Tuesday, July 5, 2016

ஆயிரம் சாவிகளில் ஒன்று

வணக்கம் அபிலாஷ்
 உங்கள் உடல் நலம் பற்றிய பகிர்வுகள் பார்த்தேன். கவலையாக இருந்தது. உளநிலை, மன அழுத்தம் அதன் தொடர்ச்சியான சிக்கல் போன்றவற்றின் பாதிப்புகள் எனக்கும் உண்டு. வாசிப்பும் தேடலும் தான் இதற்கு விடுதலை என நினைக்கின்றேன். தத்துவங்கள் பற்றிய தேடல் எம்மைக் குழப்பகரமாக்குகின்றதோ என்றும் சில சமயம் நினைக்கத் தோன்றுகின்றது. எனக்கு இதுவிதமான மன அழுத்தச் சிக்கல்கள் இருந்தபோது பலர் தீவிரமான தத்துவம் குறித்த வாசிப்பைக் கைவிட்டு "லைட் ரீடிங்" ஆக வாசிக்கச் சொன்னார்கள். ஆனால் முரணாக எனக்கு நீட்சேயினை வாசித்ததும், அரிஸ்ரோட்டிலை சிறிது வாசித்ததும், பெரிதும் உதவியாகவும் நான் மன உறுதி பெறவும் உந்துதலாக அமைந்தது. எப்படி இருப்பினும், கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது தொடர்ந்து உரையாடுவோம்.
 என்றென்றும் அன்புடன் அருண்மொழிவர்மன்
முக்கியமான பார்வை அருண். எனக்கு எரிக் புரோமின் Fear of Freedom ஆச்சரியமாக மன அழுத்தத்தில் இருந்து மீள உதவியது. இது ஒவ்வொருவரின் இயல்பு பொறுத்தது என நினைக்கிறேன். சிந்தனாபூர்வமாய் வாழ்வை அணுகுபவர்களுக்கு சிந்தனையே விடுதலை அளிக்க முடியும். ஆயிரம் பழைய சாவிகள் குவிந்த ஒரு பையில் இருந்து தமக்கான ஒற்றை சாவியை சலித்து தேடுவது போலத் தான் அத்தகையோருக்கு வாசிப்பும் சிந்தனையும் இருக்கும். கிடைத்தால் வாழ்க்கையின் கதவு திறக்கும்!


No comments: