு செல்ல வேண்டும். இன்று நான் மாடிப்படிகள் ஏறும் போது அவர் தன் வீட்டு வாசலை அடைந்து சிறுகுழந்தையான தன் மகனுக்கு குரல் கொடுப்பது கேட்டது. அவரது மகன் அப்பா என்று கூவியபடி ஓடி வருவதும் கேட்டது. அடுத்து பையன் அப்பாவிடம் ”நீ எனக்கு என்ன வாங்கி வந்தே?” என திரும்ப திரும்ப கேட்கிறான். இதை அடுத்து வீட்டில் உள்ளோரிடம் அப்பா தனக்கு முறுக்கு கொண்டு வந்துள்ளதை அறிவிக்கிறான். ஆனால் முறுக்கை அவன் அப்பாவிடம் தரக் கேட்கவில்லை. வாங்கி வந்த மகிழ்ச்சியே அவனை துள்ள வைக்கிறது. அவன் அவசரமாய் அப்பாவிடம் தனது அன்றைய நாளின் முக்கியமான அனுபவங்களை பகிர ஆவேசப்படுகிறான். கொய்யா மரத்தில் அணில் ஒன்றை பார்த்தது பற்றி சத்தமாய் தெரிவிக்கிறான். திரும்ப திரும்ப அணிலின் செயல்களை வர்ணிக்க முயன்று திணறுகிறான்.

எனக்கு அப்பையனின் நடவடிக்கைகள் ஒரு விசயத்தை புரிய வைத்தன. வளர்ந்த பின்னும் மனிதர்கள் தம்மை யாராவது சந்திக்க வரும் போது இந்த இரண்டு காரியங்களை தான் செய்கிறார்கள். ஒன்று, “நீ எனக்கு என்ன கொண்டு வந்துள்ளாய்?” என கேட்கிறார்கள். இது உணவுப்பொருள், மது, பரிசுப்பொருள், பணம், ஒரு நல்ல அனுபவம், சுவையான கதை என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். வெறுங்கையுடன் வரும் நண்பர் கூட நம்மிடம் ஏதோ சில ஆர்வமூட்டும் சொற்களை பகிர வேண்டும் என முதலில் எதிர்பார்க்கிறோம். அந்த நண்பரை வெளியே சந்தித்தால் அவர் நம்மை ஒரு புது இடத்துக்கு அழைத்து செல்ல வேண்டும், ஒரு இனிய புது நபரை அறிமுகப்படுத்த வேண்டும், சுவையான வித்தியாசமான உணவகத்துக்கு அழைத்து செல்ல வேண்டும் என கோருகிறோம். இதையெல்லாம் நண்பர் செய்யாவிட்டாலும் நமக்கே தெரியாமல் எதிர்பார்க்கிறோம். இதில் ஏதாவது ஒன்றை செய்யும் நண்பரை நமக்கு மிகவும் பிடித்துப் போகிறது. இதை செய்யத் தெரிந்தவர்கள் உற்சாகமான நட்பு வட்டம் கொண்ட பிரபலமான பலரும் விரும்பும் நபராக இருப்பார்.

வெறுமை என்றால் என்ன?


வெறுமைக்கு நிறைய விளக்கங்கள் உள்ளன. அதாவது ஆன்மீக ரீதியாய், தத்துவார்த்தமாய், உளவியல் ரீதியாய். ஆனால் நான் கேட்பது அன்றாட வாழ்க்கையில் நாம் உணரும் வெறுமை. அதாவது “இன்று ஒன்றுமே நினைத்துப் பார்க்கும்படியாய் இல்லை, நான் இன்று ஒன்றுமே உருப்படியாய் செய்யவில்லை, இன்றைய நான் ஒன்றுமில்லாமல் முடிந்து போனதே” எனும் உணர்வு.

கர்நாடக இசையும் ஹரிஜன சேவையும்

Image result for gandhi with harijans
டி.எம் கிருஷ்ணா ஒரு இசைக்கலைஞர். அவர் தன்னளவில் சாதியை களையும் முயற்சியில் ஈடுபடுகிறார். தான் அறிந்த இசையை அதற்கு பயன்படுத்துகிறார். அவர் அதை செய்யக் கூடாது என நாம் எப்படி சொல்ல முடியும்? இது தடித்தனம அல்லவா? அவர் சேரிக்கு சென்று இசை பாடினால் சமூகத்துக்கு என்ன பாதகம் வந்து விடப் போகிறது? இப்படி நேற்று ஒரு நண்பர் (நான் எழுதியதற்கு எதிர்வினையாக) என்னிடம் சற்று கோபமாய் கேட்டார். நான் அவரிடம் இப்படி சொன்னேன்:

Tuesday, September 6, 2016

டி.எம் கிருஷ்ணா: சாதியும் இசையும்

Image result for கிருஷ்ணா மகசேசே விருது
டி,எம் கிருஷ்ணா

இம்மாத உயிர்மையில் ஷாஜி டி.எம் கிருஷ்ணாவுக்கு மகசேசே விருது வழங்கப்பட்டதை பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். இரண்டு முக்கியமான கேள்விகளை எழுப்புகிறார். விருது டி.எம் கிருஷ்ணா கர்நாடக சங்கீதத்தை அடித்தட்டினருக்கு கொண்டு சென்றதன் மூலம் சாதிய அடுக்குகளை கலைத்து சமத்துவத்தை நிலைநிறுத்த முயன்றதற்காக கொடுக்கப்பட்டிருக்கிறது. 1) அப்படி கர்நாடக இசையை சேரியில் பாடுவதன் மூலம் சாதியை அழிக்க முடியுமா? 2) கர்நாடக இசையை வெகுஜன இசையாக மாற்ற முடியுமா?

Monday, September 5, 2016

பொய்கள் பகிரும் இடம்


கிரேக்க பயணத்தில் மதுவிடுதி ஒன்றில் சீனர் ஒருவரை சந்திக்கிறார் [ஹென்றி] மில்லர். இருவரும் சீன மொழியில் உரையாடிக் கொள்கிறார்கள். அப்போது மில்லர் அவர் தன்னிடம் பொய் சொல்வதாக உணருகிறார். உடனே தானும் நிறைய பொய்களை சொல்லத் துவங்குகிறார்…. வெளியூரில் நீங்கள் சொல்லுகிற எல்லா பொய்களும் ஏற்றுக் கொள்ளப்படும். அப்படி என்றால் வெளியூர் என்பதே பொய்கள் பகிரும் இடம் என்று கருதலாமா என தோன்றியது
எஸ்.ரா தீராநதியில் எழுதி வரும் தொடரில் இம்மாத கட்டுரையான “ஹென்றி மில்லரின் கிரேக்க பயணத்தில்” நான் மிகவும் ரசித்த இடம் இது. பயணம் குறித்த ஒரு முக்கியமான பார்வை இது.

விஷ்ணு இந்து மதத்துக்குள் வந்த கதை


விஷ்ணு இந்து மதத்துக்குள் வந்த கதை சுவாரஸ்ய்மானது. நான் வாசித்த சில நூல்களின் படி ஆதி ஆரிய சடங்குகளிலும் தொன்மங்களிலும் விஷ்ணு இல்லை. ஆரியர்களின் அப்போதைய கடவுள் இந்திரன். அவர்களின் குலக்குறி கருடன். ஆரியர்களுக்கு போட்டியாக இருந்த சில வலுவான இனக்குழுக்கள் ஒன்றின் கடவுள் தான் விஷ்ணு. பின்னாளில் இந்த இனக்குழுவும் ஆரியர்களின் குழுவும் ஒன்றிணைய ஆரியர்கள் விஷ்ணுவை தம் வழிபாட்டுக்குள் இழுத்துக் கொள்கிறார்கள்.