Monday, March 30, 2015

புத்தகக் கண்காட்சியும் சிற்றூரும்

ஜூட் ராஜ் எனும் நண்பர் தூத்துக்குடியை சேர்ந்தவர். அவர் ஒரு கேள்வியை கேட்டார். சென்னை போல் ஏன் தன் ஊரில் புத்தகக் கண்காட்சியே நடப்பதில்லை? சிற்றூர்களில் புத்தகக் கண்காட்சி நடத்துவதன் பிரச்சனைகள் பற்றி சில பதிப்பாளர்கள் என்னிடம் ஏற்கனவே புலம்பி உள்ளதால் இது பற்றி சில விசயங்கள் எழுதத் தோன்றிற்று. அவருக்கு நான் எழுதிய பதில் கீழே:

கவிஞர்களை யாரும் கண்டுகொள்வதில்லையா? -


போன வருடம் திருச்சியில் உள்ள எஸ்.ஆர்.வி பள்ளியில் உள்ள எட்டில் இருந்து பத்தாம் வகுப்பு உள்ள தேர்ந்தெடுத்த மாணவ, மாணவிகளிடம் நவீன கவிதையை அறிமுகப்படுத்தி பேசினேன். அவர்களுக்கு பல கவிதைகள் புரிந்தன. நகுலன் கவிதை கூட. அதிலுள்ள கசப்பான சுயபகடியை ரசித்தார்கள். விக்கிரமாதித்யனின் மற்றொரு ஒரு சுயபகடிக் கவிதைக்கு அப்படி சிரித்தார்கள். சில்வியா பிளாத்தின் தற்கொலை பற்றி பேசி அப்படியே ஆத்மாநாமுக்கு வந்த போது மிகுந்த ஆர்வத்தோடு கண்கள் பளபளக்க கேட்டார்கள். மூன்று மணிநேரத்துக்கு மேல் நவீன கவிதை பற்றி மட்டுமே பேசினேன். யாரும் ஆர்வம் இழக்கவில்லை. 

Sunday, March 29, 2015

முகநூல் டைம்லைன் போல் ஒரு சினிமா சாத்தியமா?

Image result for theatre screen

தன் முகநூல் பக்கத்தில் சர்வோத்தமன் சினிமாவின் எதிர்காலம் பற்றி ஒரு முக்கியமான பதிவு எழுதி இருக்கிறார். சினிமா மீது இன்று மக்களுக்கு பழைய வசீகரம், மயக்கம் இல்லை என்கிறார். திரையரங்கில் பார்வையாளர்கள் கவனம் செல்போனில் முகநூல் அப்டேட்களை பார்ப்பதில் தான் உள்ளது, திரையில் இல்லை. நாம் இன்று பேசவும் எழுதவும் தான் விரும்புகிறோம், உட்கார்ந்து இன்னொருவர் சொல்வதை கேட்க ஆர்வம் குறைந்து வருகிறது. இதனால் தான் பல படங்கள் தோல்வியை தழுவுகின்றன. மக்களின் ஆர்வத்தை ஒரு படம் நோக்கி குவிக்க ரஜினி, சங்கர் போன்றவர்களோ பாடாய் படுகிறார்கள். எதிர்காலத்தில் சினிமாவின் நிலை இன்னும் பலவீனமாகும் என்கிறார்.

Saturday, March 28, 2015

உலகக்கோப்பையை வெல்ல நியுசிலாந்த் என்ன செய்ய வேண்டும்?

.

