Sunday, November 15, 2015

லாட்டரி சீட்டில் இருந்து டாஸ்மாக் வரை

சந்திரபாபுவின் படமொன்றில் (கண்ணே பாப்பா) அரசாங்கம் நடத்தும் லாட்டரி சீட்டு பற்றின காட்சி வருகிறது. அரசாங்கத்தின் பொறுப்பின்மையை, அறமட்ட நடவடிக்கையை ஒரு அரசியல்வாதி பாத்திரம் விமர்சிக்கிறான். லாட்டரி தவறு தான் என்றாலும் மக்களுக்கு ஏழ்மையில் இருந்து விடுபடுவதற்கான ஒரு சிறு கனவை அது வழங்குகிறது என ஒரு பாத்திரம் நியாயப்படுத்துகிறான். இன்னொரு காட்சியில் விமர்சித்தவர்களே வரிசையில் முண்டியடித்து லாட்டரி சீட்டு வாங்குகிறார்கள். எனக்கு சமீபத்தில் நடந்த டாஸ்மாக் கண்டனப் போராட்டங்களை இது நினைவுபடுத்தியது. குடிப்பழக்கம் கொண்டவர்களே குடியை எதிர்த்து போராடினார்கள். பிறகு அப்போராட்டம் தடயமே இல்லாமல் மறைந்து போனது.

 இப்படம் வந்து சுமார் நாற்பதாண்டுகளுக்கு பிறகு அரசாங்கம் மதுக்கடைகளை நடத்துகிறது. வணிகப் படங்களில் ஒன்று கூட இதை விமர்சித்து ஒரு காட்சியையும் வைக்கவில்லை. மாறாக டாஸ்மாக்கில் குடித்து கும்மாளமிடும் பாடல்கள் பிரபலமாகின்றன. அரசு வரிவிலக்கு எனும் ஆயுதம் கொண்டு சினிமாக்காரர்களை காயடித்து விட்டது.

No comments: