மனுஷ்யபுத்திரனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்


அன்பு நண்பர் மனுஷ்யபுத்திரனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். இந்த வருடம் அவர் இரும்புக்கை மாயாவி போலாகி விட்டார். பேஸ்புக்கிலும் எழுத்திலும் அவர் தோன்றுவார். தமிழகம் எங்கும் தோன்றிக் கொண்டே இருப்பார். ஆனால் நேரில் அவரை தேடிப் போய் பார்க்கவே முடியாது. மனிதர் ஆவியாக மறைந்து விடுவார்.
நான் சென்னை வந்த பின் அவரை நீண்ட நாட்கள் சந்திக்காமல் இருந்தது இவ்வருடம் தான். இத்தனைக்கும் கடந்த ஆறு மாதங்கள் என் வாழ்க்கையின் மிக மோசமான கட்டம். அவரை சந்தித்து பேச நினைத்த நிறைய விசயங்கள் பகிராமலே போய் விட்டன. கசப்பாக, அழுத்தமாக உணரும் போது நான் மனம் விட்டு பேச விரும்புவது அவரிடம் தான். அவரது கனிவு ஒரு நிம்மதி தரும். ஒருவேளை என் துயரத்தின் இருள் அவர் மீது விழவேண்டாம் என கடவுள் நினைத்திருக்கலாம்.

ஸ்பைடர் மேன் படத்தில் ஸ்பைடர் மேன் கொஞ்ச காலம் சாதாரணமாய் வேலை பார்த்து எளிதில் காணக்கிடைப்பவராக இருப்பார். வரும் வருடம் மனுஷ் சாதாரண ’மேனாய்’ இருக்க வைக்கும்படி கடவுளை வேண்டுகிறேன்.   

Comments

மனுஷ்ய புத்திரன் சாருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். நீங்கள் புயலே வந்தாலும் தளராமல் முன்னோக்கிச் செல்பவர் என்பதை உங்கள் ஆசிரியப் பணிக்கு மத்தியிலும் நீங்கள் விடாமல் எழுதுவதன் மூலம் அறிந்து கொள்ள முடியும். தடைகளைத் துடைத்துவிட்டு புத்துணர்ச்சியோடு மீண்டு வர உங்களை வாழ்த்துகிறேன்.