ஸ்வாதி கொலையாளியின் கைது: மேலும் சில கேள்விகள்


ஸ்வாதியின் குற்றவாளி என போலிசால் நெல்லையில் கைது ராம்குமார் என்பவரை செய்திருப்பது உண்மையில் இவ்வழக்கை முடித்து வைக்காமல் மேலும் சிக்கலாக்குகிறது. பல கேள்விகள் எழுகின்றன.
குற்றம் இழைத்தவன் தொழில்முறை கொலையாளி என்பதற்கான பல சாத்தியங்கள் உள்ளன. ஆனால் முரணாக இந்த கைது கொலை ஒரு மனம் பிறழ்ந்தவனின் குற்றம் என நிரூபிக்க முயல்கிறது.
இது ஏன் ஒரு உணர்ச்சிவயப்பட்டு நிகழ்த்தப்பட்ட குற்றம் இல்லை?

1) குற்றவாளி தன் ஆயுதத்தை ரேகை படாமல் துடைத்து விட்டு கைவிட்டு போயிருக்கிறான். ஏனென்றால் ஆயுதத்துடன் பிடிபட்டால் அவன் தப்பிக்க முடியாது. அதுவே பிரதான ஆதாரம் ஆகும்.
2) தடயம் கிடைக்கக் கூடாது என அவள் போனை எடுத்து போயிருக்கிறான். ஒரு stalker அவளுடன் போனில் பேசியிருக்க முடியாது. பிறகு அவனுக்கு போன் எதற்கு?
3) கொல்லும் முறை, இடம், தப்பிக்கும் வழி, தடயத்தை அழிப்பது என இத்தனையும் யோசித்து செய்யும் ஒருவர் உணர்ச்சிவசப்பட்ட மனம் பிறழ்ந்த கொலையாளியாக இருக்க முடியாது. தில்லியில் ஒரு பெண்ணை பலாத்காரம் செய்து கொன்றவர்கள் அவளை துன்புறுத்த பயன்படுத்திய கம்பியை எடுத்து சென்று தம்முடன் வைத்திருந்தார்கள்.சென்னையில் சமீபத்தில் தன் மனைவி, குழந்தையை கொன்றவனும் பிணத்துடனே இருந்தான். அவன் தடயங்களை விட்டு சென்றான். பைக்கை கூட கடற்கரையில் பார்க் செய்து விட்டு அதை எடுக்க செல்லும் போது முட்டாள்தனமாய் மாட்டிக் கொண்டான். ஆனால் ஸ்வாதி விசயத்தில் இது போன்ற தவறுகள் நிகழவில்லை.
4) கொலை நடந்த பின் அவன் ஏன் தன் சொந்த வீட்டில் சென்று பதுங்க வேண்டும்? இவ்வளவு திட்டமிடத் தெரிந்தவனுக்கு வேறு ஊருக்கு சென்று தப்பிக்க தெரியாதா?
5) ஒரு பெண்ணின் கவனத்துக்காய் ஏங்கி பின் தொடரும் ஒருவன் அவளை ஏன் கொடூரமாய் வெட்டி சாய்க்க வேண்டும்? இதுவரை எந்த stalker ஆவது இப்படி கொன்றதாய் வரலாறு உள்ளதா?
உள்ளது. ஆனால் இந்த பின் தொடரும் கொலையாளிகள் பெரும்பாலும் கொல்லப்படும் பெண்களுக்கு நன்கு தெரிந்தவர்களாய் இருப்பார்கள். சில வழக்குகளில் பரிச்சயமில்லாதவர்களும் குற்றம் இழைத்ததுண்டு. ஆனால் எப்போதும் இந்த வகை குற்றங்களில் ஒரு சீரற்ற தன்மை இருக்கும். தொழில்முறை கொலையாளிகளுக்கு எப்படி ஒரே வெட்டில் சாய்ப்பது என தெரியும். ஆனால் உணர்ச்சியால் தூண்டப்பட்ட கொலையாளிகள் உயிர் போகாதோ எனும் கவலையிலும் பதற்றத்திலும் திரும்பத் திரும்ப வெட்டவும் குத்தவும் செய்வார்கள். தில்லியில் ஒரு பல்கலைக்கழக மாணவி சந்தோஷ் என்பவனால் ஹெல்மெட்டால் அடித்தே கொல்லப்பட்டாள். ஜப்பானிலும் அமெரிக்காவிலும் நடந்த குற்றங்களிலும் பெண்கள் துப்பாக்கியால் முகத்தில் சுடப்பட்டிருக்கிறார்கள், வயிற்றில் குத்தப்பட்டிருக்கிறார்கள். ஸ்வாதி கொலையில் சில நொடிகளில் அவள் கழுத்து வெட்டப்பட்டு சில நிமிடங்களில் உயிரிழந்தது, கொலையாளிக்கு அவள் இறந்து விடுவாள் என்பதில் இருந்த தன்னம்பிக்கை வழக்கமான ஸ்டால்க்கர் குற்றங்களில் இருந்து இதை தனித்து காட்டுகிறது. அதே போல் இக்கொலைக்கு பயன்படுத்திய அருவாள், கொலை நடந்த காலை நேரம் ஆகியவை நம் ஐயங்களை வலுவாக்குகின்றன.
6) கொலை செய்த உடன் அவன் தப்பி செல்லும் போது தன் போனில் பேசியதாக சாட்சிகள் கூறுகிறார்கள். அப்படி என்றால் அவனுக்கு துணை நின்றவர்களாகவே அவர்கள் இருக்க வேண்டும். ஸ்டால்க்கருக்கு எதற்கு துணை? ஒரு ஸ்டால்க்கர் ஏன் கொலை நடந்து முடிந்த பின் இன்னொருவரை அழைத்து தகவலை பகிர வேண்டும்?
7) ராம்குமாருடன் மேலும் பத்து பேர் அவரது மேன்ஷனில் தங்கி இருந்ததாய் கூறுகிறார்கள். அவர்களும் ஒருவாரமாய் மாயமாகி விட்டார்கள். அவர்கள் யார்? ராம்குமார் “காதல் கொண்டேன்” தனுஷ் போன்ற காதல் வெறி கொண்டு கொலை செய்தவர் என ஒரு சித்திரம் இப்போது மீடியாவில் உருவாகி வருகிறது. இது உண்மை எனில் அவருக்கு எப்படி துணையாக நண்பர்கள் செயல்பட முடியும்? ஒருவரின் அதர்க்கமான கொலை விருப்பத்தை எப்படி மேலும் பத்து நண்பர்கள் ஆதரிப்பார்கள்? 

7) இறுதியாக, சில மாதங்களுக்கு முன்பு ஸ்வாதியை அதே ரயில் நிலையத்தில் வைத்து கன்னத்தில் அறைந்த அந்த சிகப்பான இளைஞன் யார்? ஏன் ஸ்வாதி அவன் அடிகளை அமைதியாக தாங்கினாள்? அவன் ஸ்வாதியுடன் நெருக்கமான உறவு கொண்டிருந்த ஒரு ஆதிக்க மனம் கொண்ட ஆணாக இருக்கலாம். அவன் அவளை பொதுவெளியில் வைத்து தண்டிக்க உத்தேசித்து அப்படி அறைந்திருக்கலாம். அவனுக்கும் இப்போது நெல்லையில் கைதாகி உள்ள இந்த ராம்குமாருக்கும் என்ன தொடர்பு உள்ளது என்பதையும் விசாரிக்க வேண்டும். அந்த சிகப்பான ஆசாமிக்கு இதில் நேரடி தொடர்பு இல்லையென்றாலும் உண்மையான குற்றவாளிகளை அடையாளம் காட்ட அவர் உதவ முடியும். ஏனென்றால் இந்த ராம்குமார் இவ்வழக்கின் வால் நுனி மட்டுமே என என் உள்ளுணர்வு கூறுகிறது.

Comments

Unknown said…
ஆமாம். நானும் இந்தக் கோணத்தில் யோசித்திருக்கிறேன். இந்தப் பையனைப் பார்த்தால் இது மேலும் உறுதிப்படுகிறது. பணத்துக்காக திட்டமிட்டு கொலை செய்த கூலி. இதில் ஒருதலைக் காதல் என்று சொல்வதெல்லாம் நம்பும்படி இல்லை. அந்த கைப்பேசியில் ஏதோ முக்கியமான தகவல் யாரோ ஒருவருக்கு தேவைப்பட்டிருக்கிறது. மேலும் இது உணர்ச்சிவசப்பட்டு செய்த கொலையும் இல்லை. நன்கு ஆராய்ந்து, கால நேரம் பார்த்து, திட்டமிட்டு செய்த கொலை. இதில் ஏதோ பெரிய கை அடங்கியிருப்பதாகவே உள்ளுணர்வு தோன்றுகிறது. நமக்கே தோன்றும் போது போலீசுக்கு தோன்றாதா. கண்டிப்பாக அவர்களை சுதந்திரமாக 'வேலை" செய்யவிட்டாலே போதும். மொத்த நெட்வொர்க்கையும் பிடித்துவிடுவார்கள். நீதி வெல்லவேண்டும். குற்றம் புரிந்தவர்கள் "அனைவரும்" தண்டிக்கப்பட வேண்டும். இதுபோல் மேலும் நடக்காமல் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதே நமது பிரார்த்தனை. நன்றி
விஜயன்
உங்கள் கற்பனை உண்மையெனில் ராம் குமாரே அந்த உண்மைகளை போலிசாரிடம் சொல்வார்.
vivek kayamozhi said…
மிகவும் சரியான கோணத்தில் புதிய சந்தேகங்களை எழுப்பி உள்ளீர்கள்.
பார்ப்போம்..இன்னும் என்னென்ன கதைகள் வருகின்றன என்று
Ram kumar is a just a weapon! The professionalism speaks
sivaje36 said…
நீங்க சொல்வது உண்மையா இருக்கலாம்
K Rajesh kumar said…
Eyewitness தமிழரசன் கூறும் போது அன்று கன்னத்தில் அறைந்த வெளிர் நிற ஆள்தான் சுவாதி கொலை நடந்த இடத்தில் இருந்து வேகமாக சென்றார் என்று கூறி இருந்தார் எனவே அந்த வெளிர் நிற ஆசாமி யார்?
Unknown said…
something wrong...
Rasitha Bala said…
something wrong...