Monday, September 28, 2015

அற்பங்களின் உலகம்சின்ன வயதில் இருந்து நான் நடக்கும் போது அடிக்கடி விழுந்து கொண்டிருப்பேன். வீட்டுக்குள் விழுந்து காயம் ஏற்படுவதை தவிர்க்க நான் வீட்டுக்குள் சக்கர நாற்காலி பயன்படுத்த துவங்கினேன். வெளியில் நடக்கையில் என் காலில் அணிந்திருக்கும் காலிப்பரின் லாக் சரியாக பொருந்தாமல் விழுந்து விடுவேன். இதில் ஒரு விசயம் என்னவென்றால் விழும் போது அந்த அரைநொடி எனக்கு இரண்டு மூன்று நிமிடங்களாய் ஸ்லோமோஷனில் போகும். அப்போது நான் “விழுந்து காலிப்பர் ஒடியக் கூடாதே” என மனதுக்குள் கவலைப்படுவேன். கவலைப்பட்டு முடிக்குமுன் கீழே கிடப்பேன். சரியாய் கீழே விழுந்து தரையில் தொடுகிற தருணம் என் நினைவில் இருக்காது.

டிவி ரிப்பேரும் மூதாட்டியின் உயிரும்வீட்டில் டி.வி ரிப்பேர் ஆகி விட்டது. டி.வி மெக்கானிக் வந்து பார்த்து விட்டு சொன்னார் “டி.வி மாதிரி எலக்டிரானிக் சாமான் எல்லாம் மனித உயிர் போலத் தான். ஓடுற வரைக்கும் ஓடும். எப்போ நிக்குமுன்னு சொல்ல முடியாது.” நான் முன்பு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் போது பக்கத்து படுக்கையில் ஒரு மூதாட்டி கிடந்தார். ஒருநாள் அவருக்கு முழுக்க பிரக்ஞை போய் விட்டது. அவரது கணவன் வந்து பார்த்து விட்டு ஒவ்வொரு டாக்டராக அழைத்து கன்னாபின்னா என்று கத்தினார். அவர்கள் முழித்தார்களே தவிர சரியாய் பதில் சொல்லவில்லை. ஒரே ஒருத்தர் சொன்னார் “நீங்க இவங்களுக்கான கட்டணத்தை இன்னும் செலுத்தல. அதை போய் செலுத்திட்டு வந்தீங்கன்னா சிகிச்சை தொடர்வாங்க. ஏன்னா பணம் கட்டாததினால மருந்து நிப்பாட்டி வச்சுருக்காங்க”. அவர் உடனே பணம் செலுத்த சென்றார். முந்தா நாளில் இருந்தே அவர் படுக்கை பக்கம் எந்த செவிலியோ மருத்துவரோ போகவில்லை என்பது எனக்கு நினைவு வந்தது. இப்படி சிகிச்சையை நிறுத்துவதனால் அவருக்கு உயிர் போனால் என்னாவது என்றெல்லாம் அவர்கள் கவலைப்படவில்லை. அந்த மூதாட்டி எனும் டிவியின் மின் தொடர்பை தற்காலிகமாய் துண்டித்து விட்டார்கள்.

தினமணி பத்தியின் இரண்டாவது கட்டுரைதினமணியில் வெளியாகும் என் ஆங்கிலம் கற்பிக்கும் பத்தியின் இரண்டாவது கட்டுரை இது. இதில் குடிகாரர் என்றொரு பாத்திரத்தை அறிமுகப்படுத்துகிறேன். அவரை ஆளாளுக்கு குடிக்காதீர்கள் என அறிவுரை சொல்லி டார்ச்சர் செய்வதால் தன் பெயரையே குடிகாரர் என மாற்றிக் கொள்கிறார். Drunkard, drunk ஆகிய சொற்களின் அடிப்படை வித்தியாசத்தை விளக்குகிறார். அதே போல முரண்பாடு கொண்ட ஆங்கில சொற்கள் பற்றியும் இதில் பேசியிருக்கிறேன். உதாரணமாய் coconut என்பது கொட்டை வகை (nut) இல்லை. இந்த தொடுப்பில் முழு கட்டுரையையும் படிக்கலாம்.


அகல்யாநானும் சில நண்பர்களும் கருத்தரங்குக்கு முந்தின நாளே சென்றுடைந்த போது விடாது மழை பெய்து கொண்டிருந்தது. மழையையும் பொருட்படுத்தாமல் ஒரு நாய் உடலை குறுக்கி புட்டத்தை லேசாய் தூக்கி ஒரு குட்டை அருகே மலம் கழிக்க முயன்று கொண்டிருந்தது. நீராய் கழிந்த மஞ்சள் மலம் மெல்ல அந்த குட்டையின் கறுப்புநீரில் ஓவியனின் தூரிகையை முக்கும் போது கரையும் சாயம் போல் கலந்து ஓடத் தொடங்கியது. தன் அவஸ்தை முடிந்து நாய் எங்களை தலைதூக்கிப் பார்த்தது. சந்தீப்பும் பார்த்திவ் ஷர்மாவும் என்னை நோக்கி சிரித்தனர்.
 நாங்கள் அப்பகுதியில் பார்த்த நாய்களை கணக்கெடுத்து வந்தோம். அதன் செவியின் நுனி கத்தரிக்கப்பட்டிருக்கவில்லை. அதனால் எ.பி.சி எனும் கருத்தடை செய்யப்படாத ஒன்று என குறித்துக் கொண்டோம்.

Sunday, September 27, 2015

“மாங்கா” காமிக்ஸில் காந்தி
ஜப்பானிய “மாங்கா” காமிக்ஸில் காந்தியின் வாழ்க்கைசரிதம் படித்தேன். ரொம்ப எளிமைப்படுத்தப்பட்ட ஆனால் நளினமான அழகான புத்தகம். ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இதை பரிந்துரைக்கலாம்.

கவரிமான்

“முன்பெல்லாம் மைக்கை ஆன் செய்ததும் ஸ்வ்ய்ய்ங், வொய்ங்ங் அப்டீன்னு ஒரு சத்தம் ஒலிக்கும். அதைக் கேட்கையில தான் எனக்கு மீட்டிங் வந்த பீல் கிடைக்கும். சில நாள் சும்மா இருக்கும் போது அது ஒரு ஓங்கார சப்தம் போல என் காதில ஒலிச்சிக்கிட்டு இருக்கும். இப்போ உள்ள நவீன மைக் சிஸ்டம் ஆன் பண்ணதும் தெரியல ஆப் பண்ணதும் தெரியல. வேஸ்ட்”.

Friday, September 25, 2015

இஷாந்த் ஷர்மா மீதான தடை நியாயமா?
சமீபத்தில் நடந்து முடிந்த இலங்கை சுற்றுப்பயணத்தின் போது இறுதி டெஸ்டில் இஷாந்த் ஷர்மா விக்கெட் வீழ்த்திய பின் மிகவும் உணர்ச்சிகரமான வகையில் தன் தலையை கையால் அடித்து சற்று நாடகீயமாய் பாவனை செய்தார். இந்த எதிர்வினைக்காய் அவர் ஐ.சி.சியால் ஒரு டெஸ்ட் ஆட்டத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளார். இஷாந்தின் எதிர்வினை டிவியில் மீண்டும் மீண்டும் காட்டப்பட்டது. அதை தனித்து பார்ப்பவர்களுக்கு அவர் அநாகரிகமாய் நடந்து கொள்வதாய் தோன்றும். இஷாந்த் அடிப்படையில் சாதுவாய் அறியப்பட்டவர் என்பதால் அவரது கோபச் செயல் வேடிக்கையாகவும் பலருக்கும் பட்டது. ஆனால் இஷாந்தை இப்படி கோபப்படுத்தியது என்ன என பலரும் கேட்கவில்லை.

Friday, September 18, 2015

விராத் கோலியும் இந்திய அணியின் மறுமலர்ச்சியும்
 (செப்டம்பர் முதல் வார ”கல்கி” இதழியில் வெளியான என் கட்டுரை)

இருபத்திரண்டு ஆண்டுகள் என்பது நீண்ட காலம். ஆயுளின் கால் பகுதி. அதனால் தான் இந்தியா 22 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கையில் டெஸ்ட் தொடர் வென்றுள்ளது எனும் சேதி கேட்டதும் பலருக்கும் ஆச்சரியமாக உள்ளது. நாம் கங்குலியின் அணித்தலைமையில் பாகிஸ்தானில் டெஸ்ட் தொடர் வென்றுள்ளோம். இங்கிலாந்திலும் மேற்கிந்திய தீவுகளிலும் நியுசிலாந்திலும் வென்றுள்ளோம். கிட்டத்தட்ட இந்தியா போன்ற பருவச்சூழலும் ஆடுதளங்களும் கொண்ட இலங்கையில் இவ்வளவு காலம் முடியவில்லை. ஏனென்றால் தொண்ணூறுகளில் நாம் இலங்கையை ஒரு அணியாகவே பொருட்படுத்தவில்லை. ரெண்டாயிரத்துக்கு பிறகு ஜெயவர்த்தனே, சங்கக்காரா போன்ற அற்புதமான மட்டையாளர்களும், முரளிதரன் எனும் ஒரு சாதனையாளரும் சேர்ந்து இலங்கையை ஒரு ஆபத்தான டெஸ்ட் அணியாக மாற்றினார்கள். அக்கால கட்டத்தில் ஆஸ்திரேலியா போன்ற அணிகள் கூட இலங்கையை அவர்களின் சொந்த மண்ணில் முறியடிக்க இயலாமல் திணறினர். ஆனால் சமீபமாய் இலங்கை அணியில் சிறந்த சுழலர்கள் இல்லை. அவர்கள் அதனால் தம் பாரம்பரியமான வலிமையான சுழலை துறந்து விட்டு வேகவீச்சுக்கு சாதகமான ஆடுதளங்களை அமைக்க துவங்கினர். விளைவாக நியுசிலாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகளிடம் தொடர்களை இழந்தனர். இந்தியாவுக்கு எதிராய் சமீபத்தில் நடந்து முடிந்த டெஸ்ட் தொடரில் இலங்கையினர் பழைய வியூகத்துக்கு திடும்பினர். மீண்டும் சுழலும் ஆடுதளத்தை அமைத்தனர்.

மதுவிலக்கு: சில கேள்விகளும் தீர்வுகளும்(ஆகஸ்டு மாத “வெற்றிவேந்தன்” பத்திரிகையில் வெளியான என் கட்டுரை)
தி.மு.க ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு கொண்டு வரப்படும் என கலைஞர் அறிவித்தார். அதை ஒட்டி காந்தியவாதி சசிபெருமாள் செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்தும் போது மரணமடைய தமிழகம் எங்கும் மதுவிலக்கை கோரி பலவலான போராட்டங்கள் நடந்தன.
இந்நேரத்தில் மதுவிலக்கை பற்றி சில கேள்விகள் எழுகின்றன.

Monday, September 14, 2015

தினமணியில் என் தொடர்தினமணியில் செவ்வாய் தோறும் வெளியாகும் இளைஞர் மணி இணைப்பிதழில் ஒரு தொடர் எழுத துவங்கியிருக்கிறேன். கதை வடிவில் சில ஆங்கில சொற்களையும் தொடர்களையும் அறிமுகப்படுத்துவது நோக்கம். ஒரு பக்கம் காது கேட்காத ஒரு ஓய்வு பெற்ற பேராசிரியர், சரளமாய் ஆங்கிலம் பேசும் அவரது நாய் ஜூலி மற்றும் அவரிடம் ஆங்கிலம் கற்க விரும்பும் மாணவர் கணேஷ், அவர்களுக்கு பரிச்சயமானவர்கள் என பாத்திரங்கள் வருவார்கள். கொஞ்சம் நகைச்சுவை, பகடி, அன்றாட நடப்பு பற்றின சேதிகள் கொண்டு எழுதலாம் என இருக்கிறேன். இந்த இணைப்பில் தொடரின் முதல் பகுதியை பார்க்கலாம்:Wednesday, September 9, 2015

கமல் என்ன உங்க பக்கத்து வீட்டுக்காரரா?
பெ.கருணாகரனின் “காகிதப் படகில் சாகசப் பயணம்” கட்டுரைத் தொகுப்பில் உள்ள கட்டுரை ஒன்றின் தலைப்பே மேலே உள்ளது. கருணாகரன் குமுதத்தில் வேலை பார்க்கும் போது கமலை பேட்டி கண்டு வெளியிடுகிறார். அதற்காய் கமலை அணுகுவது ஆரம்பத்தில் சிரமமாய் இருக்கிறது. குமுதத்தின் டைரக்டர் வரதராசன் அவரிடம் கமலின் தனிபட்ட எண்ணை பெற்றுத் தந்தால் தான் பேசி பேட்டி வாங்கித் தருவதாய் கூறுகிறார். கருணாகரன் அவ்வாறே செய்து பேட்டியை வாங்குகிறார். அதன் பிறகு அவர் அதே எண்ணில் கமலை அழைத்து பேட்டி எப்படி வந்துள்ளது என கேட்கிறார். கமலும் நன்றாகவே பேசுகிறார். ஆனால் சில நிமிடங்களில் கமலின் பி.ஆர்.ஓ போனில் கருணாகரனை அழைத்து “நீ என்ன கமலுக்கு பக்கத்து வீட்டுக்காரரா? உனக்கு தோன்றினால் அவரை அழைத்து பேசுவதா? இனிமேல் என் மூலமாய் தான் கமலை தொடர்பு கொள்ள வேண்டும்” என கடுமையாய் திட்டுகிறார். அத்துடன் அந்த எண் ரத்து மாற்றப்படுகிறது. எனக்கு இது படித்ததும் கமல் ஏன் அவ்வாறு செய்திருப்பார் என கேள்வி எழுந்தது.

மார்த்தாண்ட வர்மாவும் ஐ.ஐ.டியும்நேற்று ஐ.ஐ.டியில் வரலாற்று ஆய்வாளர் அனன்யா வாஜ்பய் உரை நிகழ்த்தினார். நானும் சில நண்பர்களும் பார்வையாளர்களாய் கலந்து கொண்டோம். சூத்திரரான சிவாஜி எவ்வாறு பிராமணர்களின் உதவியுடன் தன்னை சத்திரியராய் உருமாற்றி, அதை உறுதிப்படுத்துவதற்கான சடங்குகள் நடத்தி, தன் குடும்ப வரலாறு பற்றி ஒரு பொய்யாத தகவலை உருவாக்கினார் என்பது பற்றி அனன்யா பேசினார்.
 அவர் பேச்சு முடிந்ததும் கலந்துரையாடல். நான் சில கேள்விகள் கேட்டேன். வர்ணாசிரமம் சார்ந்து மட்டுமே நாம் சாதி அமைப்பை புரிந்து கொள்ள இயலாது. தமிழகத்தில் எவ்வாறு பௌத்தம் ஒடுக்கப்பட்டு அழிக்கப்பட்ட பின் ஏற்கனவே பௌத்தர்களாய் இருந்தவர்கள் தீண்டத்தகாத சாதிகளாய் இந்துக்களால் மாற்றப்பட்டார்கள் என அயோத்திதாசர் விரிவான தகவல்கள் மற்றும் சான்றுகளுடன் பேசியுள்ளதை குறிப்பிட்டேன். ஒரு தாழ்த்தப்பட்ட சாதியானது வர்ணாசிரம அமைப்பினால் மட்டுமல்ல ஒரு மதப் போரின் பின்விளைவாகவும் உருவாகக் கூடும் என்றேன். அதன் பிறகு திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் அனிழம் திருநாள் மார்த்தாண்டவர்மா ஆண்ட போது நடந்த ஒரு சம்பவத்தை பேசத் தொடங்கினேன். அப்போது மொத்த அரங்கிலும் சிரிப்பலைகள் பரவின. எனக்கு சில நொடிகள் ஒன்றுமே விளங்கவில்லை. நான் எவ்வாறு தமிழகத்தின் பகுதியான திருவிதாங்கூரை முன்னர் மார்த்தாண்ட வர்மா ஆண்டார் என்ற போது மீண்டும் சிரித்தார்கள். நான் எதாவது தவறாய் சொல்லி விட்டேனா அல்லது அவர்களுக்கு பைத்தியமா என எனக்கு விளங்கவில்லை. திருவிதாங்கூர் முன்பு மலையாள மன்னர்களின் ஆட்சியின் பகுதியாய் இருந்த சமஸ்தானம். அது பின்னர் தமிழகத்துடன் இணைக்கப்பட்டது என்றதும் தான் சிரிப்பலை ஓய்ந்தது.

