Wednesday, May 20, 2015

குவளைக்கண்ணன் மறைவு


கவிஞர் குவளைக்கண்ணன் காலமானார். ஆழ்ந்த இரங்கல்கள். அவருடைய கவிதைகள் சிலவற்றை படித்திருக்கிறேன். மூன்று கவிதைத் தொகுப்புகள், நீட்சேயின் இவ்வாறு சொன்னான் ஜாருதுஷ்டிரன் போன்ற முக்கியமான நூல்களை வெளியிட்டிருக்கிறார். அவரது கவிதைகள் பெரும்பாலும் தேடல் பற்றியவை. அபியைப் போன்று அரூபக் கவிதைகளும் அதிகம் எழுதியவர். கீழ்வருவது போன்ற அழகான படிமங்களும் எழுதியிருக்கிறார்.

கிறக்கம்
காற்றாடி
முட்டி முட்டிக் காற்றைக் குடிக்க,
வெளி கிறங்கலாயிற்று.



 அவர் சம்மந்தமாய் இன்னொரு தனிப்பட்ட ஞாபகம் உண்டு. எனக்கு 20 வயதிருக்கும் போதும் முதல் சிறுகதைநிழல்’ “சொல்புதிதில்வெளியானது. அதை பாராட்டி ஒரு கடிதம் வந்தது. அதை என்னிடம் குறிப்பிட்ட ஜெயமோகன்உங்களை பாராட்டியதற்கு அவர் எடுத்துக் கொண்ட காரணம் தோதாகப் படவில்லை. அதனால் அதை நான் அக்கடிதத்தை பிரசுரிக்கப் போவதில்லைஎன்றார். அந்த கடிதத்தில் அப்படி என்ன எழுதியிருந்தார் என அவர் சொல்லவில்லை. கடிதத்தை எழுதியவர் குவளைக்கண்ணன். பிறகு எப்போது அவர் பெயரைப் பார்த்தாலும் என்னை முதன்முதலில் பாராட்டியவராயிற்றே என தென்றல் வருவது போல் ஒரு உணர்வு தோன்றும். இப்போது மட்டும் அவ்வுணர்வு வரவில்லை.

No comments: