Wednesday, August 17, 2016

கிரிக்கெட்டோகிராஃபி பற்றின குற்றச்சாட்டுகளுக்கு என பதில்

ராஜேஷ் ஜெயபிரகாசம் என்பவர் நான் குமுதத்தில் எழுதி வரும் கிரிக்கெட்டோகிராஃபி தொடரில் தகவல் பிழைகள் உள்ளதாய் குறிப்பிட்டு பேஸ்புக்கில் எழுதியிருக்கிறார். ஒரு பிழையை ஒத்துக் கொள்கிறேன். ஆனால் மிச்சமெல்லாம் அவரது தவறான புரிதலையே காட்டுகிறது. கீழே படியுங்கள்”
1. சுரேஷ் ரெய்னா ஐ.பி.எல்லில் 3000 ரன்களை முதலில் கடந்தவர்
ஆதாரம்: He is the First Player to score 3000 runs in the IPL.
குமுதத்தில் நான் இப்படித் தான் எழுதியிருக்கிறேன். ஆனால் ராஜேஷ் ஜெயபிரகாசம் இதை திரித்து இவ்வாறு எழுதியிருக்கிறார்:
 ”ஐபிஎல் போட்டியில் 4000 ரன்கள் குவித்த முதல் வீரர் சுரேஷ் ரெய்னா”
தகவல் குற்றம் கண்டுபிடிக்கிற நீங்களே ஒரு வரியை தவறாய் திரித்து நான் எழுதாததை எழுதியதாய் எழுதலாமா?

2.   ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுக்காக அதிக விக்கெட் வீழ்த்தினவர் அஜித் அகார்க்கர்: 288 விக்கெட்டுகள்.
இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தால் he took many wickets for India. அதாவது அதிக விக்கெட்டுகள் என்றால் நிறைய விக்கெட்டுகள் என்று பொருள். ”மிக அதிக” என்றால் most என்று பொருள். ”நிறைய” என்பது ஒரு uncountable qualifier. நிறைய மழை பெய்தது என்று சொல்லலாம். ஆனால் எண்ணக் கூடிய பொருட்களுக்கு “நிறைய” பொருந்தாது என நினைக்கிறேன்.
அகார்க்கர் இந்தியாவுக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களில் மூன்றாமவர். இந்த வித்தியாசம் புரியாமல் அதை தவறாய் வாசித்து தகவல் பிழை என்றால் சொல்பவரின் புரிதலில் தான் பிழை.

3.     விவியன் ரிச்சர்ட்ஸின் மனைவியா நீனா குப்தா என கேட்டிருக்கிறார்கள். சட்டபூர்வமாய் அல்ல என எனக்குத் தெரியும். ஆனால் அதை கௌரவமாய் ஒரு வெகுஜன பத்திரிகையில் எப்படி சொல்வது என எனக்குத் தெரியவில்லை. ஆங்கிலத்தில் சுலபமாய் பார்ட்னர் என்று விடலாம். ஆனால் இங்கே வாழ்க்கைத்துணை என்று சொன்னால் அப்பொருள் வராது. வைப்பாட்டி என்றால் எவ்வளவு கொச்சையாய் இருக்கும். என்னைப் பொறுத்த வரையில் சட்டமெல்லாம் உறவில் முக்கியமில்லை. சேர்ந்து வாழ்ந்து குழந்தை பெற்றுக் கொண்டால் மனைவி தான். லிவிங் டுகதெர் முறையில் ரிச்சர்ட்ஸுடன் குழந்தை பெற்றுக் கொண்டார் என குமுதம் போன்ற ஒரு பத்திரிகையில் குறிப்பிட்டு இருவரையும் வாசகர்கள் “தவறாய்” நினைக்க தூண்டக் கூடாது என நினைத்தேன். இதை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் புரிந்து கொள்ளலாம். ரொம்ப கராறாய் தகவல்பூர்வமாய் பரிசீலித்து தவறு எனலாம். அல்லது என்னைப் போல் உணர்ச்சிகரமாய் மட்டும் பார்க்கலாம்.
4.   
4.. வக்கார் யூனிஸ் விளையாடிய உள்ளூர் போட்டியை தொலைக்காட்சியில் பார்த்து இம்ரான்கான் செலக்ட் பண்ணினார்

இது உண்மை தான். எந்த பிழையும் இல்லை.
ஆதாரம்: He had played only six first class games when he got picked for the Pakistan camp out of the blue. Waqar says "I remember Imran was not feeling well at the time, and was not present at the camp. Luckily the Super Wills Cup was going on, and there was a match between United Bank and Delhi XI. Saleem Jaffar got injured, and I got the opportunity to play that game. Imran watched me on TV, and actually came to the ground to watch the end of the game. The very next day, he met me and told me that I will be going to Sharjah next month. Just meeting Imran at the time was enough of an experience for me, but for him to notify me of my selection was just out of this world."


5.   யுவ்ராஜ் சிங் குறித்த கட்டுரையில் ஒரு கவனப்பிழை நேர்ந்தது உண்மை தான். அதற்காய் வருந்துகிறேன். எழுத்தின் வேகத்தில் நேரும் ஓரிரு பிழைகளை இனிமேல் கவனமாய் தவிர்க்கிறேன்.
ஆனால் மேலே நான் குறிப்பிட்டுள்ளவற்றில் ஒன்றைத் தவிர வேறெல்லாம் திரித்து எனக்கு எதிராய் அவதூறு கிளப்புவதற்காய் எழுதப்பட்டவை. இதை குமுதம் எடிட்டர் ப்ரியா கல்யாணராமனிடம் பகிர்ந்து கொண்டு என் பத்தியை நிறுத்த வேண்டும் எனும் நோக்கத்தில் எழுதப்பட்டது. மகிழ்ச்சி! தொடர்ந்து தீராநதி, தினமணியிலும் நான் எழுதுவதை தடை செய்யும் பணியை செய்யுங்கள். அது முடிந்ததும் எப்படியாவது மனுஷ்யபுத்திரனை சித்திரவதை செய்து உயிர்மையிலும் நான் எழுதுவதையும் தடை செய்து விடுங்கள். அப்படி அவர் ஒத்துக் கொள்ளாவிட்டால் ஆள் செட் அப் செய்து என் இரண்டு கைகளையும் உடைத்து விடுங்கள் (அப்படி செய்யும் பட்சத்தில் ஆறு மாதங்கள் நான், என் மனைவி மற்றும் குழந்தை வாழ்வதற்கான பணத்தையும் முன் ஏற்பாடாக கொடுத்து விடுங்கள்). உங்களுக்கு என் வாழ்த்துக்கள்!


No comments: