Thursday, June 30, 2016

”மூன்றாம் நதி”

Image result for மூன்றாம் நதி
நேற்று ”மூன்றாம் நதி” படித்தேன். நிறைய இடங்கள் சரளமாக சுவாரஸ்யமாக இருந்தது. எனக்கு இந்த நாவல் நாஞ்சில் நாடனின் “சதுரங்க குதிரை” போன்ற நாவல்களை ஏனோ நினைவுபடுத்தியது. அதே போல அழகிய பெரியவனின் ஒரு குறுநாவல் (தலைப்பு மறந்து விட்டது) நினைவு வந்தது. அந்நாவலில் ஒரு இளம் பெண் கிராமத்தில் இருந்து சென்னையில் ஒரு சேரியில் வசிப்பாள். கணவன் குற்றச்செயல்களில் ஈடுபட்டு இறந்து விடுவான். பிறகு அவள் தன் கணவனின் முதலாளியான ஒரு அரசியல்வாதிக்கு இரையாவாள். பிறகு மெல்ல மெல்ல அவள் ஒரு விபச்சாரியாக்கப்படுவாள். ஒரு காட்சி பயங்கரமாக இருக்கும். அவளை ஒரு தெருவில் அரைமயக்கமாய் படுக்க வைத்து ஒருவன் வரிசையாக வாடிக்கையாளர்களை அழைத்து வந்து பணம் பண்ணுவான்.

Wednesday, June 29, 2016

ஸ்வாதி படுகொலையும் போலீஸின் நாடகமும்

குற்றவாளியின் சி.சி.டிவி படம்
ஸ்வாதி படுகொலை வழக்கில் தொடர்ந்து முரண்பாடான தகவல்கள் போலீஸ் தரப்பில் இருந்து கிடைத்து வருகின்றன. நேற்று ஒரு செய்தி இணையதளம் போலீஸ் குற்றவாளி தென் தமிழகத்தை சேர்ந்த வாடகைக் கொலையாளி என ஐயப்படுவதாயும், அங்கு விசாரணை முடுக்கி விடப்படுவதாயும் தெரிவித்தது. குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட கத்தி தென் தமிழகத்துக்கு உரித்தானது என்பது காரணம் எனப்பட்டது.

Sunday, June 26, 2016

கச்சத்தீவு: யாருக்கு சொந்தம்


கச்சத்தீவு விவகாரம் பற்றி சமீபத்தில் சட்டமன்றத்தில் கத்தி வீச முயன்று அது திமுக அதிமுக இரண்டு தரப்பினருக்கும் ரத்தக்களரியாய் முடிந்து போனது. கச்சத்தீவு இலங்கைக்கு அளிகப்பட்டதன் வரலாற்றுக்கு ரெண்டு பக்கங்கள் உண்டு
1.   கச்சத்தீவு ராமநாதபுரம் மன்னர் குடும்பத்தின் உடைமையாக இருந்தது வரலாறு. அதன் பின் காலனிய ஆட்சியின் கீழ் அது வருகிறது. அப்போது அது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் பொதுவாக இருக்கிறது. வெள்ளையரகள் நமக்கு விடுதலை அளித்து வெளியேறுமுன் தம் காலனிய நாடுகளின் எல்லைக்கோடுகளை வகுக்கிறார்கள். அப்போது கச்சத்தீவு இலங்கைக்கு போய் விடுகிறது. ஆனால் இந்தியா தொடர்ந்து அதற்கு வரலாற்று காரணம் காட்டி உரிமை கோருகிறது. இறுதியில் 1974இல் இந்திரா காந்தி ஆட்சியின் போது ஒரு ஒப்பந்தம் மூலம் கச்சத்தீவு இலங்கையிடம் ஒப்படைக்கப்படுகிறது. நம் மீனவர்கள் அங்கு மீன் பிடிக்கலாம், சென்று வரலாம் என இலங்கை ஏற்றுக் கொள்கிறது.

”கதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்”: சரஸ்வதி காயத்ரி


(சரஸ்வதி காயத்ரியின் முகநூல் பதிவு)
நேற்று வாசக சாலையின் 17 வது சந்திப்பில் அபிலாஷ் சந்திரனின் " கதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்" என்னும் துப்பறியும் நாவலை பற்றி பேசக்கிடைத்த வாய்ப்பு இலக்கிய உலகில் எனக்கு இது முதல்முறை...
வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்த Sridevi Ramya A மற்றும் வாசக சாலையின் Venkatraman Karthikeyan,என்னை உற்சாகப்படுத்தி பேசவைத்த Thendral Sivakumar அனைவருக்கும் நன்றி...
இந்தக் கதையை வாசித்து முடித்தவுடன் அதில் நடைபெறுவதாக சொல்லப்படும் சம்பவங்களும்,அவற்றை நடத்துபவர்களும் என்னை பயமுறுத்தினர்...

