Sunday, May 31, 2015

மாணவர்களும் அரசியலும்

Image result for iit student protests

ஐஐடி அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டத்தின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதை ஒட்டி நடக்கும் சர்ச்சை மாணவர் கருத்துரிமையை மையம் கொண்டது. மாணவர்களுக்கு அரசியல் பேச முழு உரிமை வேண்டும் என பலரும் கோருகிறோம். கடந்த சில பத்தாண்டுகளில் தொழில்நுட்ப கல்வியும், தனியாய் கல்வி நிறுவனங்களும் பெருகி, கலை, அறிவியல் படிப்புகள் பலவீனப்பட்ட பின் மாணவர் அரசியலும் முளையில் கருகிப் போய் விட்டது. ஆனால் இதைப் பேசுகிற வேளையில் மாணவர்கள் அனைவரும் மிகுந்த அரசியலுணர்வுடன் இருப்பதாகவும் அரசும் பிற நிறுவனங்களும் இணைந்து அவர்களை முடக்குவதாகவும் நம்புவதும் மிகை தான்.

Friday, May 29, 2015

அம்பேத்கர், பகவத் கீதை மற்றும் ஓஷோ

Image result for அம்பேத்கர்

அம்பேத்கரின் “கிருஷ்ணரும் அவரது கீதையும்” எனும் கட்டுரை படித்தேன். முதலில் மொழி பற்றி. அவரது மொழியின் சில அம்சங்கள் மிகவும் வியப்பூட்டுகின்றன. குறிப்பாய் அதன் சமகாலத்தன்மை. இன்றைய எழுத்தின் குணங்களாய் நாம் காணும் நேரடித்தன்மை, விவாத வடிவம், நேரடியாய் வாசகனை அழைத்து உரையாடும் தன்மை, அபாரமான தெளிவு, தயங்காமல் எதிர்கருத்தை பதிவு செய்வது, எளிமை, லௌகீக பார்வை இவை அனைத்தும் அம்பேத்கரிடம் உள்ளன. பெயரை மாற்றி பிரசுரித்தால் நிச்சயம் இணையத்தில் புழங்கும் ஏதோ ஒரு இளைஞன் எழுதியது எனத் தான் தோன்றும்.

Thursday, May 28, 2015

தமிழில் மெட்டாசினிமா?


”ஜிகிர்தண்டாவை” எல்லாம் மெட்டாசினிமா என்கிறார்கள். ஏதோ மெட்டாசினிமாவை நாம் புதிதாய் கண்டுபிடிக்க வேண்டி இருந்தது போல. பல வருடங்களாய் நம் மசாலா சினிமாவில் மெட்டா சினிமா மிக வலுவாய் இருந்து கொண்டு தான் இருந்தது. மெட்டா சினிமா, பின் நவீனத்துவம் எல்லாம் அறியாமல் இதை மக்கள் ரசித்து கைதட்டிக் கொண்டும் தான் இருந்தார்கள். ஆனால் இந்த உண்மையை நான் சற்று தாமதமாய் ஒரு நண்பருடன் ராயப்பேட்டையில் ஒரு ரோட்டோரக்கடையில் தந்தூரி சிக்கனை எச்சில் வழிய கடித்துக் கொண்டிருந்த போது தான் உணர்ந்தேன்.

Wednesday, May 27, 2015

அம்பையின் பெண்ணியப் பார்வையின் சிக்கல்கள்

Image result for அம்பை

“சிறகுகள் முளைக்கும்” 17 வருடங்களுக்கு முன்பு காலச்சுவடில் வெளிவந்த அம்பையின் ஒரு பெரிய பேட்டி. மனுஷ்யபுத்திரனும் கண்ணனும் சேர்ந்து எடுத்தது. சுவாரஸ்யமும் சரளமும் கொண்டது. ஒரு பாதி அம்பையின் வாழ்க்கைக்கதை, இன்னொரு பாதி அவரது இலக்கிய அபிப்ராயங்கள். இப்பேட்டியை காலச்சுவடு பெண் படைப்புகள் நூலில் காணலாம்.

இந்த காற்று


சேற்றில் குதித்து விளையாடும் குழந்தை போல
இக்காற்று என் மேல் புரள்கிறது
மேஜை,
அதன் மேல் புத்தகங்கள்
கோப்பை
நான் நறுக்க வைத்திருக்கும் வெங்காயம், பூண்டு
ஒவ்வொன்றையும் தூக்கி அடிக்கிறது
கொடியில் காயும் என் சட்டைக்குள்
புகுந்து
தன் பருத்த உடம்பை
தனக்குத் தானே காட்டி
சிரித்துக் கொள்கிறது
தூங்கும் உன்
கூந்தலை அள்ளி முகத்தில் இட்டு
மூடி
உதடுகள் தெரியும் படி
சில இழைகளை மட்டும் விலக்குகிறது

பறக்க இயலாமல்
ஒரு சிறு வண்டு தவிக்கிறது
ஜன்னல் சட்டத்துக்கு
பின்பக்கமாய்
சாய்வாய் இறகுகளை துடித்தபடி
எட்டிப் பார்க்கிறது

ஜன்னல் திரை
முந்தானை போல பறக்கிறது
எழுந்து அருகில் போக
தொங்கும் வானம்
வெளிச்சம் படாது காற்றுப்படாது
வெளிறிய சருமம் போல
கண்ணை கூசச் செய்கிறது

உள்ளே நடந்தபடி
வெம்மை மீதமிருக்கும்
ஒவ்வொரு இடமாய் தொட்டுப் பார்க்கிறேன்
கற்பூரம் தீபம் தொட்டு
கண்ணில் ஒற்றுவது போல.
காகிதக் கற்றைகள் போல்
பறந்து பறந்து அமர்கிறது
வெம்மை

வண்டு வெளியே

போய் விட்டிருக்கிறது

Sunday, May 24, 2015

பெரியாரும் பிராமணர்களும்


-    Image result for பெரியார்

தி.கவின் தாலியறுப்பு நிகழ்வை ஒட்டி இந்துத்துவர்கள் பெரியார் சிலைக்கு மூத்திர அபிசேகம் செய்து பரபரப்பை கிளப்பினர். அன்றைய நாள் முழுக்க முகநூலில் நண்பர்கள் தொடர்ச்சியாக பெரியாரை புகழ்ந்தும் அவரது மேற்கோள்களை நினைவுகூர்ந்தும் டைம்லைனை ஒரு பக்கம் நிரப்ப இன்னொரு பக்கம் பெரியார் எதிர்ப்பாளர்களும் சின்ன அளவில் தம் கோபத்தை காட்டினர். இரண்டாவது தரப்பை சேர்ந்த என் பிராமண நண்பர் ஒருவர் மிக மோசமான வசை மொழியில் பெரியாரை தாக்கி என் முகநூல் பக்கத்தில் பின்னூட்டம் இட்டார். அவர் படித்து ஒரு உயர்பதவியில் உள்ள முதிர்ந்த மனிதர். ஏன் இவ்வளவு ஆத்திரப்பட்டு பண்பாடின்றி பேசுகிறார் என எனக்கு வியப்பேற்பட்டது. தான் வாழ்வின் பெரும்பகுதி திகவினரின் இந்து மத தூஷணைகள் மற்றும் பிராமண சமூக தூற்றல்களை கேட்டு வளர்ந்தவன் என்பதால் தன்னுடைய வலி என்பது ஆழமானது என்றார். பொறுக்க முடியாமல் அவரது கோபமும் எரிச்சலும் வெளியாகி விட்டதாய் நியாயப்படுத்தினார். பெரியார் மீதான அவமதிப்பு, தாலி அறுப்பு, பண்பாட்டு விசயங்களில் தொடர்ந்து தமிழகத்தில் இந்துத்துவர்கள் உருவாக்கு சலசலப்புகள் ஆகியவை தவிர்த்து எனக்கு மற்றொரு கேள்வி தோன்றியது. தாம் மற்றும் தமது மதம், சடங்கு ஆகியவை தொடர்ந்து குறி வைத்து அரைநூற்றாண்டுக்கு மேலாக தாக்கப்படுவது நியாயமல்ல என பிராமணர்களுக்குள் ஒரு கோபம் புகைந்து கொண்டிருக்கிறது. இது நியாயமா என்பது போகட்டும். ஆனால் அரைநூற்றாண்டாக பிராமணர்கள் மீதான கடும் கசப்பு எல்லா மக்கள் தரப்புகளிலும் எவ்வாறு உயிர்ப்புடன் உள்ளது, ஏன் பெருவாரி தமிழர்கள் பிராமணர்கள் மீதான் பெரியாரின் எதிர்ப்பரசியலை ஏற்று துணை நின்றார்கள்? தாம் பெரியாரால் தூஷிக்கப்பட்டு தாக்கப்பட்டதாய் அவர்கள் கோபப்பட்டு கோரும் முன், பெரியாரின் இந்த பண்பாட்டு தாக்குதலை எப்படி தமிழக மக்கள் ஏற்றார்கள் என்பதைப் பற்றியும் அவர்கள் சிந்திக்க வேண்டும். பிராமணர்கள் மீதுய் தமிழ் சமூகத்தின் ஆழ்மனதில் ஒரு கடுங்கோபம் தொன்றி புகைய காரணம் என்ன? அதன் வடிகாலாய் விளைந்தது தானே பெரியாரின் இயக்கமும் செயல்பாடுகளும்?
ஜெர்மனியிலும், இங்கிலாந்திலும், இப்போது உலகு தழுவிய இஸ்லாமிய சமூகத்தின் மத்தியிலும் யூதர்கள் மீது பெரும் கசப்பும் வெறுப்பும் உண்டு. யூதர்களும் பிராமணர்களை போலத் தான் என்றாலும் நேரடியாக இரு சாராரையும் ஒப்பிட இயலாது. யூதர்கள் அனுபவித்த வரலாற்று கொடுமைகளையும் பிராமணர்கள் அனுபவித்ததில்லை. ஆனாலும் சில ஒற்றுமைகள் உண்டு.

Saturday, May 23, 2015

குட்டிப்பையன் உணவருந்துகிறான்மூன்று மணி போல ஓட்டல் பணியாளர்கள் ஒன்றாய் மேஜையை சுற்றி இருந்து உணவருந்தினர். பத்து வயது மதிக்கத்தக்க வடகிழக்கு மாநில சர்வர் பையன் ஒரு சின்ன தட்டில் கொஞ்சம் கெட்டிப்பட்ட சுடுசோறும் அதில் பருப்பும் ஊற்றி அமர்ந்தான். அடிக்கடி சூடு தாளாமல் விரல்களை உதறியபடி அதை விண்டு விண்டு ஆர்வமின்றி தின்று கொண்டிருந்தான். தன் நண்பனிடம் கண்காட்டி ஏதோ நகைச்சுவையை பகிரும் விளையாட்டு ஆர்வம். அவன் அம்மா பார்த்தால் சரியாய் சாப்பிடாமல் நோஞ்சானாய் போகிறாயே என கவலை கொள்ளலாம். எனக்கு ரசிக்கவே தோன்றியது.

Friday, May 22, 2015

நூலகமும் கழிப்பறையும் சாருவும்

அம்மா வருகையை ஒட்டி குவிந்திருந்த கரைவேட்டிகளில் சிலர் கோட்டூர்புரம் அண்ணா நூலகத்திற்குள் கழிப்பறை பயன்படுத்த வந்திருந்ததை பார்த்தேன். கூட இருந்த ஒருவர் கட்சிக்காரர்களின் வாகங்களை பார்க் செய்வதற்கும் இன்று நூலக வளாகத்தைதான் பயன்படுத்தினார்கள் என்றார். முன்பு நூலகத்தை ஆஸ்பத்திரி ஆக மாற்ற ஜெயலலிதா முயன்றதை ஒட்டி நடந்த சர்ச்சையில் சாரு தமிழகத்துக்கு நூலகங்களை விட கழிப்பறைகளே அதிகம் தேவை எனக் கூறியது வேறு நினைவுக்கு வந்து தொலைத்தது. அதிமுக கரைவேட்டிகளை மிக நன்றாய் புரிந்து கொண்டவர் சாரு.

“ரசிகன்” – அபத்தங்களின் நாயகன் - பா.சரவணன்


மனிதர்களுக்கும் வாழ்க்கைக்கும் இடையே நடக்கும் சூதாட்டத்தில்ரம்மிசேர்ந்துவிடாதபடி மனிதர்கள் வாழ்க்கையையும், வாழ்க்கை மனிதர்களையும் கலைத்துப்போட்டுக்கொண்டே இருக்கின்றன இந்த நாவலில்.

அம்மா அமளிதுமளி

Image result for jayalalithaa + aiadmk + adyar

அம்மாவின் கவர்னர் சந்திப்பை ஒட்டி சின்னமலையில் ஆரம்பித்து அடையார், கோட்டூர்புரம் வரை அமளிதுமளி தான். வட்டச்செயலாளர்களும், நிர்வாகிகளுமாய் வேன்களில் அழைத்து வரும் மக்கள், வேன் மீது கட்டப்பட்ட ஸ்பீக்கர்கள் முழங்கும் எம்.ஜி.ஆர் பாடல்கள், பேண்ட்மேளம், அங்கங்கே சிறுமேடை அமைத்து அபஸ்வரமாய் பாடும் புரட்சித்தலைவி கானங்கள், வழியெங்கும் பதாகைகள், சுவரொட்டிகள், இரட்டை இலை தோரணங்கள் இப்படி விழாக்கோலம் பூண்டிருந்தது. நேற்றிரவு அவ்வழி வீடு திரும்பும் போது நிறைய போலிசார் குவிக்கப்பட்டிருந்தது பார்த்தேன். நாளை இப்பாதையில் போக்குவரத்தை உறைய வைத்து விடுவார்கள் என எதிர்பார்த்தேன். ஆனால் போக்குவரத்து பெரும்பாலும் இயல்பாகவே இருந்தது. அதிமுகவினரும் சாலையில் நாணயங்கள் போல் இறையாமல் ஒழுக்கமாகவே நடந்து கொண்டனர். கிண்டியின் சிறு தெருக்களில் கழகத்தினர், சாதிக் கட்சியினர் கூட்டம் போட்டாலும் வாகனங்களை நடுசாலையில் நிறுத்தி, பாதையை மறித்து உயிரை வாங்குவார்கள். ஆனால் நகரத்தின் பிரதான பகுதி என்பதாலோ ஏனோ கட்சிக்காரர்கள் சுய ஒழுக்கத்துடன் நடந்து கொண்டார்கள்.

Wednesday, May 20, 2015

குவளைக்கண்ணன் மறைவு


கவிஞர் குவளைக்கண்ணன் காலமானார். ஆழ்ந்த இரங்கல்கள். அவருடைய கவிதைகள் சிலவற்றை படித்திருக்கிறேன். மூன்று கவிதைத் தொகுப்புகள், நீட்சேயின் இவ்வாறு சொன்னான் ஜாருதுஷ்டிரன் போன்ற முக்கியமான நூல்களை வெளியிட்டிருக்கிறார். அவரது கவிதைகள் பெரும்பாலும் தேடல் பற்றியவை. அபியைப் போன்று அரூபக் கவிதைகளும் அதிகம் எழுதியவர். கீழ்வருவது போன்ற அழகான படிமங்களும் எழுதியிருக்கிறார்.

கிறக்கம்
காற்றாடி
முட்டி முட்டிக் காற்றைக் குடிக்க,
வெளி கிறங்கலாயிற்று.

பட்டியல்

Freaktacular Barber by Negalmuur

“பட்டியல்” என்றொரு மாபியா படம் முன்பு வந்தது. வாடகைக் கொலையாளிகளான ஆர்யா மற்றும் பரத்துக்கு கொச்சின் ஹனீபா ஒரு பட்டியல் அளிப்பார். அதில் உள்ளவர்களை இவர்கள் போட்டுத் தள்ளுவார்கள். கடைசியில் இந்த பட்டியலில் ஆர்யா மற்றும் பரத்தையே சேர்த்து அவர்களையும் போட்டுத் தள்ளுவார்கள். பட்டியல் தூக்கினவர்கள் பட்டியலாலே சாகிறார்கள். தமிழ் இலக்கியத்திலும் பட்டியல்கள் இது போன்ற மாபியா பண்பாட்டை ஒரு பக்கம் வளர்க்கிறது. ஆனாலும் பட்டியலை சிலநேரம் தவிர்க்காமல் இருக்க முடிவதில்லை.

Tuesday, May 19, 2015

நாம் நினைப்பது

உன்னை நினைத்து
அட என்ன நினைத்தேன்
என நினைத்து முடித்து முடிப்பதற்குள்
நீ வந்து நிற்கிறாய்
விரல் நுனி பற்றியபடி
ஒரு நல்ல சேதி சொல்லுகிறாய்
இதைச் சொல்லவே
இவ்வளவு தூரம் வந்தேன் என்கிறாய்
உன்னைத் தான் நினைத்திருந்தேன்
என்றேன்
நெகிழ்ந்து
கையைப் பற்றிக் கொண்டாய்
இப்போதெல்லாம்
உன்னை நினைப்பதே
இல்லை

என்றாய்

போகன் சங்கர்


கடந்த ஐந்து வருடங்களில் கவனம் பெற்ற எழுத்தாளர்களில் போகன் சங்கர் ஒரு நட்சத்திரம். பொதுவாக, குழந்தைக்கு சோறூட்டும் அம்மாக்களை போன்றவர்கள் கவிஞர்கள். அப்படியான ஒரு அம்மா என்னிடம் சமீபத்தில் சொன்னார், குழந்தை பெற்ற பெண்கள் குழந்தைக்கு ஊட்டி மீதமாகிற உணவை சாப்பிட்டே குண்டாகி விடுகிறார்கள் என்று. பெரும்பாலான நம் கவிஞர்கள் தம் கவிதைகளையும் சுற்றி உள்ளோர் கவிதைகளையும் படித்து படித்தே மூச்சுத்திணறி விடுகிறார்கள். அவர்கள் நாவல், கட்டுரை, தத்துவம், அரசியல், சமூகவியல், வரலாறு என நகர மாட்டார்கள் (விதிவிலக்குகள் உண்டு). போகன் அப்படி அல்ல. அவரது பரவலான தீவிரமான வாசிப்பு வியப்பூட்டுவது. மன அழுத்தம் பற்றின Noonday Demon எனும் தடிமனான நூலை வாசிக்க தொடங்கினேன். எதேச்சையாய் ஒரு நூலகத்தில் கண்டெடுத்த நூல் அது. மிக முக்கியமான அடர்த்தியான பதிவு. தன்வரலாறும் உளவியலும் கோட்பாடுகளுமாய் மன அழுத்தத்தை ஆராயும் ஒரு சாதனை நூல். ஒரு நாள் எதேச்சையாய் போகன் அந்நூலைப் பற்றி முகநூலில் போகிற போக்கில் குறிப்பிட்ட போது ஆச்சரியமானேன். ஆனால் வாசிப்பதை அப்படி முழுங்கி எழுத்தில் மேற்கோள்களாய் துப்ப மாட்டார். சுருக்கி தன் கட்டுரையாக எழுத மாட்டார். அதை ஜீரணித்து தன் கருத்தாக்கி புது பார்வையில் அளிப்பார். போகனின் கவிதைகளில் காணும் ஆழ அகலத்துக்கு இந்த வாசிப்பும் தீராத் தேடலும் ஒரு காரணம்.

