Friday, February 27, 2015

எழுத்தின் அதிகாரம்: ஓலைச்சுவடி, புத்தகம் முதல் டிவிட்டர் வரை -


எழுத்தாளர்களை விட வாசகர்கள் அதிக அறிவாளிகள் என்பது என் அனுமானம். எழுத்தாளர்களுக்கு தம் அறிவை இன்னும் புத்திசாலித்தனமாக, தர்க்கபூர்வமாக, கூர்மையாக வெளிப்படுத்த தெரிகிறது. அவர்களிடத்து இந்த மொழி தரும் ஒரு தன்னம்பிக்கை இயல்பாக இயங்குகிறது. ஆயிரமாண்டு அறிவையும் நுண்ணுணர்வையும் தன்னிடத்து கொண்டுள்ள மொழியில் புழங்கும் போது இயல்பாய் அவற்றை கடன் பெறும் எழுத்தாளன், ஒவ்வொரு சொல்லின் பின்னும் தான் எதிர்கொண்ட ஐரோப்பிய கல்வியின் செறிவை கண்டுள்ள எழுத்தாளன் தன் எதிரில் தேரும் கவச குண்டலமும் அற்று நிற்கும் வாசகனை விட மேலானவனாக தன்னை காட்டி விட இயலும். அது உண்மையில் எழுத்தின் வன்மை. எழுத்தாளனின் மேன்மை அல்ல.

Thursday, February 26, 2015

உலகம் பூச்சிகளுக்கானதுதேவ்தத் பட்நாயக் இந்திய தொன்மங்களில் ஆய்வு செய்யும் ஒரு அறிஞர், எழுத்தாளர் மற்றும் ஓவியர். அவருடைய மகாபாரத நூல் “ஜெயா” உலகம் முழுவதிலும் உள்ள பலவகை வாய்மொழி மற்றும் எழுத்துவடிவ மாகாபாரத கதைகளை தொகுத்து எளிமையான சுவாரஸ்யமான வடிவில் கூறுகிறது. இதிலுள்ள கோட்டோவியங்கள் அட்டகாசமானவை. கோட்டோவியங்களுக்காக மட்டுமே இந்நூலை தனியாக ஒருமுறை வாசிக்கலாம். பாண்டவர்கள், குறிப்பாக அர்ஜுனன், யுதிர்ஷ்டிரன், கண்ணன், த்ரௌபதி ஆகியோர் பற்றி முற்றிலும் வேறுபட்ட, ஆழமான தத்துவார்த்த புரிதலை இந்நூல் எனக்கு அளித்தது.

Sunday, February 22, 2015

அவநம்பிக்கைகளின் பேருருக்காலம்: “ரசிகன்” நாவல் மதிப்புரை – அழகிய பெரியவன்
மகத்தானவற்றின் மீது நாம் வைக்கும் நம்பிக்கையும், உறுதிப்பாடும் பொய்த்துப் போகிறபோது நொறுங்கிவிடுகிறோம். அவநம்பிக்கை மேலெழுகிறது. குழப்பங்களும், வினாக்களும் தோன்றுகின்றன. இதுநாள்வரை நாம் எதன்மீது பற்றுவைத்திருந்தோமோ அது இற்று விழுகிறது. நம் மனதிலேயே எதிர்வாதம் தோன்றி நம்மை உருமாற்றம் செய்கிறது. நாம் அதுவரை நம்பிக்கொண்டிருந்தவைக்கு எதிரானவராக அத்தருணத்தில் மாறிவிடுகிறோம். ஆர். அபிலாஷ் எழுதியிருக்கும்ரசிகன்நாவல், நம்பிக்கைகள் பொய்த்துப் போனபின்பு ஒரு மனிதன் எப்படி அவனுக்கே எதிரானவனாக மாறுகிறான் என்பதைச் சித்தரிக்கிறது.

Saturday, February 21, 2015

அன்னா கரனீனா: “அதற்கென்ன விருந்து சாப்பிட்டு விட்டு போங்க”


அன்னா கரனீனா நாவலில் எனக்கு ரொம்ப பிடித்த பாத்திரங்களில் ஒன்று ஒப்ளோன்ஸ்கியுடையது. ஒப்ளோன்ஸ்கி கதையின் நாயகியான அன்னாவின் அண்ணன். இவர் ஒரு வெகுளி. ஸ்திரிலோலரும் கூட.
ஒப்ளோன்ஸ்கி தன் குழந்தையின் தாதியின் மீது ஆசைப்படுவார். அவளுக்கு காதல் கடிதங்கள் எழுத அவை அவரது மனைவியிடம் மாட்டும். மனைவி கோபத்துடன் அவரிடம் கடிதம் பற்றி விசாரிக்க ஒப்ளோன்ஸ்கி சிரித்து விடுவார். வேண்டுமென்றே அல்ல. வாழ்க்கையை வெறும் சுகமாக கொண்டாட்டமாக மட்டுமே பார்க்கும் அவருக்கு துரோகம், கோபம், விசுவாசம் ஆகிய விழுமியங்கள் புரியாது. இவற்றுக்காக ஒருவர் உணர்ச்சிவசப்படுவது அவருக்கு நகைச்சுவையாய் தோன்றும். அவரது மனைவியின் அந்த உண்மையான கோபத்தின் ஆழம் அவருக்கு விளங்காமல் சிரித்து விடுவார். எவ்வளவு முயற்சி பண்ணியும் அவரால் முகத்தில் மிளிரும் சிரிப்பை மட்டும் கட்டுப்படுத்த முடியாது.

