Monday, August 29, 2016

மெனிஞ்சியோமா

Image result for மெனிஞ்சியோமா

கணேசகுமாரனின் மெனிஞ்சியோமா நாவல் படித்து முடித்ததும் எனக்கு முதலில் தோன்றியது: இன்னும் நூறு வருடங்கள் கடந்தாலும் இந்த நாவல் படிக்கப் படும். ஏனென்றால் 1) மூளையில் நடக்கும் அறுவை சிகிச்சை, மருந்துகளும் சிகிச்சை முறைகளும் சோதனைகளும் ஒரு மனிதனை இழிவின் கீழ்மட்டத்துக்கு கொண்டு சென்று அவனை ஒரு சுய நிர்ணயமற்ற விலங்கைப் போன்றே நடத்துவது ஆகிய விசயங்களை கணேசகுமாரன் துல்லியமாய் வர்ணித்துள்ள முறை 2) மீண்டும் தமிழில் ஒருவர் மூளையில் கட்டி வந்து, அறுவை சிகிச்சை செய்து கொண்டு, உயிருடன் மீண்டு வந்து அவர் எழுத்தாளராகவும் இருந்து அதைப் பற்றி ஒரு நாவல் எழுதும் சாத்தியம் 0.05% என்பதால்.

Saturday, August 27, 2016

கெ.என் சிவராமனின் விஷமத்தனமும் சில விளக்கங்களும்


நான் காலச்சுவடிற்கு நகர முயல்கிறேனா என கெ.என் சிவராமன் ஒரு விஷமத்தனமான கேள்வியை எழுப்பி இருக்கிறார். நான் பிரம்மராஜனை ஆதரித்து ஒரு கட்டுரை எழுதியது தான் காரணம். அவருக்கு கூறிக் கொள்வது என்னவென்றால்:

1. நூல்களை பிரசுரிக்க பதிப்பகம் நாடி தெருத்தெருவாய் அலையும் அவல நிலையில் நான் இதுவரை இல்லை.


2. கடந்த எட்டு வருடங்களில் பல முறை நான் என் பதிப்பாளருடன் இலக்கிய விவாதங்களில் முரண்பட்டிருக்கிறேன். நிறைய விவாதித்திருக்கிறேன். ஆனால் எங்கள் இடையே உறவு அதனால் கசந்ததில்லை. அப்போதெல்லாம் நான் புது பதிப்பகத்தை நாடுகிறேனா என உங்களுக்கு ஐயம் ஏற்படாதது ஏன்? ஒரு சம்மந்தமில்லாத விசயத்தில் நான் காலச்சுவடு நோக்கி போவதாய் உங்களுக்கு சந்தேகம் எழுவது விசித்திரம் தான். நான் சுதந்திரமாய் சிந்திப்பவன். எழுதுபவன். என் கருத்துக்கள் சிலநேரம் எதேச்சையாய் சிலருக்கு ஆதரவாக்வும் சிலருக்கு எதிராகவும் மாறும். அது திட்டமிட்டு செய்வதல்ல. எனக்கு குழிபறிக்கும் / முதுகை வருடும் அரசியலில் ஆர்வமில்லை. என்றும் அதை செய்ததில்லை.

Friday, August 26, 2016

அவாளும் இவாளும்

Image result for சுகா எழுத்தாளர்

குமுதம் லைப் இதழில் சுகா எழுதியுள்ள “விளி” கட்டுரையை ரசித்தேன். வட்டார வழக்கின் பிராந்திய மாறுபாடுகள், அது குறித்துள்ள தவறான நம்பிக்கைகள் பற்றி எளிமையாக தனக்கே உரித்தான நமுட்டுச் சிரிப்புடன் எழுதியிருக்கிறார். மொழியியல், வட்டார வழக்கு ஆகியவற்றில் ஆர்வமுள்ளவர்கள் தவற விடாதீர்கள்.

பிரம்மராஜன் – கல்யாணராமன் – ஆத்மாநாம் சர்ச்சை


பிரம்மராஜன் – கல்யாணராமன் - ஆத்மாநாம் சர்ச்சையை ஆரம்பத்தில் இருந்தே கவனித்துக் கொண்டு வருகிறேன். இப்போது அது சாதிய குற்றச்சாட்டு, தனிநபர் தாக்குதல் என வடிவெடுத்திருக்கிறது. இந்த பிரச்சனை”ஆதியில்” எப்படி இருந்தது?
 கல்யாணராமன் காலச்சுவடில் ஒரு கட்டுரை எழுதினார்: “சூனியத்தில் வெடித்த முற்றுப்புள்ளி”. இது பிரம்மராஜனின் தொகுப்பு முறை பற்றியது. இன்னும் துல்லியமாய் சொல்வதானால் அவரது எடிட்டிங் பற்றியது. அவர் எவ்வாறு ஆத்மாநாமின் கவிதைகளை நூலாக தொகுக்கும் போது அவற்றை பல இடங்களில் மூலத்தில் இருந்து மாற்றி இருக்கிறார் என கல்யாணராமன் ஒரு பெரிய பட்டியலே தருகிறார். எனக்கு இதில் வரும் மூலக் கவிதை வரிகளையும் மாற்றப்பட்ட வரிகளையும் ஒப்பிடும் போது மாற்றப்பட்ட வரிகளே மேல் எனப் பட்டது.