Monday, May 18, 2015

வாசக சாலையின் முழுநாள் இலக்கிய அரங்கு


நேற்று பனுவல் புத்தகக் கடை அரங்கில் நடந்த வாசக சாலையின் முழுநாள் இலக்கிய அரங்கு மிகவும் நிறைவாக பயனுள்ளதாக அமைந்தது. எழுபது பேருக்கு மேல் கூட்டம். உட்கார இடமின்றி சிலர் கீழே அமர்ந்திருந்தனர். ஏ.ஸி திணறி மூச்சு விட்டதால் பார்வையாளர்களும் பேச்சாளர்களும் மூச்சு விட திணறினர். ஆனாலும் பார்வையாளர்கள் ஆர்வமாய் முழுநாளும் இருந்து கேட்டனர். இது ஒரு வித்தியாசமான பார்வையாளர் கூட்டம். கணிசமாய் இளைஞர்கள். அதிகம் தமக்குள் விவாதிக்கவோ அடிக்கடி எழுந்து வெளியே டீ, சிகரெட்டுடன் தனிக்கூட்டம் போடவோ இல்லை. அதோடு பங்களிப்பாளர்களின் பேச்சுக்களும் ஆர்வமூட்டும்படியாய் செறிவாய் இருந்தன.
மாலன் ஏற்கனவே தனது இணையதளத்தில் எழுதியிருந்த “மூன்றாம் மரபு” கட்டுரையை ஒட்டி பேசினார். இன்றுள்ள எழுத்து சமூகவியல், வரலாறு, தன்வரலாறு, அரசியல் என முழுக்க மாறியுள்ள நிலையில், எழுத்தாளன் பிரதியை முன்வைக்காமல் தன்னை முன்வைத்து பேசுவது அதிகமாகியுள்ளது. எழுத்தாளன் இறந்து விட்டான் எனும் ரொலாண்ட் பார்த்தின் கூற்று தமிழில் இனி ஏற்கத்தக்கது அல்ல என்பது அவரது மையவாதம். மிக முக்கியமான ஒரு அவதானிப்பு இது. இதை வைத்தே ஒரு தனி கருத்தரங்கு நடத்தலாம்.

Friday, May 15, 2015

ரோஹித் ஷர்மாவின் அணித்தலைமை

Image result for rohit sharma ipl

நேற்றைய .பி.எல் ஆட்டத்தில் மும்பை அணிக்காக ரோஹித் ஷர்மாவின் தலைமை அற்புதம். குறிப்பாய் கள அமைப்பு. 170 இலக்கை விரட்டிக் கொண்டிருந்த கொல்கொத்தா அணியின் சூர்யகுமார் யாதவுக்கு கால் பக்கம் பந்தை flick செய்து சிக்ஸர் அடிக்கப் பிடிக்கும். இதை உணர்ந்து ரோஹித் சரியாக டீப் மிட்விக்கெட்டில் தடுப்பாளரை வைத்திருந்தார். யாதவ் அப்பொறியில் கச்சிதமாய் வீழ்ந்தார். அதே போல் மலிங்காவின் ஓவரில் மெதுவான பந்துகளை கணித்தாட முடியாமல் பியுஷ் சாவ்லா திணறுவதைக் கண்ட அவர் ஆடுதளத்தின் மெத்தனத்தன்மையை கணித்து இறுதி ஓவரை பகுதிநேர மெதுவேக வீச்சாளர் கயரன் பொலார்டுக்கு அளித்தார். முதல் பந்தில் யூசுப் பதான் வெளியேற நான்கு பந்துகளில் ஒன்றைக்கூட சாவ்லாவால் அடிக்க இயலவில்லை. ஒரே ஒரு பந்து பந்தின் கீழ்விளிம்பில் பட்டு மோசமான களத்தடுப்பு காரணமாய் நான்கு ஓட்டங்கள் போனது தவிர வேறு பாதிப்பு இல்லை.