1.    எதிரணியின் பலவீனத்தை அறிந்து தாக்க வேண்டும். ஆஸ்திரேலியாவின் பலவீனம் என்ன? துவக்க மட்டையாளர்களும் 4ஆம் எண்ணில் வரும் கிளார்க்கும் நல்ல ஆட்டநிலையில் இல்லை. அதன் பிறகு பந்தை தூக்கி அடிக்கும் ஆல்ரவுண்டர்கள் தாம் வருகிறார்கள். ஆஸ்திரேலிய மட்டையாட்டத்தின் அச்சு ஸ்மித் தான். பிறரை முதல் பத்து அல்லது இருபது ஓவர்களுக்குள் வீழ்த்தி விட்டு மேக்ஸ்வெல்லை இருபத்தைந்து ஓவருக்குள் ஆட வைத்து விட்டால் ஆஸ்திரேலியாவை கடும் நெருக்கடிக்குள் தள்ளலாம். சுருக்கமாக சவுதி மற்றும் போல்ட் சேர்ந்து நான்கு விக்கெட்டாவது தமது முதல் ஸ்பெல்லில் எடுக்க வேண்டும்

தோனியின் தலைமையும் இந்திய உளவியலும்


(இரண்டு வாரங்களுக்கு முன் கல்கி வார இதழில் வெளியான கட்டுரை)

இந்திய அணி ரஜினி போல. ரஜினி படத்தில் அவர் இடைவேளைக்கு சற்று முன்பாக ஆரம்பித்து உறவினர், நண்பர்கள், குட்டி வில்லன்கள், மெயின் வில்லன் என ஒவ்வொருவரிடமாக அடி வாங்கிக் கொண்டே வருவார். ஆனால் கிளைமேக்ஸில் மிக முக்கியமான கட்டத்தில் திரும்ப அடித்து சாகசங்கள் செய்து வென்று விடுவார். இந்தியா உலகக்கோப்பைக்கு சற்று முன்பு வரை கிட்டத்தட்ட ஐ.சி.யுவில் அட்மிட் ஆகிற நிலையில் இருந்தது. இரண்டு மாதங்களுக்கு மேலாக ஆஸ்திரேலியாவில் ஒரு ஆட்டம் கூட வெற்றி பெறாமல் ஆடி வந்தது. அதற்கு முன்பு இங்கிலாந்தில் துவண்டு டெஸ்ட் தொடரை இழந்தது.

Friday, March 27, 2015

வா.மணிகண்டனும் ஜெயமோகனும்

நண்பர் வா.மணிகண்டன் நானும் லஷ்மி சரவணகுமாரும் “வெண்முரசை தட்டையான படைப்பு என கூறியது கேட்டு எங்கள் மீது பொங்கி இருக்கிறார். அவரது சில குற்றச்சாட்டுகளுக்கு எனது பதில்கள் இவை

Thursday, March 26, 2015

இந்தியா-ஆஸ்திரேலியா அரையிறுதி – பந்து வீச்சு
2003 உலகக்கோப்பை இறுதிப் போட்டி நினைவிருக்கும். அதுவரை தொடரில் நன்றாக வீசி வந்த நம் வேகவீச்சாளர்கள் பதறி விதிர்விதிர்த்து மோசமாக வீசினர். 12 வருடங்களுக்கு பிறகு அதே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நம் வேகவீச்சாளர்கள் அதே போல் பதறி குழம்பிப் போய் பந்து வீசினர். ஷாமி, மோஹித் ஆகியோர் இத்தொடர் முழுக்க ஒரு குறிப்பிட்ட நீளத்தில் தொடர்ந்து வீசினதால் மட்டுமே நன்றாக வீசி விக்கெட்கள் வீழ்த்தினர். ஆனால் இன்றோ ஆஸ்திரேலியா ஆடுவதற்கு முன்பே அவர்கள் நிதானம் இழந்து பயப்பட துவங்கினர். அதனால் ஆஸ்திரேலியாவை கட்டுப்படுத்தும் மிகை ஆர்வத்தில் ஒரே ஓவரில் பல பந்துகளை வீச முயன்று சொதப்பினர்.

Wednesday, March 25, 2015

தென்னாப்பிரிக்காவும் கண்ணீரும்நேற்றைய உலகக்கோப்பை அரையிறுதியில் கிராண்ட் எலியட் ஸ்டெயினின் பந்தில் ஆறு அடித்த நொடி மற்றொரு நாடகம் அரங்கேறியது. தென்னாப்பிரிக்க அணி வீரர்கள் மைதானத்தில் மனம் உடைந்து சாய்ந்தனர். மோர்னெ மோர்க்கல், டூப்ளஸி ஆகியோர் கண்ணீர் விட்டு அழுதனர். ஸ்டெயின் அப்படியே படுத்து விட்டார். எலியட் சென்று அவரை தூக்கி விட்டார். இவர்களைப் பார்த்து அதுவரை தன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொண்டிருந்த டிவில்லியர்ஸும் அழ ஆரம்பித்தார். அப்படி ஒரு உணர்ச்சி மேலிடல் கடைசியாக இலங்கையிடம் இந்தியா 96 உலகக்கோப்பையில் தோற்று வெளியேறிய போது பார்த்தது. தென்னாப்பிரிக்க துக்கத்தில் வர்ணனையாளர்கள், நிபுணர்கள், மீடியா, எதிரணியினர் என அனைவரும் கலந்து கொண்டனர். அதாவது அந்த ஆட்டத்தை நியுசிலாந்து வென்றது ஒரு குற்றம் என்கிற கணக்கில் அனைவரும் பேச ஆரம்பித்து விட்டோம். உலகக்கோப்பை இறுதிக்கு செல்லும் தகுதி படைத்த அணி தென்னாப்பிரிக்காவே நியுசிலாந்து அல்ல எனும் ஒரு தொனி பரவலாக தென்பட்டது. இது சரியா?

Tuesday, March 24, 2015

குற்றம் கடிதல்

Image result for kutram kadithal


சமீபத்திய சென்னை திரைப்பட விழாவில் என்னை மிகவும் கவர்ந்த படங்களில் ஒன்று “குற்றம் கடிதல்”. அப்போதே அதைப் பற்றி எழுத உத்தேசித்தேன். ஆனால் நேரம் வாய்க்கவில்லை. இப்போது தான் சரியான வேளை. அப்படத்துக்கு இவ்வருடத்துக்கான சிறந்த தமிழ்ப்படம் எனும் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் இயக்குநர் பிரம்மா மற்றும் பிற நடிக, நடிகையர், குழுவினருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். “குற்றம் கடிதல்” திரையரங்குகளில் வெளியாவதற்கு இந்த விருது வழிகோலும் என எதிர்பார்ப்போம். மிகவும் மகிழ்ச்சி அளிக்கிற விருது இது.

கிரிக்கெட் உலகக்கோப்பை அரையிறுதி: மீண்டும் திக்குமுக்காடியது தென்னாப்பிரிக்கா


தென்னாப்பிரிக்கா முன்பும் உலகக்கோப்பை காலிறுதி, அரையிறுதிகளில் தற்கொலை ஆட்டம் ஆடியதுண்டு. ஆனால் இம்முறை உலகக்கோப்பை ஆடிய அணி இதுவரையிலான தென்னாப்பிரிக்க அணிகளிலே தலைசிறந்தது. டேல் ஸ்டெயின் தென்னாப்பிரிக்காவில் தோன்றிய தலைசிறந்த வேகவீச்சாளர். ஏ.பி. டிவில்லியர்ஸ் உலகின் சிறந்த மட்டையாளர்களில் ஒருவர். அதோடு ஆம்லா, டுமினி, மில்லர், டூப்பிளஸி போன்ற உச்சபட்ச தரம் கொண்ட மட்டையாளர்கள். தொடர்ந்து கழுத்துயரத்துக்கு பந்தை 150 கி.மீ வேகத்தில் எகிற விடும் மோர்க்கல். இவர்கள் தான் அணியின் நியூக்ளியஸ். இது போன்ற ஒரு அபாயகர நியூக்ளியஸ் வேறெந்த அணிக்கும் இல்லை. ஆனாலும் இத்தொடரில் தென்னாப்பிரிக்கா தன் முழுசுதந்திரத்துடன் ஆடியதாக சொல்ல முடியாது. பொதுவாக சுயஎதிர்பார்ப்பும், சம்பிரதாயமான ஆட்டமுறையும் தென்னாப்பிரிக்காவின் இறுக்கத்துக்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கும். ஆனால் இம்முறை அபரிதமான திறமையும், டிவில்லியர்ஸின் ஜாலியான தன்னம்பிக்கையான தலைமை பாணியும் தென்னாப்பிரிக்காவை சற்று ஆதிக்கத்துடனே ஆட வைத்தது. ஆனால் அரையிறுதியில் அவர்களுக்கு அது போதவில்லை. முக்கியமான நேரத்தில் அணி அட்டை போல் சுருண்டு விட்டது.

Thursday, March 19, 2015

உலகக்கோப்பை காலிறுதியா சூதாட்டமா?இன்றைய இந்தியா – வங்கதேசம் உலகக்கோப்பை காலிறுதியின் நாற்பதாவது ஓவரில் வேகவீச்சாளர் ரூபல் ஜுசெனின் புல் டாஸ் பந்தை ரோஹித் ஷர்மா அடித்து கேட்ச் கொடுத்தார். ஆனால் பந்து இடுப்புக்கு மேல் உயரமாக வந்ததாக கூறி நடுவர் ஆலம் தேர் அதற்கு நோ பால் என தீர்ப்பளித்தார். ரோஹித் தப்பினார். ஆனால் இது மிகவும் சர்ச்சைக்குரியதாக இப்போது மாறி இருக்கிறது. வங்கதேசத்தில் நடுவர்களின் கொடும்பாவி எரித்திருக்கிறார்கள். வங்கதேச கிரிக்கெட் வாரியம் அதிகாரபூரவமாய் ஐ.சி.சிக்கு புகார் அளித்துள்ளது.

Tuesday, March 17, 2015

கேரட்டும் முயலும்


போன வருடம் மார்ச் மாதம் ஒரு மாலையில் என் மனைவி போனில் அழைத்து சொன்னாள் “கறிக்கடையில் இருக்கிறேன்”.
நான் சொன்னேன் “நல்லது அரைக்கிலோ கோழிக்கறி வாங்கி வா”
“இங்கே ஒரு முயல் பார்த்தேன். ரொம்ப சின்னது. அரைக்கிலோ தான் இருக்கும் என்கிறார்கள்”
“ஓ அப்படியா. ரொம்ப நல்லது. அதையே வாங்கி வா. எனக்கு முயல் கறி சாப்பிட வேண்டும் என ரொம்ப நாள் ஆசை”

அதீத வெளிச்சத்தில் உடையும் கண்ணாடிகள் - சர்வோத்தமன் (“ரசிகன்” நாவல் மதிப்புரை)
சில வருடங்களுக்கு முன் கோவையில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு நடந்தது.அதில் திரைப்பட இயக்குனர் மணிரத்னத்தின் மகன் தன்னார்வலராக கலந்து கொண்டார்.சில பத்திரிக்கையாளர்கள் அவரிடம் எப்படி கம்யூனிஸத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டது என்று கேள்வி கேட்டார்கள்.அதற்கு அவர் “Marxism is glamorous” என்று பதில் சொன்னார்.அவருக்கு அப்போது வயது பதினாறு.இப்போது அவர் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இருக்கிறாரா என்று தெரியவில்லை.

Thursday, March 12, 2015

தாலி சர்ச்சையும் மிகையும்

Image result for puthiya thalaimurai attack

இன்றைய ஆங்கில இந்துவின் நடுபக்கத்தில் வித்யா வெங்கட் புதிய தலைமுறையின் நிகழ்ச்சி சம்மந்தமான தாலி சர்ச்சை பற்றி ஒரு முக்கியமான கட்டுரை எழுதியிருக்கிறார். அதில் அவர் வைக்கிற விவாதம் சுவாரஸ்யமானது. நிகழ்ச்சியில் பங்கேற்ற பல நகர்வாழ் பெண்கள் தாம் தாலியை எப்போதும் அணிவதில்லை என்கிறார்கள். குறிப்பாக அலுவலகம் போகும் போது. குடும்பமும் இதற்கு ஏற்றபடி வளைந்து கொடுக்கிறது. நிகழ்ச்சியில் ஒரு பெண் தாலி ஒரு நாயின் சங்கிலி போல் தன்னை பிணைத்துள்ளதாக கூறுகிறார். இது அனைத்து பெண்களுக்கும் பொருந்துகிற செய்தியும் அல்ல.

Tuesday, March 10, 2015

The Story of My Writing and the Novel

(சாகித்ய அகாதெமியின் யுவ புரஸ்கார் விருது வாங்கும் நிகழ்ச்சியில் எனது ஆங்கில உரை)
I never reckoned to be a writer till my late twenties. Occasionally I wrote, but focused on reading. The more I read the less I felt the confidence to write. That is the paradox of writing! Reading is essential for the maturation of a writer, but too much of it could choke creativity. I realized that too. The initial phase of voracious reading helped me gain a foothold on writing, and later helped me to develop as a writer.
As a teenager, I wrote poetry. And I grew up writing stories. In my college days, I was thrilled to find that I was able to present argumentative answers. I immensely enjoyed writing examinations. I started to see it as an exercise in creative writing. But I did not venture into prose after six years. And there was always a reluctance to publish my writing. For 12 years since I began writing. I did not have the confidence to publish. For me, reading was the only way to understand the world and learn to live happily. It seemed to offer a means to engage with my misery and hopelessness. Writing, for me, was deeply personal and I did not want to share it with anyone.

உலகின் சிறந்த கிரிக்கெட் ஒருநாள் வீரர் யார்?

The toast of the town: Viv Richards was the No. 1 choice for 58% of the jury
கிரிக்இன்போ (cricinfo) இணையதளம் உலகின் தலைசிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் எனும் விருதை விவியன் ரிச்சர்ட்ஸுக்கு அளித்திருக்கிறது. இது சர்ச்சைக்குரிய தேர்வு.

சாதி, பெண்ணுடல், ஊனம்: விடுபடலும் மாட்டிக் கொள்வதும்


-    Image result for பெரியார்

தமிழின் முக்கிய கவிஞர் ஒருவர். அவருடைய உண்மையான பெயர் பற்றி கேட்டுக் கொண்டிருந்தேன். அப்படியே அவரது அப்பா பற்றி பேச்சு நகர்ந்தது. அப்பா பெயர் கேட்டதும் அது எங்கள் ஊர் மக்களுக்கே உரித்தான பெயர் அல்லவா என தோன்றியது. இப்போது கவனித்தால் அவர் முகம் கூட எங்கள் ஊர்க்காரர்களுக்கானதாக தோன்றியது. விசாரித்ததும் அவர் என் ஊர்க்காரர் தான் என ஒத்துக் கொண்டார். இத்தனை வருடங்களில் இதை எப்படி அறியாதிருந்தேன் என வியந்தேன். அவர் தன் ஊர் அடையாளத்தை எங்கேயும் வெளிப்படுத்தியதில்லை என கூறினார். ஏன்? அது தன் சாதி அடையாளத்தை பிறருக்கு காட்டிக் கொடுக்கும் என அஞ்சுவதாக கூறினார்.

Saturday, March 7, 2015

தென்னாப்பிரிக்காவும் உலகக்கோப்பையும்

But Sohail Khan removed de Villiers in the 33rd over and swung the match back in Pakistan's favour

இன்று (7-3-15) நடந்த தென்னாப்பிரிக்கா-பாகிஸ்தான் லீக் போட்டி இந்த உலகக்கோப்பையின் மிகச் சிறந்த ஆட்டங்களில் ஒன்று. பாகிஸ்தான் முதலில் மட்டையாடி 222 அடித்தார்கள். தடுக்கி தடுமாறி கூட அடிந்து விடக்கூடிய எளிய ஸ்கோர். ஆனால் தென்னாப்பிரிக்கா தடுமாறிக் கொண்டே இருந்தார்கள். எழவே இல்லை. அதற்கு இரண்டு காரணங்கள்.
 ஒன்று ஏழடி உயரமுள்ள முகமது இர்பான், இடதுகை வீச்சாளர்கள் ரகத் அலி, வஹாப் ரியாஸ் ஆகிய மந்திரப் பந்து வீச்சாளர்கள். பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சின் தனித்தன்மை அவர்களால் மிகுந்த வேகத்தில் பந்தை ஸ்விங் செய்ய முடியும் என்பது. அவர்கள் நன்றாக வீசத் தொடங்கினால் பாலைவனச் சூறாவளி அடிப்பது போலத் தான். எதிர்த்து நிற்க நீங்கள் திராவிடாகவோ காலிஸாகவோ இருக்க வேண்டும். இன்று தென்னாப்பிரிக்காவை அந்த புயல் அடித்து தூக்கி சென்றது. டிவில்லியர்ஸ் மற்றுமே சற்று நேரம் எதிர்த்து நின்று சுடர்ந்து விட்டு அணைந்து விட்டார்.

Thursday, March 5, 2015

இலக்கியத்திருட்டும் அதிர்ச்சியும்


தமிழ் இலக்கியப் பரப்பு ஒரு ஒண்டுக்குடித்தன குடியிருப்பு போல. எங்கு எந்த மூலையில் யார் என்ன எழுதினாலும் இன்னொருவருக்கு தெரிந்து விடும். அதனாலே இங்கு எழுத்து திருடப்படுவதற்கான சாத்தியம் இல்லை என்று இதுநாள் வரை நம்பி இருந்தேன். ஆனால் என் நம்பிக்கை பொய்த்து விட்டது.
இம்மாத “உயிர் எழுத்தில்” நண்பர் எச். முஜீப் ரஹ்மானின் “ரிகர்சனிசம்: பின்நவீனத்தின் இன்னொரு முகம்” என்றொரு கட்டுரை வெளியாகி இருந்தது. இதில் என்னுடைய ஒரு பழைய கட்டுரையில் இருந்து எட்டு பத்திகளை திருடி பயன்படுத்தி இருக்கிறார். 

Tuesday, March 3, 2015

உட்கார்ந்து விளையாடு பாப்பா!

1.22 பில்லியன் மக்கள் உள்ள ஒரு நாட்டில் ஏன் ஒலிம்பிக்கில் பதக்கங்களை அள்ளி வருவதற்காக வீரர்கள் இல்லாமல் போயிற்று என்பது நாம் அடிக்கடி வீராவேசமாக கேட்கும் கேள்வி. ஆனால் நமக்கு ஒரு விளையாட்டு கலாச்சாரம் ஏன் இல்லை என நாம் யோசிக்க தலைப்படுவதில்லை. ஒரு ஓய்வு நாளில் நாம் கடற்கரையிலோ பூங்காவிலோ நண்பர்களுடனோ குடும்பமாகவோ சென்று விளையாடுவதுண்டா?

Monday, March 2, 2015

க்ரியா ராமகிருஷ்ணன் முதல் ஸ்டீவ் ஜோப்ஸ் வரை: அழகியலும் வர்க்கமும்“க்ரியாவின்” புத்தகங்களை அவற்றின் அழகான நேர்த்தியான அமைப்புக்காகவும், அச்சு ஒழுங்குக்காகவும் பிடிக்கும். அந்நூல்களை கையில் எடுக்கையில் உண்மையில் ஒரு ஓவியத்தை வைத்திருக்கும் உணர்வையே தரும். சமீபமாய் வெளிவந்த இமையத்தின் “சாவுச்சோறு” நூலின் அட்டையை மிக மிருதுவாக வழவழப்பாக ஒரு சிவப்பு பின்னணியில் காகங்கள் பறக்கும்படி “க்ரியா” அமைத்திருக்கிறது. காகங்களை எம்போஸ் செய்திருக்கிறார்கள். இந்தளவுக்கு அபாரமான கலை நளினத்தை நாம் காலச்சுவடு, உயிர்மை நூல்களில் கூட காண முடியாது. அழகியலை இவ்வாறு ரசிக்கிற வேளையில் நாம் அதன் வணிக நோக்கத்தையும், இலக்கையும் கவனிக்க வேண்டும். ஒரு இலக்கியப் படைப்பு மிக அழகாய் பதிப்பிக்கப்படுவதால் அதன் தரம் மேம்பட்டு விடாது.