கி.ராவின் இனக்குழு அடையாளம்: ஜெயமோகன் கூறுவதில் உள்ள சில சிக்கல்கள்

Image result for கி.ராஜநாராயணன்

"தமிழ் சூழலில் தன் வேர்களுடன் நேர்மையான உறவுள்ள எந்த படைப்பாளிக்கும் அவனது இனக்குழுத்தன்மையின் தனித்துவம் இருக்கும் என்றே நான் எண்ணுகிறேன். அந்த இனக்குழு அடையாளத்தை மறைக்கவோ, இல்லை என்று பாவனை செய்வது செய்வது நேர்மையான இலக்கியப்படைப்பாளியின் செயலல்ல.தன் வேர்களுடன் முற்றிலும் தொடர்பற்ற படைப்பாளி தனக்கென கலாச்சார சுயத்துவம் இல்லாதவனாகவே இருப்பான். " - ஜெயமோகன், ”கி.ராஜநாராயணன்: இனக்குழு அழகியலின் முன்னோடி

எனக்கு ஜெ.மோவின் இக்கூற்றில் முழுக்க உடன்பாடில்லை.

தேவதச்சன் எந்த இனக்குழு அழகியலை முன்னெடுக்கிறார்? மனுஷ்யபுத்திரன்? ஜி.நாகராஜனின் “குறத்தி முடுக்கு” அல்லது சு.ராவின் “பல்லக்கு தூக்கிகளில்” எந்த இனக்குழு அடையாளம் உள்ளது?

Thursday, August 25, 2016

மாணவர்களுடன் ஜெயமோகன்: ஒரு கொடுப்பினை


ஜெயமோகன் சிங்கப்பூரின் National Institute of Education இல் writer in residency ஆக தங்கி இருக்கிறார். இது பற்றின சேதியை straitstimes.com எனும் இணையதளத்தில் படித்தேன்.
Writer in residency என்பது ஐரோப்பிய தேசங்களில் உள்ள ஒரு வழமை. ஒரு எழுத்தாளரை அழைத்து பல்கலைக்கழகம் ஒன்றில் தங்கி எழுத வாய்ப்பளிப்பார்கள். அசோகமித்திரன் தனக்கு இவ்வாறு கிடைத்த வாய்ப்பின் போதான அனுபவங்களை ஒற்றன் நாவலில் எழுதியிருக்கிறார்.
சிங்கப்பூரின் NIEஇல் இப்போது தான் இந்த தமிழ் writer in residency கொண்டு வந்திருக்கிறார்கள். முதன்முதலாக ஜெயமோகனும் மற்றொரு சிங்கப்பூர் எழுத்தாளர்களும் அழைக்கப்பட்டுள்ளார்கள். எட்டு வாரங்கள் அங்கு தங்கி எழுதலாம். அவ்வப்போது மாணவர்களுடன் உரையாடலாம். இந்த வாய்ப்பு ஜெயமோகனுக்கு எந்த அளவுக்கு பயன்படும் என்பதை விட அங்குள்ள மாணவர்களுக்கு ஒரு கொடையாக இருக்கும். (அவர்கள் அதை பயன்படுத்த தெரிந்தவர்கள் என்றால்.)

