Tuesday, May 3, 2016

உயிர்மையில் கடவுள்

இம்மாத உயிர்மையில் நான் எழுதியுள்ள “கடவுள் இருக்கிறாரா?” கட்டுரைக்கு எதிர்வினையாக எனக்கு இன்று வாசுதேவன் காத்தமுத்து எனும் வாசகர் அனுப்பிய மின்னஞ்சல் இது:
”உங்களின் கட்டுரையை வாசித்தேன். மிக அருமை. நானும் நாத்திகனாக இருந்தவன். கடவுளை அருள் வடிவானராக கற்பிதம் செய்து கொண்டு ஆத்திகரும் நாத்திகரும் விவாதம் செய்வதை பிழையாக நினைப்பேன்.பின்னர் agnostic பார்வையே சிறந்தது என தற்காலிக முடிவெடுத்தேன். உங்களின் கட்டுரையை வாசித்தது நல்ல அனுபவம்.


அக்னாஸ்டிக் என்பவர் கடவுள் இருக்கிறாரா இல்லையா எனும் ஐயத்தில் இருப்பவர். இரண்டு தரப்புகளையும் கவனிப்பவர். எனக்கு இந்த கடிதத்தின் தலைப்பு பிடித்திருந்தது: “உயிர்மையில் கடவுள்”. ஒரு நல்ல சிறுகதையின் தலைப்பாக இருக்க தகுதி படைத்தது. இன்னொரு விசயம்: உயிர்மை பத்திரிகையின் வரலாற்றில் கடவுள் பற்றி வெளிவந்த முதல் கட்டுரை இதுவாக இருக்கும் என ஊகிக்கிறேன். பெருமைப்பட அல்ல. இலக்கிய வட்டங்களில் கடவுள் பற்றி பேசுவதும் எழுதுவதும் ஒரு taboo என்பதால் சொன்னேன்.

No comments: