Sunday, July 31, 2016

“கதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்”: ஒரு நல்ல விறுவிறுப்பான நாவல்

நண்பர் அரிசங்கர்கதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்நாவலுக்கு ஒரு சிறு மதிப்புரையை மின்னஞ்சல் அனுப்பி இருந்தார். அதை அவர் அனுமதியுடன் பகிற்கிறேன்:
வணக்கம்,
நான் சமீபத்தில் தங்களின் கதை முடிவுக்கு வந்துவிட்டீர்கள் நாவலைப் படித்தேன். நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல விறுவிறுப்பான நாவலைப் படித்த திருப்தி. அனைவரும் உறங்கிய பின் நடு இரவில் படித்ததால் அந்த அனுபவத்தை விவரிக்க இயலவில்லை. அதை பற்றிய சிந்தனை இரண்டு நாட்களுக்கு அகலவில்லை. ஒரு பெண் பிள்ளையின் தந்தையாக படிக்கும்போதும் சரி, படித்து முடித்ததும் சரி எனக்கு சற்று படபடப்பாகவே இருந்தது. ஒரு விதமான பயம் நிரந்தரமாக மனதிற்க்குள் வந்துவிட்டது. சுவாதி கொலை அதை மேலும் அதிகரித்து விட்டது. எப்போதும் இந்த சமூகம் எப்படி இயங்குகிறதோ அப்படியே தான் அந்த காலத்தின் கலை படைப்பும் அமையும்.

குறிப்பு: சில வருடங்களுக்கு முன் நடத்த ஆருக்ஷி தல்வார் கொலை வழக்கு தான் தங்களின் கருவாக இருக்கும் என நினைக்கிறேன். தல்வார் திரைப்படத்தின் திரைகதையும் உங்கள் நாவலும் கிட்டத்தட்ட ஒரே கோட்டில் தான் பயணிக்கிறது. நடந்த சம்பவத்தை தமிழ் சூழலுக்கு தகுந்த போல் அமைத்தது தங்களின் திறமைக்கு ஒரு சான்று. உங்களின் மற்ற படைப்புகளை படிக்க ஆவலாக உள்ளேன்.
நன்றி
அரிசங்கர்.

No comments: