பர்தாவும் பெண்ணுரிமையும் (2)

என்னுடைய கட்டுரையான “பர்தாவும் பெண்ணுரிமையும்” பற்றி தோழி ஜீவிக்கும் எனக்கும் நடந்த ஒரு சிறு உரையாடல் இது. நல்ல ஒரு விவாதப் புள்ளியை தொடுவதால் இங்கு பகிர்கிறேன்.

வணக்கம் அபிலாஷ்,

      உங்கள் 'பர்தாவும் பெண்ணுரிமையும்' கட்டுரையை படித்தேன். எனக்கு நீண்ட நாட்களாக மனதுக்குள் ஓடிகொண்டிருக்கும் 'இஸ்லாம் மற்றும் பெண்ணுரிமை' பற்றிய கேள்விகளை கேட்டு விடலாம் என்று இதை எழுதுகிறேன்.  
      
      முதலில் உங்கள் கட்டுரையை படித்ததும் எனக்கு தோன்றியதை சொல்லிவிடுகிறேன். ஆம் பர்தாவும் அணிவது அடிமைதனமும் இல்லை, ஜீன்ஸ் அணிவது விடுதலையும் இல்லை. பர்தா அணிவதும் அணியாமல் இருப்பதும் அவர்கள் விருப்பம். ஆனால் இதை ஏன் நம் மதம் நம்மை அணிய சொல்கிறது என்ற கேள்வி எழாமலே அதை அணிந்துகொல்வதிலும், அது எங்களுக்கு ஒரு தடை இல்லை என்று சொல்வதிலும் எனக்கு உடன்பாடு இல்லை..

    
       இனி என்னுள் எழும் கேள்விகள் ..... இது என்னை அறியாமல் எனக்குள் ஒளிந்திருக்கும் என் இந்துத்துவ முகமாக கூட இருக்கலாம்.. இங்கு இஸ்லாமியர்கள் மேல் நடத்தப்படும் வன்முறை. அவர்களை தீவிரவாதிகள் போல் சித்தரித்தல். அவர்களுக்கு எதிரான ஒரு சுழலை RSS ஏற்படுத்த முயற்சிப்பது.. அந்த முயற்சியில் பாதி வெற்றியும் கிடைத்திருப்பது என்பவை எல்லாம் நன்கு அறிவேன். இவற்றில் எல்லாம் நான் இஸ்லாமியர்களின் பக்கம் நிற்கவே விரும்புகிறேன். ஆனால்.....
      பெண் விடுதலை என்று வரும் போது என்னால் இஸ்லாமையும், இஸ்லாமியர்களையும் ஆதரிக்க முடியவில்லை(அணைத்து மதங்களும் பெண்களுக்கு எதிரானவை என்று உறுதியாக  நம்புகிறேன்).. ஜாதி இல்லை, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக என் இறுதி மூச்சி உள்ள வரை போரடுவேன்னு பெரியாரின் பேரன்கள்  போல் பேசும் பலர் பெண் விடுதலை என்று வந்துவிட்டால் மிகவும்  பழமைவாதிகலாகதான் இருகிறார்கள்(இதில் அனைத்து மதத்தினரும் அடங்குவர்).  நாம் இப்போது இஸ்லாமிய முற்போக்குவாதிகள் பெண்ணுரிமைக்கு எப்படி குரல் கொடுகிறார்கள் என்று மட்டும் பார்போம். இங்கு நான் இஸ்லாமிய முற்போக்குவாதி என்று குறிப்பிடுவது கூட தவறாக இருக்கலாம். என்னால் ஏன் அவர்களை மதத்தை தாண்டி பார்க்க முடியவில்லை என்பது தான் என்னக்குள் எழும் கேள்வியும் கூட. எனக்கு தெரிந்து பெண் விடுதலை பேசும் இஸ்லாமிய முற்போக்குவாதிகள் மிக மிக குறைவு.
நான் கவனித்த வரை Manushyaputhiran , Peer Mohammed - இவர்கள் இருவரும் ஆழமான பெண்ணுரிமை கருத்துகளை முன்வைக்கிறார்கள். இவர்களை நான் மதத்துடன் தொடர்பு படுத்தி பார்த்ததே இல்லை. எப்பொழுதாவது விவாதத்தில் ஒரு RSS காரர் ஹலோ Mr. Abdul Hameed  என்று சொல்லும் போது தான் மனுஷ்யபுத்திரனின் மதம் ஞாபகம் வந்து மறைகிறது... மற்றபடி இவர்களின் கருத்துகள் தான் இவர்களின் அடையாளமாக இருக்கிறதுஆனால் என்னால் வேறு சிலரை இப்படி பார்க்க இயலவில்லை.நான் சில நிகழ்சிகளை இங்கு குறிப்பிட விரும்புகிறேன் 

 ஒரு நிகழ்சியில் காதலர் தினத்தை கொண்டாட கூடாது என்று ஹிந்துத்துவ அமைப்புகள் சொல்லி இருகின்றன. இதில் உங்கள் கருத்து என்ன? இந்த புள்ளியில் நீங்கள் இருவரும் ஒன்றினைகிரீர்கள் தானே என்று ஜென்ராம் கேட்டார். அதற்கு Haja Kani  எங்களை அவர்களுடன் ஒப்பிடாதீர்கள் என்று கூறிவிட்டு ..  ஆண் , பெண் இருவரும் ஒரே மதத்தில் திருமணம் செய்துகொண்டால் நல்லது என்று நாங்கள் நினைக்கிறோம். அனால் வாழ்கை துணையை தேர்ந்தெடுப்பது அவர்கள் விருப்பம் என்று மிகவும் யோசித்துவிட்டு சொன்னார். அடுத்த நாள் காதலர் தினம் .. அன்று அவர் facebook'இல் ஒரு பதிவிட்டிருந்தார்.  கலைஞரின் பராசக்தி வசனம் ... 

கோவில்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை...
கோவில்கள் திருடர்களின் கூடாரமாகிவிட வேண்டாம் என்று தான் சொல்கிறோம்.
அதே போல்,
   காதலர் தினம் வேண்டாம் என்று சொல்லவில்லை ..
   காதலர் தினம் ________________________(fill in the blanks)

அதற்கு வந்த comment அனைத்தும் கீழ்தரமாகதான் இருந்தது. அதில் ஒருவரின் comment.. காதல் என்றாலே செக்ஸ் என்பதை போல..  கற்பு போகிறது .. மானம் போகிறது.. கலாசாரம் சீரழிகிறது என்று..  அதற்க்கு  Haja kani like குடுத்து இருக்கிறார்இவர்களை எல்லாம் முற்போக்குவாதிகளாக எப்படி ஏற்பது?

 இதே போல, ஜவஹிருல்லாஹ் ஒரு முறை, அரசு ஊழியராக இருக்கும் முஸ்லிம் இரண்டாவது திருமணம் செய்து கொண்டது தவறு என்று நீதிமன்றம் தீர்பளித்து தொடர்பாக நடந்த விவாதத்தில்.... 
எங்களுக்கு என்று தனி சட்டம் இருக்கிறது எங்கள் உரிமைகளில் தலையிடாதீர்கள் என்று கூறி விட்டு. வேறு எந்த மதத்தை சார்ந்தவரும் இதை செய்ததில்லையா? CM'கல் கூட இப்படி பல மனம் புரிந்திருகிரர்கள் என்று மறைமுகமாக கலைஞரை சுட்டிக்காட்டினார்அதே கட்சியில்  இருந்த வேறு ஒருவர் நான் data தரேன். எத்தனை முஸ்லிம்கள் பலதரமணம் செய்திருகிறார்கள் . எத்தனை ஹிந்துக்கள் செய்திருகிறார்கள் என்று பாருங்கள் என்கிறார். (ஹிந்துக்கள் செய்கிறார்கள் என்பது மறுபதற்கில்லை). இப்படி பேசும் இவர்களை எப்படி பெண்கள் தலைவர்களாக ஏற்க முடியும்??(When there is a discrimination, govt can interfere என்பது தானே சரியாக இருக்கும்.. தனி சட்டம் இருக்கிறது என்பதற்காக அனைத்தையும் நியாய படுத்திவிட முடியுமா ? இஸ்லாம் பெண்களுக்கு மறுமண உரிமை குடுத்து இருக்கிறது என்பதை மறுக்கவில்லை. ஆனால் கணவனை தேர்ந்தெடுக்கும் உரிமை எத்தனை பெண்களுக்கு இங்கு உண்டு ?)

  நான் பார்க்கும் இன்னும் ஒரு நபர் aloor shanavas. இவர் கொஞ்சம் வித்தியாசமாக பெண் உரிமை பேசும்போதெல்லாம் இஸ்லாம் இதை மறுக்கவில்லை, அதை மறுக்கவில்லை என்று பெண் உரிமையை விட இஸ்லாமை காபாற்றுகிரரோ என்று தான் தோன்றுகிறது. பெண்கள் படிக்கலாம் ,பெண்கள் அரசியலுக்கு வரலாம் என்று பேசும் இவர்.. நீயா நானாவில் பெண்ணியம் என்ற தலைப்பில் விவாதம் நடந்தால் கூட அதை FB'இல் கிண்டல் அடித்து பதிவு போடுவார். பெண்கள் ஆண்களுடம் இயந்து நடப்பது தான் பெண்ணியம் என்பார்.  இவருடைய பெண் உரிமை பேச்சை எப்படி ஏற்பது

  சமீபத்தில் ஒரு நடிகை , அவரை பற்றி அசிங்கமாக comment இட்டு இருந்த ஒருவரை திட்டிவிட்டார் . அது facebook'இல் trend ஆகியது. comment இட்டவர் முஸ்லிம். (அதனால் தான் அது trend ஆச்சா என்று எனக்கு தெரியாது) உடனே இனியவன் என்று FB'இல் இயங்கி வரும் அரசியல்வாதி. நடிகைகல்லாம் ஒழுங்க .. நீங்க எப்படின்னு எங்களுக்கு தெரியாதா?...  என்று திட்டி தீர்த்துவிட்டார். இப்படிப்பட்ட செயல்களை ஆதரிக்கும் இவர்களை எப்படி மக்கள் பிரதிநிதியாக ஏற்க முடியும்
  இவர் இன்னுமொரு மறக்கவே முடியாத காரியத்தை செய்தார் . #BlackAgainstSaffron என்ற tag trend ஆகி கொண்டிருந்த பொது, அனைவரும் கருப்பு நிறம் கொண்ட profile picture' மாற்றினார்கள்இவரும்  ஒரு புகைப்படம் போட்டார். இவரும் இவர் மகள்,4 வயது இருக்கும். இருவரும் கருப்பு சட்டை அணிந்திருந்தார்கள். அந்த 4 வயது மகள் ஹிஜாப்(Hijab) போட்டு இருந்தால். பெண்கள் வயதுக்கு வந்ததுக்கு பிறகு தான் அதை அணிவார்கள். இப்பொழுது சிறுமிகளையும் இவர்கள் விடுவதில்லை. இது பெரியாருக்காக உருவாக்கப்பட்ட tag. உண்மையாக இதை பெரியார் மட்டும் பார்த்திருந்தால் ரத்தகண்ணீர் வடித்திருப்பார். இவர்கள் இந்தியாவை இகழ்ந்து சவுதியை புகழும் பதிவுகளையும் ஊக்குவிக்க மறப்பதில்லை

  எனக்கு தோன்றுவதெல்லாம் ஒன்று தான் ஒருவேளை இஸ்லாம் ஜாதி என்ற ஒன்றை வலியுறுத்தி இருந்தால் இப்பொழுது பேசுவது போல இவர்கள் அதை எதிர்பர்கள என்பது தான்.. இந்த கேள்விக்கு இவர் எதிர்த்திருப்பர் என்று தொன்றுவர்களை மட்டுமே நான் பெரியார் வழிவந்த பகுத்தறிவாளர்களாக பார்கிறேன். மற்றவர்களை மதத்தை காப்பாற்ற சிலவற்றை எதிர்த்த விவேகனந்தர்களின் வாரிசுகளா தான் பார்கிறேன். இவர்களுக்கு மதம் தான் பிரதானம். என் பார்வை சரியா ? இல்லை என்னுடைய பகுத்தறிவை விட என்னுடைய இந்துத்துவ அறிவு என்னை இப்படி சிந்திக்க வைகிறதா

நான் சிந்திப்பது சரி என்றால்.. ஒரு முறை பாண்டே கேட்டார்  சல்மா, பர்வீன் சுல்தானா போன்றோர் இஸ்லாமிய பெண்கள் பின்தங்கி இருகின்றனர். அவர்கள் முன்னேற்றத்திற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்களே என்று .. இதை பாண்டே சொல்லிவிட்டார் என்ற காரணத்திற்காகவே நாம் மறுக்கிறோமா?


அன்புடன்
ஜீவி 

அன்புள்ள ஜீவி

கடுமையான வேலைப்பளு. அதனால் உடனடியாய் பதிலளிக்க இயலவில்லை. உங்கள் முதல் கடிதத்துக்கு வருகிறேன். உங்கள் விரிவான அரசியல் சமூக புரிதல் வியப்பளிக்கிறது. அதற்கு முதலில் என் வாழ்த்துக்கள். என் எதிர்வினையை சுருக்கமாய் அளிக்கிறேன். பெண்ணுரிமையை யார் தீர்மானிப்பது என்பதே அடிப்படை கேள்வி. பர்தா அணிந்த பெண்ணை பார்க்கையில் அவளது ஆடை சுதந்திரத்தை கணவனும் குடும்பமும் மதமும் கட்டுப்படுத்துவதாய் தோன்றுகிறது. என் கேள்வி இது நமக்கு ஏற்படும் உணர்வா அல்லது அப்பெண்ணுக்கு ஏற்படும் உணர்வா என்பதே.

 இதை விதண்டாவாதமாக பார்க்காதீர்கள் என கேட்டுக் கொள்கிறேன். ஒரு ஊனமுற்ற ஆள் சாலையில் போகையில் பார்க்கிற நமக்கு வேதனை உண்டாகிறது. இங்கு வேதனை நம்முடையதா அந்த ஊனமுற்ற ஆளுடையதா? நம்முடையது மட்டுமே. பர்தா பெண்ணைப் பார்கையில் நமக்கு தோன்றும் பெண்ணிய கொந்தளிப்பும் நமக்கானது மட்டுமே.

இந்த பிரச்சனையை அப்பெண்ணின் தரப்பில் இருந்து பார்க்க வேண்டும் என்பதே என் கோரிக்கை. எனது இஸ்லாமிய தோழிகள் சிலர் பர்தாவை தம் அடையாளமாக பார்ப்பதுண்டு. இது எனக்கு தொண்ணூறுகளிலே தெரியும். எங்கள் ஊரில் ஆர்.எஸ்.எஸ் கலவரம் ஏற்படுத்தும் முன் பர்தா இல்லை. இந்துத்துவாவும் வஹாபியமும், அதன் விளைவாய் பர்தாவும் அங்கு ஒரே சமயத்தில் தோன்றியது. அந்த அரசியல் சூழலில் ஒரு இஸ்லாமிய பெண் தனக்கான அரசியல் மொழியை ஆடையில் காட்ட நினைத்தால் அதில் என்ன தவறு? ஒருவர் குடுமி வைப்பது போல், மற்றொருவர் நெற்றியில் குங்குமம் வைப்பது போல் அவர் பர்தா அணிகிறார்.

 இன்னும் சில பெண்கள் கணவனின் குடும்பத்தின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அணிகிறார்கள். அவர்கள் தமக்கான வாழ்வுரிமைகளை, விருப்பங்களை சமரசங்கள் மூலம் பெறுகிறார்கள். அந்த வாழ்வில் அவர்கள் திருப்தியாக இருக்கும் போது நாம் ஏன் அதை ஒரு “அடிமைத் தளையாக” பார்க்க வேண்டும்.

என்னுடைய வாதம் இது தான். ஒரு விசயம் கருத்தியல் ரீதியாய் தவறாக இருக்கலாம். ஆனால் நடைமுறையில் அது சரியாக நியாயமாக கூட இருக்கலாம். நான் எப்போதும் நடைமுறையில் அன்றாட வாழ்வில் மக்கள் மத்தியில் ஒரு சிக்கல் எப்படி பார்க்கப்படுகிறது என அறிய விரும்புகிறேன்.

நான் உங்கள் கருத்தை மறுக்கவில்லை. அது அரசியல் ரீதியாய் சரி. ஆனால் அது மட்டுமே எதார்த்தம் அல்ல. நாம் இதே போல் நம் பெண்ணியவாதிகளின் எதார்த்த வாழ்விலுள்ள சுதந்திரத்தை அலசிப் பார்க்க வேண்டும். அதே போல் பெண்ணியமே தெரியாத சாதாரண குடும்ப பெண்களின் சுதந்திரத்தையும் அலசிப் பார்க்க வேண்டும். சுதந்திரம் அப்போது ஆளாளுக்கு மாறுபடும்.

நீங்கள் சல்மா பற்றின ஆவணப்படத்தின் போஸ்டர் பார்த்திருப்பீர்கள். அதில் அவர் பர்தாவுடன் இருப்பார். ஆனால் எதார்த்தத்தில், தன் நூல்களின் அட்டைப்படத்தில் பர்தா இல்லாமல் இருக்கிறார். பர்தா எவ்வாறு முற்போக்காளர்களால் ஒரு குறியீடாக மாற்றப்படுகிறது என்பதற்கு இது ஒரு உதாரணம்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. நாம் நிறைய இன்னும் விவாதிப்போம்.
அன்புடன்
ஆர்.அபிலாஷ்  Comments