Sunday, July 31, 2016

மனதுக்குள் கேட்கும் குரல்

Image result for silk smitha

இதைப் படிக்கும் போது உங்களுக்குள் ஒரு குரல் ஒலிக்கிறதே அது யாருடையது? உங்களுடையது தான். ஆனால் நீங்கள் தான் வாயே திறக்கவில்லையே? இது எப்படி நிகழ்கிறது. அறிவியல் ஒரு விளக்கம் கொடுக்கிறது. பேச்சுக்கான சில நரம்பணுக்கள் வாசிக்கும் போதும் செயல்படுகின்றன. அதனால் தான் ”குரல்” கேட்கிறது.

அழுக்கு சாக்ஸ்

Image result for அழுக்கு சாக்ஸ்
பெருந்தேவியின் மொழி எழுபதுகளின் கவிதைகளுக்கு உரியது. ஆனால் அவர் பேசுவது இக்காலத்தின் சிக்கல்கள்: குழப்பமான, இலக்கற்ற மனிதனின் குரல், சுயபகடி, அபத்தம் ஆகியவை.
”அழுக்கு சாக்ஸ்” தொகுப்பில் நான் ரசித்த மற்றொரு கவிதை “பிறழ் மனம்”. இது ஆத்மாநாமுக்கான ஒரு ஹோமெஜ். அதில் ஒரு வரியை திரும்ப திரும்ப மனம் மீட்டியது:
“எல்லா கிறுக்குகளும் நீட்சேயில்லை
ஆத்மாநாமில்லை
பைத்தியம் மருகுகிறது”

ஆங் லீயும் டோங் லீயும்: மிஸ் பண்ணின முருகதாஸ்

Image result for ezham arivu dong leeஇன்றைய இந்துவில் நமன் ராமசந்திரன் கபாலியில் உள்ள குறியீடுகள் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். படத்தில் வரும் ஒரு சீன பாத்திரம் பெயரை ஆங் லீ என ரஞ்சித் வைத்தது ஆங் லீ எனும் இயக்குநருக்கான அவரது homage என்கிறார். இந்த அறிவு முருகதாஸுக்கு இருந்திருந்தால் அவர்ஏழாம் அறிவில்டோங் லீ பாத்திரத்துக்கு குரசாவோ என பெயர் வைத்திருப்பார். பாவம் முருகதாஸ், அவர் ஒரு வணிக இயக்குநர், அவருக்கு ஹோமேஜ் எல்லாம் தெரியாது!

“கதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்”: ஒரு நல்ல விறுவிறுப்பான நாவல்

நண்பர் அரிசங்கர்கதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்நாவலுக்கு ஒரு சிறு மதிப்புரையை மின்னஞ்சல் அனுப்பி இருந்தார். அதை அவர் அனுமதியுடன் பகிற்கிறேன்:
வணக்கம்,
நான் சமீபத்தில் தங்களின் கதை முடிவுக்கு வந்துவிட்டீர்கள் நாவலைப் படித்தேன். நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல விறுவிறுப்பான நாவலைப் படித்த திருப்தி. அனைவரும் உறங்கிய பின் நடு இரவில் படித்ததால் அந்த அனுபவத்தை விவரிக்க இயலவில்லை. அதை பற்றிய சிந்தனை இரண்டு நாட்களுக்கு அகலவில்லை. ஒரு பெண் பிள்ளையின் தந்தையாக படிக்கும்போதும் சரி, படித்து முடித்ததும் சரி எனக்கு சற்று படபடப்பாகவே இருந்தது. ஒரு விதமான பயம் நிரந்தரமாக மனதிற்க்குள் வந்துவிட்டது. சுவாதி கொலை அதை மேலும் அதிகரித்து விட்டது. எப்போதும் இந்த சமூகம் எப்படி இயங்குகிறதோ அப்படியே தான் அந்த காலத்தின் கலை படைப்பும் அமையும்.

மேய்ச்சல் வெளி - 1

(இது தினமலரில் நான் எழுதி வரும் பத்தி. முக்கியமான இணையதளங்கள், பிளாகுகள், பேஸ்புக் பக்கங்களை அறிமுகம் செய்கிறேன்.)

சொல்வனம் (www.solvanam.com)

ஒரு பெட்டிக்கடையில் என்னென்ன கிடைக்கும்: வாழைப்பழம், பிஸ்கட், கடலைமிட்டாய், புளிப்பு மிட்டாய், சிகரெட், கொசுவத்தி, பத்திரிகை…. ஆனால் எங்கள் ஊரில் பெட்டிக்கடைகளில் பழரசமும் கிடைக்கும். இன்னும் சொல்வதானால் அவை பீடா கடையாகவும் இயங்கும். சென்னையில் ஒரு டாஸ்மாக் அருகே உள்ள ஜூஸ் கடையில் மாலையில் அதிகம் விற்பவை மாங்காய் துண்டுகளும், பிளாஸ்டிக் கோப்பைகளும். இப்படி தொடர்பற்ற பல தேவைகளை திருப்தி செய்யும் பெட்டிக்கடை தான் இலக்கிய இணைய பத்திரிகைகள்.

Thursday, July 28, 2016

ஞானக்கூத்தனுக்கு அஞ்சலி

ஞானக்கூட்டத்துக்கு ஆழ்ந்த அஞ்சலி.

Image result for ஞானக்கூத்தன்

நான் நவீன கவிதையை படிக்க துவங்கிய காலத்தில் நண்பர்கள் ஞானக்கூத்தனை சிலாகித்து பாராட்டுவதை கேட்டிருக்கிறேன். ஆனால் நான் அவரை அப்போது படிக்க தவறவிட்டேன். ஆங்கில இலக்கிய படிப்பு எனக்கு பல நவீன ஐரோப்பிய கவிஞர்களை அறிமுகப்படுத்தியது. அதன் பிறகு நான் அப்பின்புலத்தில் தமிழின் நவீன கவிஞர்களை அறிமுகப்படுத்திக் கொண்டேன். இவர்களுக்கு பிறகு தான் ஞானக்கூட்டத்தின் மொத்த கவிதைத் தொகுப்பை எடுத்து வாசித்தேன். இயல்பாகவே எனக்கு ஏமாற்றமாக இருந்தது. எனக்கு ஞானக்கூத்தன் ஒரு நவீன கவிஞரே அல்ல எனப் பட்டது. நவீன கவிதையின் வளர்ச்சிக்கு வைரமுத்து, மேத்தா, அப்துல் ரகுமானுக்கு கூட ஒரு பங்கு உண்டென சொல்வேன். கலீல் கிப்ரான் கூட நவீன கவிதை வாசகனுக்கு முக்கியமானவர் தான். ஆனால் ஞானக்கூத்தன் இவர்களுக்கு வெகுபின்னால் இருக்கிறார். அவர் எழுதியவை ஒருவித செவ்வியல் தனிப்பாடல்கள். சற்றே லகுவான நேரடி மொழியில் எழுதப்பட்ட மரபுக் கவிதைகள். அவரது பகடியும் எனக்கு வெகுசிலாக்கியமாய் பட்டதில்லை.