ஸ்வாதி கொலையும் தற்காப்பும்

Image result for swathi murder
ஸ்வாதி படுகொலையின் காரணங்கள் பற்றி உங்களுக்கு தெரிந்த அளவே எனக்கும் தெரியும்.
 கொன்றது வாடகைக் கொலையாளியாக இருக்கலாம் என பரவலாய் கூறப்படுகிறது. இன்று நண்பரும் இயக்குநருமான வினோத் மலைச்சாமியிடம் பேசும் போது அவர் தான் நேற்று நெல்லையில் இருக்கும் போது போலீஸ் சாலையில் செல்லும் வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததை பார்க்க நேர்ந்ததாய் குறிப்பிட்டார். நெல்லை வாடகைக் கொலையாளிகளின் கூடாரம் என்றார் வினோத். ஆக போலீஸும் இந்த கோணத்தில் விசாரிப்பதாய் நாம் அனுமானிக்கலாம். மேலும் அந்த பெண் வாயிலும் கழுத்திலும் பட்டாக்கத்தியால் வெட்டப்பட்டுள்ள முறை இந்த ஐயத்தை உறுதிப்படுத்துகிறது. வினோத் என்னிடம் கூறிய மற்றொரு விசயம் வாடகைக்கொலையாளிகள் எப்போதும் விடிகாலையில் தான் கொலை செய்வார்கள் என்பது.
 நான் அவரிடம் கேட்டேன்: ”கொலையாளி ஸ்வாதிக்கு தெரிந்தவர்கள் இல்லை என்றால் ஏன் அவர்கள் நான்கு நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்திருக்க வேண்டும்?”

Saturday, June 25, 2016

"கதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்": விமர்சனக் கூட்ட காட்சிகள்

வாசக சாலை அமைப்பினரான ராஜராஜன், கார்த்திகேயன் மற்றும் பார்த்திபனுடன்

ஒரு குரூப் புகைப்படம்

நண்பர்களும் பார்வையாளர்களும்

கார்த்திகேயன் பேசுகிறார்

கவிஞர் மனுஷியுடன் என் மகன்

எழுத்தாளர் விஜய மகேந்திரன் பேசுகிறார்

நான், விஜய மகேந்திரன் மற்றும் நண்பர் முரளி

கவிஞர் கீதாஞ்சலி பிரியதர்ஷினியுடன்

இயக்குநர் ராம் மற்றும் விஜய மகேந்திரனுடன் ஒரு செல்பி

இயக்குநர் ராம் பேசுகிறார்

சரஸ்வதி காயத்ரியுடன்

வாசகர் பார்வையில் சரஸ்வதி காயத்ரி பேசுகிறார்

ஒரு நிறைவான தருணம்


Friday, June 24, 2016

”கதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்”: வாசக சாலை விமர்சனக் கூட்டம்
நேற்று வாசக சாலை சார்பில் நடந்த எனது “கதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்” நாவலுக்கான விமர்சனக் கூட்டம் ஒரு எழுத்தாளனாய் எனக்கு மிகவும் நிறைவளித்தது. வேலை நாள் என்பதால் கூட்டம் சேருமா என எனக்கு ஆரம்பத்தில் சற்று பதற்றம் இருந்தது. ஆனால் தான் போய் சேருமுன்னரே பதினைந்து பேர் அரங்கில் காத்திருந்ததாய் நிகழ்ச்சியின் அமைப்பாளர் கார்த்திக் வெங்கட்ராமன் சொன்னார். சற்று நேரத்தில் அரங்கு நிறைந்து விட்டது.

Thursday, June 23, 2016

நீயெல்லாம் ஒரு தாயா?

Image result for writer cartoon
பிளாகில் மட்டும் எழுதினால் பிளாகர், பேஸ்புக்கில் எழுதினால் பேஸ்புக் பதிவர், இதையே பத்திரிகையில் எழுதினால் ”எழுத்தாளர்”. எப்படி இந்த பட்டங்களை தீர்மானிக்கிறார்கள் என எனக்கு இன்று வரை புரியவில்லை.
 இப்படி எழுத்துக்களுக்கு தனி குணம், வகைமை உண்டென்றும் எனக்கு தோன்றவில்லை. சாரு எண்பதுகளின் இறுதியிலும் தொண்ணூறுகளின் துவக்கத்திலும் எழுதிய பத்திரிகை கட்டுரைகளை படியுங்கள். அவற்றில் இன்றுள்ள இணைய எழுத்தின் எள்ளலும் சரளமும் மிளிரும் ஸ்டைல் அப்போதே இருக்கும். நீளமாய் சீரியஸாய் பேஸ்புக், பிளாகில் எழுதுபவர்களும் இருக்கிறார்கள். பத்திரிகையில் அரட்டை மொழி பயன்படுத்துகிறவர்களும் உண்டு. எப்படி இவர்களை வகை பிரிக்கிறார்கள்?

