Saturday, February 20, 2016

வினோத் மிஸ்ராவின் குறும்படம்

நண்பர் வினோத் மிஸ்ரா தான் எடுத்த “குறியீடு” குறும்படத்தின் இணைப்பை எனக்கு பார்ப்பதற்கு அனுப்பி இருந்தார். சமீபத்தில் என்னை மிகவும் கவர்ந்த குறும்படமாய் அது இருந்தது. Spaghetti Western ஸ்டைலில் எடுத்திருந்தார். களம் நம்மூர் கிராமம் ஒன்று. நிறைய வெட்டவெளி, கடும் வெயில் படம் முழுக்க வருகிறது. கீழிருந்து மேலாக வானைக் காட்டும் ஷாட்கள், வட்டமிடும் பருந்து, அதன் அச்சுறுத்தும் ஒலி என படம் முழுக்க வருகிறது. படம் பார்க்க துவங்கி கொஞ்ச நேரத்தில் எனக்கு பரதனின் “தாழ்வாரம்”, The Good, the Bad, and the Ugly நினைவுக்கு வந்தன.

வேகமாய் வாசிப்பது எப்படி?

நேற்று “எப்படி வாரம் ஒரு புத்தகம் படிப்பது?” என்றொரு ஆங்கிலக் கட்டுரை படித்தேன். எழுதினவர் புத்தகம் என்பது அபுனைவுகளையே. தான் ஒரு மெதுவான வாசகன் என்று கூறும் அவர் எப்படி கல்லூரியில் தன் பேராசிரியர் கூறிய அறிவுரை அவரது வாசிப்பை பன்மடங்காக்க பெருக்க உதவியது என விளக்குக்கிறார்.

Thursday, February 18, 2016

யார் தலையில் தீயை வைப்பது?

 
நம் அரசியல்வாதிகளில் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ், பஜ்ரங் தள் ஆட்கள் தனி ரகம். முரட்டுத்தனம், நாகரிகமற்ற பேச்சு, பேசி ஜெயிக்க முடியாவிட்டால் வன்முறையில் இறங்குவது என தனி கலாச்சாரம் கொண்டவர்கள். ரொம்ப பணிவாய் தோன்றும் சில ஆர்.எஸ்.எஸ் ஆட்களின் பேச்சிலும், கண்களிலும் உள்ளூர ஒரு வன்முறை நொதிக்கும். இந்து மகாசபையில் துவங்கி நீண்ட காலமாய் அவர்களுக்கு அப்படி ஒரு அழிவு மனப்பான்மை உள்ளது. சாவார்க்கர், கோட்சே போன்றவர்களைப் பற்றி மனோகர் மல்கோங்கர் எழுதிய “காந்தியை கொன்றவர்கள்” நூலில் இது பற்றி ஒரு துல்லியமான சித்திரம் வருகிறது.

சீனியர் எழுத்தாளர்களும் விசித்திர தந்தை உளவியலும்


தொடர்ந்து எழுதுகிறவர்களை யாரும் புரமோட் செய்ய வேண்டியதில்லை. அவர்களாகவே மேலே வந்து விடுவார்கள். ஆனால் எழுத்தில் விருப்பம் இல்லாதவர்களை சீனியர் எழுத்தாளர்கள் புகழ்ந்து முன்னெடுத்தபடியே இருப்பார்கள். அவர்களும் ஒரே வருடத்தில் எழுதுவதை விட்டு மாயமாகி விடுவார்கள். இதை நான் என் ஞான திருஷ்டியால் ஒன்றும் சொல்லவில்லை. கடந்த பத்தாண்டுகளில் முன்னெடுக்கப்பட்ட இளம் எழுத்தாளர்களின் சிறு பட்டியலை எடுத்து பார்த்தால் யாருக்கும் புரியும். தமிழில் இந்த விசித்திரத்துக்கு முன்னுதாரணங்கள் உண்டு. நாற்பது வருடங்களுக்கு முன்பே கா.ந.சு இது போல் சில எழுத தெரியாதவர்களை அடுத்த தலைமுறையின் சாதனை எழுத்தாளன் என பாராட்டி தள்ளி இருக்கிறார். அவர்களின் பெயரைப் இன்று பார்த்தால் யாரென்றே உங்களுக்கு தெரியாது. ஏன் திறமையும் எழுதும் வெறியும் இல்லாதவர்களை க.நா.சுவில் இருந்து இன்றுள்ளவர்கள் வரை புரமோட செய்ய வேண்டும்? இது ஒரு நிலப்பிரபுத்துவ ஆண்மைய குடும்ப மனநிலையில் இருந்து தோன்றும் விசித்திரம். நிலப்பிரபுத்துவ குடும்பங்களில் பொதுவாக அப்பாவுக்கு திறமை குறைந்த வேலையே செய்யாத உதவாக்கரை பையனையே பிடிக்கும்.