Saturday, February 14, 2015

பெரம்பலூர் கூட்டமும் பின்நவீனத்துவமும்

பெரம்பலூர் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியின் ஒரு பகுதியாக மலையில் எழுத்தாளர்களை அழைத்து பேச வைத்தார்கள். ஒவொரு நாளும் மூன்று எழுத்தாளர்கள் அல்லது பேச்சாளர்கள். எட்டாம் தேதி நான் பேசினேன்.

Tuesday, February 3, 2015

கொலைகாரனுக்கு கொலை தண்டனை கொடுக்கலாமா? - ஒரு விவாதம்

இது நண்பர் லஷ்மி கணபதிக்கும் எனக்கும் இடையிலான மரண தண்டனை பற்றி ஒரு விவாதம்.


வணக்கம் அபிலாஷ்.
மரண தண்டனை விதிக்கப்படுவது குறித்து உங்களது கருத்துகளில் எனக்கு ஒரு கேள்வி. கொலை என்பது குற்றமாயினும் போரில் அது குற்றமாக பார்க்கப்படுவதில்லை. தீவிரவாதிகளில் மனிதம் பாராட்டி ஒரு ராணுவ வீரன் இறந்தாக செய்தி சென்ற வாரம் வந்தது. மனிதம் பாராட்டப்படுவது சரி எனில் இவர் இறந்திருக்க மாட்டார் தவறெனில் ஏன் கொலைக்கும் மரண தண்டனைக்கும் ஏன் இவ்வளவு எதிர்ப்பு குரல்கள்?
அப்பொழுது யார்வேண்டுமானாலும் போர் செய்கிறோம் எனக்கூறி யாரை வேண்டுமானாலும் கொலை செய்யலாமா?

ஷிலோங்கில் யுவ புரஸ்கார் விழா

இம்மாதம் பத்தாம் தேதி ஷிலோங்கில் நடைபெறும் விழாவில் சாகித்ய அகாதெமியின் யுவபுரஸ்கார் விருதை வாங்கப் போகிறேன். அடுத்த நாள் விருதாளர்களின் சந்திப்பில் என் படைப்பு வாழ்க்கை பற்றி பேசப் போகிறேன். இத்தருணத்தில் என் எழுத்து வாழ்க்கையை துவக்கி வைத்த நண்பர் மனுஷ்யபுத்திரன், எழுத்தாளனாகும் ஆசையை என்னுள் விதைத்த ஜெயமோகன், புனைவுலகுக்குள் வர தூண்டுதல் அளித்த எஸ்.ரா, தொடர்ந்து எனக்கு உறுதுணையாக இருக்கும் தக்கலை கலை இலக்கிய பெருமன்ற நண்பர்கள், கடந்த 6 வருடங்களாய் ஒவ்வொரு மாதமும் எனக்காய் சில பக்கங்கள் ஒதுக்கும் அம்ருதா பத்திரிகை, டி.வி மீடியாவில் அறிமுகப்படுத்தி எனக்கு முகப்பரிச்சயம் உருவாக்கிய, என் ஒரு கட்டுரையை ஒரு நிகழ்ச்சியின் பேசுபொருளாகவே மாற்றிய “நீயா நானா” ஆண்டனி, அன்பு மனைவி காயத்ரி ஆகியோரை அன்புடன் நினைத்துக் கொள்கிறேன். இந்த விருதை விட எனக்கு பெரிதான வாசகர்களை பேரன்புடன் நெஞ்சோடு அணைக்கிறேன்.


Sunday, February 1, 2015

“தங்கமீன்கள்” மற்றும் “பம்பாய்”: காட்சியும் செய்தியும்சினிமாவில் ஒரு காட்சி ஒரு செய்தியை சொல்லும் பட்சம் அமைக்கப்படுகிறது. அந்த செய்தி எப்படி சொல்லப்படுகிறது என்பது தான் அக்காட்சியை சுவாரஸ்யமாக அழகாக மாற்றுகிறது. இப்படியான காட்சிகளை உருவாக்கத்தான் பட விவாதங்களின் போது மண்டையை பிய்க்கிறார்கள். இதை “சீன் பிடிப்பது” என்கிறார்கள். ஒரு காட்சி ஒரு செய்தியின் பல்வேறு பரிமாணங்களை காட்டுவதாய், ஆழத்தை நோக்கி பயணிப்பதாய் இருக்கலாம். “தங்கமீன்களில்” குழந்தை செல்லம்மா வெளியூரில் இருக்கும் அப்பாவைத் தேடி வீட்டிற்கு சொல்லிக் கொள்ளாமல் பேருந்து நிறுத்தத்தில் போய் நிற்கிறாள். அவளைத் தேடி வீட்டார் பல இடங்களில் அலைகிறார்கள். பிறகு ஒரு கடைக்காரர் அவளை அழைத்துக் கொண்டு வீட்டில் விடுகிறார். இப்படி அடிக்கடி வீட்டை விட்டு ஓடிப் போவது அவள் வழக்கம் என்பதால் “சரியான காரணம் சொல்லி விட்டு அவள் உள்ளே வந்தால் போதும்” என்கிறார் பாட்டி. அதுவரை அவளை உள்ளே விட வேண்டாம் என்று செல்லம்மாவின் அம்மாவிடம் கூறுகிறார்.