மகிழ்ச்சியை அளப்பதன் சிக்கல்

உலக மகிழ்ச்சி வரிசை 2016 அறிக்கை படி முதலில் இருப்பது ஸ்வீடன். நான் சமீபத்தில் கொல்கொத்தா சென்றிருந்த போது  ஸ்வீடனில் இருந்து ஒருவரை சந்தித்தேன். அவரிடம் "உங்கள் ஊர் பற்றி படித்திருக்கிறேன். உலகிலே மிக மகிழ்ச்சியான நாடாமே உங்களது. உங்களுடைய அரசின் நலத்திட்டங்கள், வசதிகள், பொருளாதார கொள்கைகள், கட்டமைப்புகள் அமெரிக்காவை விட சிறந்தவை என கேள்விப்பட்டிருக்கிறேன்."

அவர் தோளை குலுக்கியபடி சோகமாய் சொன்னார் "ஆமாம் நாங்கள் மிக மகிழ்ச்சியாக இருக்கிறோம். என் சம்பளத்தில் 60 சதவீதத்தை அரசுக்கு வரியாக கொடுக்கிறேன். அரசு எனக்கு சிறந்த மருத்துவ வசதிகள், என் பிள்ளைகளுக்கு நல்ல கல்வி வசதிகள் தருகிறது. வேறென்ன வேண்டும். ஆமாம் நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம்." வேறென்ன வேண்டும் என சொன்ன போது அவர் குரலில் இருந்த கசப்பை கண்டுகொண்டேன். அவர் பிறகு என்னிடம் அங்கு சிக்கனமாக தங்குவதற்கு விடுதி கிடைக்குமா எனக் கேட்டார். எனக்கு சற்று பரிதாபமாக கூட இருந்தது.

மகிழ்ச்சிப் பட்டியலில் 118வது இடத்தில் உள்ள நாட்டில் வாழும் நான் அவரை விட சுதந்திரமாக இருக்கிறேன். கஞ்சியோ கூழோ அதில் 60 சதவீதத்தை நான் அரசுக்கு தர வேண்டியதில்லை.

Comments

சற்று சிந்திக்க வேண்டிய ஒன்றுதான் .