Tuesday, February 16, 2016

ஜெ.என்.யுவில் நடந்தது என்ன?

பொதுவாக கூறப்படுவது போல் ஜெ.என்.யு இடதுசாரிகளின் கூடாரம் ஒன்றும் அல்ல. ஆனால் படித்து உலகெங்கும் தொடர்புகள் வைத்திருக்கும் அறிவுஜீவிகள், எழுத்தாளர்கள், பேராசிரியர்கள், தலைவர்களால் இடதுசாரி அறிவுஜீவிகளுக்கான வலுவான முகாம் அங்கு உருவாகி உள்ளது. அங்கு ஒரு இடதுசாரி விவாத மரபு, discourse வலுவாக உள்ளது. இட ஒதுக்கீடு பயன்படுத்தி அங்கு சேர்ந்துள்ள தாழ்த்தப்பட்ட மாணவர்கள் மேல்சாதி கம்யூனிசத்தை பன்முகம் கொண்டதாய் மாற்றி இருக்கிறார்கள். அவர்கள் தாழ்த்தப்பட்டவர்களின் உரிமை, பெண்ணுரிமை, அம்பேத்கரியம், நடைமுறை அரசிய சமூக பிரச்சனைகளை விவாதிக்கிறார்கள். இது போன்ற நிறுவனங்களில் இன்று இடதுசாரி சிந்தனை முக்கியமான பரிமாணம் பெற்றுள்ளது. இது தான் உண்மை நிலை. மற்றபடி சில மீடியா ஆட்கள் சித்தரிப்பது போல் மாவோயிச சிந்தனை கொண்டோரின் கூடாரமல்ல அது. இன்னொரு விசயம் ஜெ.என்.யுவில் இடதுசாரிகளுடன் பல்வேறு வலதுசாரி மாணவர் அமைப்புகளும் செயல்படுகின்றன. விவாத ரீதியாக அவர்கள் இடதுசாரிகள் அளவுக்கு தீவிரமாக இல்லை என்றாலும் பரபரப்பாக தான் இயங்குகிறார்கள்.

Friday, February 12, 2016

வெகுஜன வாசகர்கள்

வெகுஜன பத்திரிகையில் எழுதுவது வழக்கத்துக்கு மாறான, சற்று விசித்திரமான வாசகர்களை பெற்றுத் தரலாம். இணையத்திலும் வெகுஜன வாசிப்பு உண்டென்றாலும் இங்கு ஒவ்வொரு வகையான / தரமான எழுத்துக்கும் தனித்தனி வாசக குழுக்கள் உள்ளன. ஆனால் வெகுஜன அச்சு இதழ் வாசகர்கள் ஒரு தனி ரகம். இன்று அப்படி ஒருவருடன் ஒரு எதிர்பாராத உரையாடல்.

Tuesday, February 9, 2016

இமையத்தின் “ஐயா”

இம்மாத அம்ருதாவில் வெளிவந்துள்ள இமையத்தின் சிறுகதை ”ஐயா” படிக்க துவங்கி கொஞ்ச நேரத்திலேயே எனக்கு புதுமைப்பித்தனின் “பால்வண்ணம் பிள்ளை” கதையை நினைவுபடுத்தியது. பால்வண்ணம் பிள்ளை அலுவலகத்தில் சந்திக்கிற அவமானங்களுக்கு வடிகாலாக வீட்டில் மனைவி பிள்ளைகளிடம் அதிகாரம் காட்டுவான், துன்புறுத்துவான். அவனது வெற்று அகங்காரத்தின் மீதான பகடி அக்கதை. பு.பி பால்பண்ணம் பிள்ளையை வெளியில் இருந்து பார்த்து சீண்டுகிறார் என்றால் இமையம் கந்தசாமி எனும் சிப்பந்தியை உள்ளிருந்து நோக்கி கருணையுடன் சித்தரிக்கிறார்.