Saturday, September 5, 2015

வாசிப்புக்கான ஆலோசனைகள்அசோக் ராஜ் எனும் நண்பர் வாசிப்பு பற்றி ஒரு முக்கியமான கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கான என் பதிலை கீழே பார்க்கலாம்.

Friday, September 4, 2015

அஜயன் பாலா
அஜயன் பாலாவின் “இரண்டாம் வெளி” சிறுகதை அவரது படைப்புகளில் என்னை மிகவும் கவர்ந்தது. அக்கதையை பற்றி சொல்லும் முன் அஜயன் பாலாவின் மொழி பற்றி ஒரு குறிப்பு.

Wednesday, September 2, 2015

சூதாட்டம் எனும் மற்றொரு ஆட்டம்


ஐ.பி.எல் சூதாட்டம் பற்றி விசாரிக்க உச்சநீதிமன்றத்தால் நிறுவப்பட்ட நீதிபதி லோதா தலைமையிலான குழு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளை இரு வருடங்களுக்கு தடை செய்தது. சூதாட்டத்தில் ஈடுபட்ட குருநாத் மெய்யப்பன் மற்றும் ராஜ் குந்திரா இருவரையும் நிரந்தரமாய் தடை செய்தது. இத்தண்டனை மென்மையானது என விமர்சிப்பவர்கள் இரு அணிகளையும் நிரந்தரமாய் கலைத்திருக்க வேண்டும் என்றார்கள். தண்டனை மிகை என நினைப்பவர்கள் நிர்வாகிகள் செய்த குற்றத்துக்கு ஏன் அணி வீரர்கள் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனக் கேட்டார்கள். ராஜஸ்தான் அணியில் இளம் வீரர்கள் அதிகம் என்பதால் இந்த தடையினால் அவர்களின் எதிர்காலம் கடுமையாய் பாதிக்கப்படும் என அவ்வணியின் பயிற்சியாளர் ராகுல் திராவிட் கருதுகிறார்.

Tuesday, September 1, 2015

நேரம்நண்பர் விநாயக முருகன் ஒருமுறை என்னிடம் முழுநேர எழுத்தாளனாகும் தன் விருப்பத்தை கூறினார். அவர் இப்போது மென்பொருள் துறையில் இருக்கிறார். தினமும் எழுதும் பொருட்டு இரவெல்லாம் விழிக்க வேண்டி இருக்கிறது. அந்தளவுக்கு அவரது பகல் நேரத்தை முழுக்க வேலை உறிஞ்சிக் கொள்கிறது. இரவுத்தூக்கத்தை கடன் வாங்கி இருநாவல்களை எழுதி விட்டார். ஆனால் தனது ஒரு நாளின் முழுநேரத்தையும் எழுத்துக்கு செலவழிக்க ஆசை என்றவர் அதற்காய் எதிர்காலத்தை திட்டமிடுவதாய் கூறினார். எனக்கு அப்படி ஒருவர் முழுநேர எழுத்தாளனாவது உண்மையில் பயன் தருமா என ஐயம் தோன்றியது.