சஹீர்கான் ஓய்வுசஹீர்கான் ஓய்வு பெறுகிறார். உலகின் தலைசிறந்த இடதுகை வீச்சாளர்களில் ஒருவர். வஸீம் அக்ரமைப் போல் இவரும் ஒரு கலைஞர். நான் அவரை அக்ரமும் வெகுஅருகில் வைப்பேன். வேகமும் தந்திரமும் அறிவும் பந்தை பலவிதமாய் பயன்படுத்தும் திறனும் கொண்டவர். ஸ்ரீநாத் இவரைப் போன்று முக்கியமான வேகவீச்சாளர் என்றாலும் சஹீரின் ஆவேசமும் மூர்க்கமும் அவரிடம் இல்லை. நம்முடைய வேகவீச்சாளர்கள் பொதுவாய் சாதுவாக தோன்றின காலத்தில் அவர் நிறைய ஆவேசத்தையும் தந்திரத்தையும் அறிமுகம் செய்தார். சஹீரின் வழித்தோன்றலாய் முகமது ஷாமியை தான் பார்க்கிறேன். சஹீர் நமது இளந்தலைமுறை வேகவீச்சாளர்களின் பயிற்சியாளராய் பங்காற்றினால் சிறப்பாய் இருக்கும்.

Comments