Tuesday, June 30, 2015

உடலைக் காப்பாற்றுவது எப்படி?


நம் உடலை நம்மிடம் இருந்து காப்பாற்றுவது பற்றி நிறைய டயட் டிப்ஸ், உடற்பயிற்சி அறிவுரைகள், உடல் எடை குறைக்கும் மருந்து பரிந்துரைகள் என விளையாட்டு பொம்மைகளால் சூழப்பட்ட குழந்தை போல ஆகி விட்டோம். வேறெந்த காலத்திலும் மனிதன் தன் ஆயுள், ஆரோக்கியம், உடல் தோற்றம் பற்றி இவ்வளவு அக்கறைப்பட்டிருப்பானா என்பது சந்தேகம். ஆனால் உடல் ஆரோக்கியம் என்பது இதற்கு எல்லாம் அப்பாற்பட்டதாக இருக்கிறது. தினசரி உடற்பயிற்சி செய்கிறவர்களுக்கும் நோய்கள், அது சம்மந்தமான வலிகள் வருகின்றன. யோகா மாஸ்டர்களும் கூட சின்ன உபாதைகளால் கடும் அவதிப்படுகிறார்கள். உடற்பயிற்சி, நல்ல உணவு, கட்டுப்பாடான வாழ்க்கை ஆகியவை நம் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் என்பது மட்டுமே இப்போதைக்கு உண்மை. உடல் வலுவாக, சுலபமாக, அலுப்பின்றி உணரும் போது ஒரு விடுதலை உணர்வு கிடைக்கும் அல்லவா அது தான் ஒரே பலன்.

Monday, June 29, 2015

கதையை கேட்பது

Image result for அசோகமித்திரன்

கதைகளை நாம் கண்களால் வாசிப்பது தான் வழக்கம். ஆங்கிலத்தில் ஒலி நூல்கள் பிரபலம். ஆனால் பழக்கம் காரணமாய் நான் எப்போதும் வாசிக்கவே பிரியப்பட்டிருக்கிறேன். முனைவர் பட்ட ஆய்வுக்கு சேர்ந்த பின் அங்குள்ள சக ஆய்வாளர்களான நண்பர்கள் அருள், டேவிட் ஆகியோர் குழுவாய் சேர்ந்து ஒரு கதையை வாசித்து கேட்கும் பழக்கத்தை அறிமுகப்படுத்தினார்கள். எல்லா வெள்ளிக்கழமையும் சில நண்பர்கள் சேர்ந்து மெரீனா கடற்கரையில் படைப்புகளை வாசித்து கேட்டு அது குறித்து கலந்துரையாடுகிறார்கள். இந்த குழுவுக்கு Men Friday என பேரிட்டிருக்கிறார்கள். பெரும்பாலும் ஆங்கிலத்துறை மாணவர்கள் என்பதால் ஆங்கிலப்பெயர் போல.

குடல் கிருமிகளால் ஆட்டுவிக்கப்படும் மனித மூளை


நியு யார்க் டைம்ஸில் ஒரு சுவாரஸ்யமான கட்டுரை படித்தேன். நம்முடைய குடலில் இருக்கும் கிருமிகள் நம் மனநிலையை, மூளையின் செயல்பாட்டை தீர்மானிக்க கூடும் என சில ஆய்வுகள் நிரூபித்து வருகின்றன. பேக்டீரியா சில நரம்பணு ரசாயனங்களை ரத்தம் வழி மூளைக்கு அனுப்பி தேவையான சமிஞைகளை உருவாக்கி நம் நடத்தையை தீர்மானிக்க முடியும். ஆட்டிஸம் போன்ற வியாதியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குடலில் உள்ள கிருமிகளை மாற்றும் சிகிச்சை அளிப்பதன் மூலம் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளார்கள்.

Saturday, June 27, 2015

நன்மை மீதான கசப்பு


எதிர்பாராத நேரத்தில் அவசியமாய் வரும் உதவி எப்படி உணர வைக்கும்? மகிழ்ச்சியாய், நெகிழ்ச்சியாய், நிம்மதியாய் தோன்றும் எனத் தான் பொதுவாய் நம்புவோம். ஆனால் இல்லை.

Tuesday, June 23, 2015

எழுத்தும் திருமணமும்


ஒரு தோழியிடம் பேசிக் கொண்டிருந்தேன். கல்யாணம் ஆன எழுத்தாளர்களின் புனைவுகளையே விரும்பிப் படிப்பதாய் சொன்னார். நன்றாய் எழுதுவதற்கு திருமண வாழ்வு அவசியம் என்றொரு லாஜிக்கை வைத்தார். நான் திருமணமான பின் தான் எழுத்தில் சவால்கள் மிகவும் அதிகரிப்பதாய் சொன்னேன். வாழ்க்கைத்துணைகள் எப்போதும் ஒருவர் எழுத்து, இசை போன்ற கலை அனுபவங்களில் மூழ்கித் தொலைவதை விரும்புவதில்லை. அவர்கள் அதனால் நீங்கள் அக்கலையை பயிலும் போது முடிந்தவரை தொந்தரவு பண்ணுவார்கள்.

Friday, June 19, 2015

ஜெ.பி. சாணக்யாவின் “பூதக்கண்ணாடி”

Image result for ஜெ.பி சாணக்யா

ஜெ.பி சாணக்யாவின்பூதக்கண்ணாடிதமிழில் எழுதப்பட்ட மிகச்சிறந்த சிறுகதைகளில் ஒன்றாய இருக்கலாம். அதன் விரிவைப் பார்க்கையில் ஒரு குறுநாவலின் சின்ன விதை போலத் தோன்றுகிறது. அதன் சிறப்பு ஒரு மனநிலையை மெல்ல மெல்ல மீட்டி பிரம்மாண்டமாய் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவது தான்

வங்கதேசமும் மழை அளிக்கும் சுதந்திரமும்வங்கதேசத்தோடான முதல் ஒருநாள் ஆட்டத்தில் இந்தியாவின் மோசமான தோல்வி நமது அசட்டையான அணுகுமுறையின் விளைவு தான். இது அனைவருக்கும் புரிந்திருக்கும். மற்றொரு காரணம் உண்டு. அது மழை.

Sunday, June 14, 2015

தமிழ்த் திரையிசைப் பாடல்களில் கவித்துவம் (2) – வைரமுத்து

Image result for வைரமுத்து
(www.inmmai.comஇல் எழுதி வரும் தொடரின் ஒரு பகுதி)

கண்ணதாசனுக்கு பிறகு தோன்றியவர்களில் மிக வளமான கற்பனையும் மரபுடன் ஆழமான தொடர்பும் கொண்ட பாடலாசிரியர் வைரமுத்து தான். “வானம்பாடி” இயக்க கவிஞர்களிலும் கட்டற்ற கற்பனை வளம் கொண்ட ஒரே எழுத்தாளர் அவர் தான். அதனாலே இன்றும் மு.மேத்தா, தமிழன்பன் ஆகியோரின் கவிதைகளை வைரமுத்துவின் வரிகள் அருகே வைத்துப் பார்கையில் அவை ஒளியிழந்து வயதான நடிகையின் சருமம் போல் தோன்றுகின்றன.

Friday, June 12, 2015

பா.ஜ.கவின் மலைப்பாம்பு அரசியல்


மலைப்பாம்பு இரையை மெல்ல நெருங்கி தன் உடலால் சுற்றி வளைத்து இறுக்கும். நெருக்கி எலும்புகளை கூழாக்கும். இரை செயலிழந்த பின் அதை முழுதுமாய் முழுங்கி விட்டு ஜீரணமாகும் வரை பல மணிநேரங்கள் அசையாது படுத்துக் கிடக்கும். மெதுவான வலிமிகுந்த மரணம். இதற்கு இரை மீது பாய்ந்து கழுத்தைக் கடித்து உயிரெடுக்கும் சிங்கம், புலிகள் மேல். பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பின் இந்த மலைப்பாம்பை போலத் தான் நடந்து கொள்கிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு அது தில்லி மற்றும் உ.பியில் அடிவாங்கியது. உ.பி தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன் அங்கு நிகழ்ந்த சில கற்பழிப்பு வழக்குகளை பெரிதுபடுத்தி மீடியா மூலமாய் அகிலேஷ் யாதவை தாக்கியது. அதே போல் அங்கு மதக் கலவரங்களையும் விளைவிக்க முயன்றது. அதாவது மத உணர்வுகளை ஒரு புறம் தூண்டி, ஆளுங்கட்சியின் சட்டம் ஒழுங்கு பற்றி மோசமான சித்திரத்தை உருவாக்கி தேர்தலில் வெல்ல முயன்றது. ஆனால் இம்முயற்சி மண்ணைக் கவ்வியது.