Friday, February 5, 2016

பர்தாவும் பெண்ணுரிமையும்

பர்தா அணிந்த ஒரு பெண்ணை பார்க்கையில் சிலநேரம் சமூக கோபம் சிலருக்கு வரலாம். எப்படி இந்த காலத்துக்கு பெண்களே ஆணாதிக்கவாத சிந்தனைக்கு அடிபணிந்து தம்மை வெறும் உடலாக பாவிக்கலாம் எனத் தோன்றலாம். ஆனால் இது மேம்போக்கான பார்வை. சுதந்திரமோ தனிமனித உரிமையோ பெண்ணுரிமையோ உண்மையில் ஆடையில் இல்லை. பாப்கட் வைத்து சட்டை பேண்ட் அணிந்த பெண்கள் எல்லாம் முழு சுதந்திரமானவர்களா? அவசியமில்லை. அப்பெண் தனிப்பட்ட முறையில் பல்வேறு சமரசங்களை ஆண் சமூகத்திடம் செய்து தன் ஆடை சுதந்திரத்தை மட்டும் தக்க வைத்திருக்கலாம். ஒருவேளை சேலை அணிந்த ஒரு பெண்ணை போல சில விசயங்களில் துணிச்சலாய் ஆண்களை எதிர்க்க அப்பெண்ணால் முடியாமல் போகலாம்.

இணைய சமத்துவமும் பொதுமக்களும்

இன்று சன் நியூஸ் சண்டே ஸ்பெஷல் விவாத மேடை நிகழ்ச்சியின் ஒளிப்பதிவில் கலந்து கொண்டேன். தலைப்பு இணைய சமத்துவம் (net neutrality). Free Basicsஇன் அடிப்படை பிரச்சனைகளை நான் ஏற்றுக் கொண்டேன். அதேவேளை இது ஒரு லட்சியபூர்வமான பிரச்சனை மட்டுமே என குறிப்பிட்டேன். அதாவது நடைமுறையில் இது இணைய சமத்துவத்தை அழிக்கவோ பயனர்களை அடிமையாக்கவோ போவதில்லை. எதிர்காலத்தில் இதை முன்னுதாரணமாய் கொண்டு வேறு நிறுவனங்களும் தம்மை முன்னிட்டு மட்டுமே கட்டுப்பாடான இணைய வசதியை வழங்கினாலும் இன்னொரு பக்கம் சுதந்திரமான இணையமும் இருந்து கொண்டு தான் இருக்கும். ஏனென்றால் ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்களுக்கு இணையத்துக்கான 100 ரூ உண்மையில் பெரிய செலவல்ல. எப்படி பேஸ்புக் போன்ற நிறுவனங்கள் மக்களை பயன்படுத்துவதற்கு இது போன்ற திட்டங்களை கொண்டு வருகிறதோ மக்களும் இது போன்ற திட்டங்களை தமக்கு தேவையான படி பயன்படுத்திக் கொள்வார்கள்.

Monday, February 1, 2016

ஷங்கர் ராமசுப்பிரமணியனின் கட்டுரையும் சயந்தனின் பேட்டியும்

இம்மாத அம்ருதாவில் சி.மோகன் பற்றின ஷங்கர் ராமசுப்பிரமணியன் கட்டுரை நன்றாக உள்ளது. கவித்துவமான மொழியில் அவர் தனக்கும் மோகனுக்குமான உளவியல் உறவை அணுக்கமாய் நேர்மையாய் பதிவு செய்திருக்கிறார். பொதுவாக இது போன்ற கட்டுரைகளில் சம்மந்தப்பட்டவருடனான சில சுவாரஸ்யமான சம்பவங்களை சொல்வதும் உறவின் மகத்துவத்தை கூறி முடிப்பதும் வழமை. ஷங்கர் மாறாக இலக்கிய ஆன்மீக தளங்களில் சி.மோகனின் குணநலன்களையும், அத்தளங்களில் அவருக்கும் தனக்குமான இணக்கங்களையும் மோதல்களையும் தொட்டுக் காட்டுகிறார். இது போன்ற முழுக்க அகவயமான கட்டுரைகளை இப்படி படிப்பது அரிதாகி உள்ளது. தகவல் தொழில்நுட்ப உலகில் நாம் மிக மிக புறவயமாய் மாறி வருகிறோம்.

இதே இதழில் சயந்தனின் பேட்டியும் நன்றாய் வந்துள்ளது. இதுவும் வழக்கமான “உங்கள் குழந்தைப் பருவம் பற்றி சொல்லுங்கள்” வகையிலான தகவல் தொகுப்பு பேட்டி அல்ல. பேட்டி எடுத்தவர் கூர்மையான கேள்விகள் கேட்டிருக்கிறார். அந்த அம்புகளை எடுத்து காது குடைந்தபடி சயந்தன் பதிலளித்திருக்கிறார். படித்து பாருங்கள்!