Wednesday, August 24, 2016

ஐரோம் ஷர்மிளா: துரோகமா சிந்தனை முதிர்ச்சியா? -

Irom Sharmila  

ஐரோம் ஷர்மிளா சில வருடங்களுக்கு முன்பும் தன் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்து சகஜ வாழ்வுக்கு திரும்ப விருப்பம் தெரிவித்திருந்தார். அவருக்கு திருமணம் செய்ய விருப்பம் என்று கூட கூறப்பட்டது. ஆனால் அப்போது அவரைச் சுற்றியுள்ள போராளிகள், அரசியல் ஆர்வலர்கள் நெருக்கடி கொடுத்து அவரை தொடர செய்தனர்.
இப்போது 16 வருடங்களுக்கு பின் அவராகவே தன் விரதத்தை முடித்து விட்டார். மையநீரோட்ட அரசியலுக்கு திரும்ப ஆசைப்படுவதாய் கூறுகிறார். மணிபூர் முதல்வராகப் போவதாய் தெரிவிக்கிறார். இதை ஒரு நேர்மறையான திருப்பமாகவே பார்க்கிறேன். ஆனால் அவரது ஊரிலுள்ள இடதுசாரி சாய்வுள்ள அரசியல் போராளிகள் இப்போது ஷர்மிளாவை ஒரு துரோகியாய் சித்தரிக்க துவங்கி விட்டார்கள். தமக்காய் 16 வருடங்கள் உணவின்றி பட்டினி கிடந்து போராடியவரை இரண்டு இடங்களில் மக்கள் ஏற்க மறுத்து திரும்ப அனுப்பி இருக்கிறார்கள். ஷர்மிளா பற்றி தமிழில் உள்ள “போராளி”, “கலகவாதி” பிம்பமும் மெல்ல மெல்ல இனி சரியத் துவங்கும். ஏன் அவரது இத்தனை வருட பங்களிப்பை மறுத்து அவரை துரோக்கி ஆக்குகிறார்கள்?

Tuesday, August 23, 2016

காஷ்மீர் பிரச்சனை - எரியூட்டப்படும் குரங்கின் வால்

மத்திய அரசின் காஷ்மீர் கொள்கை தெளிவானது. ஒரு பக்கம் அவர்கள் காஷ்மீர் பற்றி எரிந்து கொண்டிருப்பதை விரும்புகிறார்கள். இதன் மூலம் பாகிஸ்தான் இந்தியாவுடன் போர் முனையில் நிற்கிறது எனும் பிம்பத்தை, பதற்றத்தை உருவாக்கி மதவாதம் + தேசியவாதத்தை மக்களிடையே தூண்டி விட வேண்டும். அதிகமான ராணுவத்தினர் குவிக்கப்பட்டு, பல இடங்களில் போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்துவதன் மூலம் காஷ்மீரிய மக்களின் உணர்ச்சிகளை தூண்டுவது, போராட்டக்காரர்களை தொடர்ந்து தாக்குவதன் மூலம் போராளிகளுக்கு மறைமுக ஊக்கம் கொடுப்பதை காங்கிரஸ் அரசும் செய்தது, இப்போது அதையே பா.ஜ.கவும் செய்கிறது.

Sunday, August 21, 2016

சமகால நுண்ணுணர்வை எப்படி வரையறுப்பது?


 சென்னை-28 படத்தில் வரும் ஆம்புலன்ஸ் காட்சி சமகால மனநிலைக்கு ஒரு உதாரணம். ஆம்புலன்ஸில் கிரிக்கெட் ஆடுவதற்கான உபகரணங்களுடன் ஆம்புலன்ஸ் டிரைவர் வருகிறார். அவர் ஏதோ ஆஸ்பத்திரிக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள நோயாளியை கொண்டு வருகிறார்கள் என மக்கள் ஒதுங்கி வழி விடுகிறார்கள். ஒதுங்கி வழி விடும் நல்லவர்கள் இந்த தலைமுறையில் வாழும் போன தலைமுறையினர். அந்த ஆம்புலன்ஸ் டிரைவரும் அவன் நண்பர்களும் சமகால மனநிலையின் பிரதிநிதிகள்.
 ஒதுங்கி வழி விடும் நல்லவர்களில் இளைஞர்களும் வயதானவர்களும் இருப்பார்கள். எல்லாவற்றையும் விளையாட்டுத்தனமாய் காணும் பிடிப்பற்ற தலைமுறையில் வயதானவர்களும் இருப்பார்கள். இது ஒரு மனநிலை. ஒரு போக்கு. வயதுக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லை.
குறிப்பு: மேலே உள்ள யுடியூப் லிங்கில் 23: 40வில் வரும் காட்சி

கதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்: ஆங்கில படங்களின் சாயல் கொண்ட த்ரில்லர்

 Image result for கதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்
கோ. அழகுச்செல்வன் எனும் நண்பர் என் நாவலுக்கு அனுப்பிய ஒரு சிறு விமர்சனம். அவரது அனுமதியுடன் இங்கு பிரசுரிக்கிறேன்:

வணக்கம்

நீங்கள் சமீபத்தில் எழுதியகதையின் முடிவுக்கு வந்துவிட்டீர்கள்நாவலைப் படித்தேன்....நன்றாக இருந்தது...சைக்கோ த்ரில்லர் நாவல்கள் தமிழில் குறைவு...இந்த நாவல் எனக்கு பல ஆங்கில படங்களின் சாயல் தெரிந்தது...இருந்தாலும் எனக்கு நாவல் பிடித்திருந்தது...