மறக்காமல் வந்து விடுங்கள்


இன்று மாலை ஆறு மணிக்கு தமிழ் ஸ்டுடியோவின் ப்யூர் சினிமா புத்தகக் கடை அரங்கில் (வடபழனி கமலா தியேட்டர் அருகில்) எனது “கதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்” நாவல் குறித்து ஒரு விவாதம் நடைபெறுகிறது. இயக்குநர் ராம், கவிஞர் மனுஷி பாரதி, எழுத்தாளர்கள் மனோஜ், அருள் ஸ்காட் மற்றும் சரஸ்வதி காயத்ரி பேசுகிறார்கள். நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். 

சந்திரா சாமி ஏன் மாட்டவில்லை?
நேற்றுபுலிகளுக்கு அப்பால்நூலை தமிழாக்கிய ஆனந்த்ராஜிடம் போனில் முதன்முறையாய் பேசினேன். கல்லூரியில் தன் உறவுக்கார பையனுக்கு இடம் வாங்குவது பற்றி தகவல் கேட்க என்னிடம் தொடர்பில் வந்தவரிடம் இருபது நிமிடங்கள் அந்த புத்தகம் பற்றி உற்சாகமாய் பேசிக் கொண்டிருந்தேன்.
 அந்த நூலில் புனைவுக்கான பல வலுவான சாத்தியங்கள் உள்ளன. இதை என்னிடம் கூறியவர் சங்கர ராம சுப்பியமணியன். நானும் அப்படியே உணர்ந்தேன். குறிப்பாய் குண்டுவெடிப்புக்கு முன்பு நளினிக்கு ஏற்படும் குழப்பங்கள், நளினி, முருகனின் தலைமறைவு வாழ்க்கை, பெங்களூரில் புலிகள் தங்கியிருக்கும் வீட்டில் ஒரு வாழை மரத்தின் நிழல் விழ அது ஒரு துர்சகுனம் என அவர்கள் நம்பத் தொடங்கும் இடம் என பல தருணங்கள்.

Wednesday, June 22, 2016

விராத் கோலி: ரன் இமையம்
சமீப காலத்தில் கோலியை அடிக்கடி சச்சினுடன் ஒப்பிடுகிறார்கள். அவர் சச்சினையும் மிஞ்சி சென்று விடுவார் என முன்னாள் இங்கிலாந்து வீரர் டொமினிக் கார்க் கூறினார். அப்போது கோலி அனைவரையும் கேட்டுக் கொண்டார் “என்னை சச்சினுடன் ஒப்பிடாதீர்கள். சங்கோஜமாய் இருக்கிறது. அவர் திறமையுடன் பிறந்தவர். நான் கடுமையாய் உழைத்து இந்த இடத்துக்கு வந்திருக்கிறேன். என்னை என் அளவில் மட்டுமே மதிப்பிடுங்கள்”.

Tuesday, June 21, 2016

வாழ்க்கை எப்படி இருக்கக் கூடாது?

கார், வீடு, ஐபோன், வெளிநாட்டு பயணங்கள் இவை மட்டுமே சிலருக்கு ஒரே லட்சியமாக இருக்கிறது. அதற்காய் இரவு பகலான உழைப்பு. இவற்றை அடைந்ததும் வேறேதாவது முன்னதை விட விலை மதிப்பான ஒரு பொருளை வாங்க கனவு காண்கிறார்கள். அதற்காய் கூடுதல் பணமீட்ட முனைவார்கள். இப்படியே வாழ்க்கை முழுக்க நிரந்தர வாடிக்கையாளர்கள். இது சமூகத்தில் சுலபமாய் நற்பெயர் பெற்றுத் தருகிறது. எனக்கு இவர்களை காணும் போது ஜெயமோகன் ஒருமுறை தனிப்பட்ட உரையாடலில் சொன்னது நினைவு வரும்: “வாழ்க்கை என்பது உணவு மேஜைக்கும் கழிப்பறைக்கும் இடைப்பட்டதாய் முடிந்து விடக் கூடாது