Tuesday, June 9, 2015

கல்வி கோழிப்பண்ணைகள்


தனியார் பள்ளிகளின் முறைகேடான கட்டண வசூலை கண்டித்து SFI உள்ளிட்ட மாணவர் அமைப்புகள் இன்று தமிழகத்தின் பல இடங்களில் நடத்தி உள்ள போராட்டங்கள் வரவேற்கத்தக்கவை. அடுத்த கட்டமாய் இத்தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் பெற்றோர்களை சந்தித்து அவர்களிடம் உரையாடி உண்மையை புரிய வைக்க வேண்டும். அதிகப்படியான கட்டணம் செலுத்துவது ஒருவித சமூக அநீதி எனும் உணர்வை அவர்களுக்கு ஏற்படுத்தினாலே இப்போராட்டம் பெரும் வெற்றியை அடைந்து விடும். கல்விக் கோழிப்பண்ணைகள் ஐ.ஐ.டியை விட ஆபத்தானவை.

Friday, June 5, 2015

கார்த்திக் நேத்தாவின் திரைப்பாடல்கள்


தமிழில் நவீன கவிதை என்றும் அருகிப் போன மூலிகை போன்ற வஸ்து தான். ஆனால் அதன் வீச்சை இன்று விகடனில் வரும் கவிதைகளில் இருந்து திரைப்படப் பாடல்கள் வரை பார்க்க முடிகிறது. குறிப்பாய் சமகாலப் பாடல்களில் வரும் உவமைகளைச் சொல்லலாம். எழுபது எண்பதுகளில் கவிதையில் உருவகம் பிரதானமாய் இருந்தது. மு.மேத்தாவின் “நெம்புகோல் கவிதை” ஒரு உதாரணம். பிறகு தொண்ணூறுகளில் குறியீடு மற்றும் படிமம். “நடக்கும் இடமெங்கும் பொன்மணல்” எனும் பிரமிள் வரியைச் சொல்லலாம். இப்போது கவிதையின் அச்சாணியாக உவமை இருக்கிறது. நேரடியான, கதைகூறும் பாணியிலான எளிய கவிதை தான் இன்றைய பாணி. நேரடியான கவிதையில் உக்கிரமான உணர்ச்சியை சொல்வதற்கும், அதை எளிமையாக வைப்பதற்கும் உவமை ஏற்றது. சமீப காலத்தில் நினைக்கும் போதெல்லாம் என்னை உலுக்க வைக்கும் உவமை இது.
“வாய்க்குள் உலகத்தை
அடக்கிய கண்ணனைப் போல
உள்ளங்கைக்குள் அடக்குகிறேன்
உன் குறியை” (மனுஷி, “குட்டி இளவரசியின் ஒளிச்சொற்கள்”)

Tuesday, June 2, 2015

இன்றைய ஞாயிறு

the last day by mikeshkaos

காலை எழுந்ததும்
இது ஒரு ஞாயிற்றுக்கிழமை
என நம்பத் தொடங்குகிறேன்
சோம்பல் முறித்து
கண்ணோர பீளையை துடைத்து
தடுமாறியபடி நடந்து
கழிப்பறை போகிறேன்
மூத்திரம் போகையில்
துண்டுத் துண்டுக் கனவுகள்
முட்டைகளை உடைத்து பாத்திரத்தில் ஊற்றியது போல்
ஒவ்வொன்றாய்…

Monday, June 1, 2015

ஜெயகாந்தனின் மறுகட்டமைப்பும் தீவிர இலக்கியவாதிகளும்

Image result for ஜெயகாந்தன்
(மே 2015 அம்ருதாவில் வெளியான கட்டுரை)

ஜெயகாந்தனின் மறைவை ஒட்டி எழுதிக் குவிக்கப்படும் புகழஞ்சலிகளும் பேசப்படும் மிகையான பேச்சுகளுக்கும் அவர் நிச்சயம் தகுதியானவர் தான். தமிழின் இறுதி பொது ”அறிவுஜீவி” அவர். அறிவுஜீவியை மேற்கோட்குறிகளுக்குள் போடக் காரணம் எந்த அறிவுத்துறையிலும் பயிற்சியற்ற இயல்பறிவு ஜீவி (common sense intellectual) அவர் என்பது.