Thursday, November 13, 2014

எம்.எஸ்.எஸ் பாண்டியனின் Brahmin Non-Brahmin நூலின் சில பக்கங்கள் என் மொழிபெயர்ப்பில்


முன்னுரை: புது அறிமுகங்களின் அரசியல்

1916இல் டிஎம். நாயர் மற்றும் பிட்டி தியாராய செட்டியின் தலைமையில் சில முன்னணி மெட்ராஸ் மாநிலத்தின் சில தேசியவாதிகள் இந்திய தேசிய காங்கிரசின் படிநிலை வரம்புகளை உடைத்து ”பிராமணர் அல்லாதோருக்கான கொள்கை அறிக்கை” எனும் ஒரு சர்ச்சைக்குரிய ஆவணத்தை வெளியிட்டனர். அந்த அறிக்கைப்படி இந்தியர்கள் சுய ஆட்சிக்கான முதிர்ச்சியை இன்னும் அடையவில்லை; மேலும் ஆங்கில அரசாங்கம் இந்தியர்களுக்கு சுய ஆட்சி அதிகாரம் அளித்தால் அது பிராமணர்கள் பிற சமூகங்கள் மீது சர்வாதிகாரம் செலுத்துவதில் தான் சென்று முடியும். பிராமணர்கள் மக்கள் தொகையில் 3% தான். ஆனால் காலனிய அதிகார அமைப்பில், நவீன தொழில்களான சட்டம் போன்றவற்றிலும்ம் இந்திய தேசிய காங்கிரஸின் தலைமை பொறுப்புகளிலும் அவர்களின் ஆதிக்கம் மிகுதியாகவும் வெளிப்படையாகவும் உள்ளது.


இந்த கொள்கை அறிக்கை சர்ச்சையை தூண்டும் விதத்தில் இருந்த்து – மதராசிலும் பிற இடங்களிலும் வேறுபட்ட எதிர்வினைகளை உண்டு பண்ணியது. தேசியவாத முகாமில் பதற்றத்தையும் கோபத்தையும் உருவாக்கியது. தேசியவாதிகளைப் பொறுத்தவரையில் ”பிராமணர் அல்லாதோர்” குறித்த விவாதமே இந்திய தேசிய சமூகத்தின் பெயர் போன ஒற்றுமையை பிளப்பதற்கான ஆங்கில அரசாங்கத்தின் பிரித்தாளும் சூழ்ச்சியின் விளைவு தான். இன்னும் பல இடங்களில் அது ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது – இவர்கள் இதுவரையில்லாத அந்த புது அரசியல் அடையாளமான பிராமணர் அல்லாதோர் பற்றியே ஆச்சரியப்பட்டார்கள்
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இருந்தே மெட்ராஸ் மாநிலத்தில் அவ்வப்போது பிராமணர் அல்லாதோர் எனும் பதம் அவ்வப்போது பயன்படுத்தப்பட்டு வந்தாலும், இப்போது – அரசியல் நோக்கத்தை அறிவிக்கும் நவீன வடிவமான - கொள்கை அறிக்கையாக இது வெளிவரும் போது `பிராமணர் அல்லாதோரின் பெயரில் ஒரு புது அமைப்பை உருவாக்கும் விருப்பத்தை அது உள்ளுணர்த்துகிறது. ஒரு அரசியல் வடிவமாக பிராமணர் அல்லாதோரின் அடையாளத்தை பயன்படுத்தி மக்களை இணைப்பதே நோக்கம் என்பது தெளிவு. ஒரு கொள்கை அறிக்கை என்பது ஒரு குழுவை பிரநித்துவப்படுத்தி அதன் மூலம் ஒத்த சிந்தனையுள்ளோரை அந்த அடையாளத்தில் இணைக்க வேண்டும் ஒன்று தானே.

இந்த கொள்கை அறிக்கை “பிராமணர் அல்லாதவர்” என்கிற பதத்தை மொத்தம் முப்பது முறைகள் பயன்படுத்தியது. இது ஏதோ நன்கு வெளிப்படையான ஒரு உண்மையை திரும்ப திரும்ப கூறுவது போல் இருந்த்து. இருந்தும், பிராமணர் அல்லாதோர் குறித்த உண்மையை குழப்பமின்றி நிறுவ இதனால் முடியவில்லை. பிராமணர் அல்லாதோர் என்பதன் நிஜத்தன்மை சந்தேகிப்போர் இருந்தனர்; அவர்களுக்கு சில காரணங்களும் இருந்தன. உதாரணமாக, டைம்ஸ் ஆப் இந்தியா இந்த கொள்கை அறிக்கை பற்றி இவ்வாறு விமர்சித்தது:

முதலில், பிராமணர் அல்லாதோர் என்று ஒரு சமுதாயம் இல்லை; அதற்கு திரு (பிட்டி தியாகராயா) செட்டியார் அல்லது வேறு ஒரு நபரோ பிரதிநிதி எனக் கூறும்படியாகவும் இல்லை. பிராமணர் அல்லாதோர் எனக் கூறும் போது இந்த கட்சியில் சேரக் கூடிய கட்சிகள் பிராமண சாதியில் பிறக்காதவராய் இருக்க வேண்டும் என்கிற பொருள் வருகிறது. மெட்ராஸில் உள்ள பிராமணர் அல்லாத சாதிகளின் கடுமையான வலங்கை இடங்கை ச்ச்சரவுகளை அறிந்தவர் எவருமே திரு.செட்டியார் குறிப்புணர்த்துவது போல் பிராமணர் அல்லாதோர் ஓர் ஒற்றை, ஓரியல்பு கொண்ட, பொதுவான ஒருமித்த செயல்பாடுகளுக்கு இணங்குகிற, பிராமணர்களின் சமூக மத மேலாதிக்கத்திற்கு எதிராக இயங்குகிற குழுவாக மாற முடியும் என நம்ப மாட்டார்கள்.

பிராமணர் அல்லாதோர் எனும் அடையாளம் ஏற்றுக் கொள்ளும் படியான ஒன்றாக இன்னும் மாறவில்லை என்பது தெளிவு; அதை ஒரு முறையற்ற கற்பனையாக, ஒரு அரசியல் புனைவாக மட்டுமே முன்வைக்க முடியும். கொள்கை அறிக்கையிலே பிராமணர் அல்லாதோர் அடையாளத்தின் புதுமை குறித்த பிரக்ஞை சார்ந்த தடங்கள் இருந்தன எனலாம். பிராமணர் அல்லாதோரைப் பற்றி அது எந்தளவுக்கு பேசியதோ அந்தளவுக்கு அது பிராமணர் அல்லாதோரை பன்மையில் குறிப்பிட்டது; ஓரிடத்தில் சில பிராமணர் அல்லாதோரை அது பெயர் சொல்லி அழைக்கவும் தலைப்பட்ட்து – ‘செட்டி, கோமட்டி, முதலியார், நாயுடு, மற்றும் நாயர்...’. அதாவது பிராமணர் அல்லாதோர் என்பது ஒரு ஏற்றுக் கொள்ளப்பட்ட அடையாளமாக இன்னும் மாறவில்லை. அது அவ்வாறு மாறும் போக்கில் இருந்தது.

பிறர், குறிப்பாய் பிராமண தேசியவாதிகள், பிராமணர் அல்லாதோரின் அடையாளம் ஒரு பொது சொல்லாடலில் இடம் பெற்று செயல்வடிவம் பெறுவதை தடுக்க முயன்றனர். இந்த கொள்கை அறிக்கை பற்றி விமர்சித்த, பிராமணர்களுக்கு சொந்தமான பத்திரிகையான தி ஹிந்து இவ்வாறு கோரியது: ‘மாபெரும் இந்திய சமூகத்துக்குள் பிரிவினையை கொண்டு வருவதை தவிர இதனால் வேறெந்த நற்பயனும் இல்லை...’ அது மேலும் அறிவித்தது: ‘’இந்த வாசகர் கடித பகுதியை இது குறித்த விவாத்த்துடன் ஆரம்பிக்க நாங்கள் விரும்பவில்லை, ஏனென்றால் இது வெறுப்பூட்டும் சர்ச்சைகளுக்கு கொண்டு செல்லும்; மேலும் இந்த இயக்கத்தை நட்த்துபவரின் கசப்பூட்டும் நோக்கங்களை மறைமுகமாக முன்னெடுப்பதாகவும் இது அமைந்து விடக் கூடாது’. ஜஸ்டிஸ் கட்சி பிரசுரித்த பத்திரிகையான மெனிபஸ்டோ இவ்வாறு பதிலளித்தது: ‘ஏளனம் செய்வோர் ஏளனம் செய்யட்டும்...பசிபிக் பெருங்கடல் பொங்கி பாயும் போது அது தடுக்க இயலாத ஆற்றலுடன் பாயும்’. பிராமணர் அல்லாதோர் இதை நிரூபித்தனர். விரைவில் தி ஹிந்து தன் நடுப்பக்க பத்திகளில் பிராமணர் அல்லாதோர் குறித்த கோரிக்கைகளை விமர்சிக்கவும் விவாதிக்கவும் தயாராக வேண்டியானது.
பிராமணர் அல்லாதோர் விவாத்த்தை தன் பத்திரிகையில் இருட்ட்டிப்பு செய்யும் தி ஹிந்துவின் நோக்கம் நிறைவேறவில்லை என்றால், இன்னொரு பக்கம் டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு பிராமணர் அல்லாதோர் அடையாளம் பற்றி இருந்த அவநம்பிக்கை மெல்ல மெல்ல கரைந்து போனது. இன்னும் முழுக்க உருப்பெறாத விசயங்களைக் கொண்டு அரசியல் செய்வதே அப்போதைய பாணியாக இருந்தது. மெட்ராஸின் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையரான எம்.டபிள்யு.எம் யேட்ஸ் ‘(மெட்ராஸ் மாநிலத்தின்) அரசியல் போக்கு அகலமான வகைப்பாடுகளான பிராமணர்கள், தாழ்த்தப்பட்ட வகுப்புகள், பிற இந்துக்கள் என கையாள்வதே. இப்படியான வகைப்பாடுகள் எதிர்கால மக்கள் தொகை கணக்கெடுப்புகளின் போது கருத்திற் கொள்ளப்பட வேண்டும்...கணக்கெடுப்பாளர்களிடம் பிராமணர், பிராமணர் அல்லாதோர் எனும் வகைப்பாடுகளை உள்ளிட்டால் போதும் என எளிதில் அறிவுறுத்த முடியும். தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு தனியான தொகைகள் வேண்டும் என்றால் அவர்களையும் ஆதிவாசி இனத்தினரையும் சேர்க்கலாம்...’.  யேட்ஸின் இந்த பரிந்துரை அரசாங்க வகைப்பாட்டில் பிராமணர் அல்லாதோர் அடையாளம் இடம் பெற்றதை காட்டுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் பிராமணர் அல்லாதோர் அடையாளம் இயல்பாக ஏற்கப்பட்ட நீண்ட கால கடும் போராட்டங்களும் சமரசங்களும் தேவைப்பட்டன.
பிராமணர் அல்லாதோர் அடையாளத்தின் அநிச்சயத்தின் கட்டம் சந்தேகமின்றி இப்போது முடிந்து விட்டது எனலாம். சுதந்திரத்துக்கு பிறகு மதராஸ மாநிலத்தித்தில் இருந்து மாநிலமாக உருவாக்கப்பட்ட தமிழகத்தின் சமகால அரசியல் குறித்த பரிச்சயம் கொண்டோருக்கு இங்கு பிராமணர், பிராமணர் அல்லாதோர் எனும் வகைப்பாடுகள் இயல்பாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதையும், இங்குள்ள அரசியல் சாத்தியப்பாடுகள் மற்றும் சாத்தியமின்மைகளின் பரப்பு மாற்றியமைக்கப்பட்டுள்ளதையும் அறிவார்கள். ஒரு வாசிப்பு குழுமத்தில் கம்யூனிஸ்டுகளுடனான தன் முதல் சந்திப்பைப் பற்றி எழுத்தாளர் பாலகுமாரன் எழுதியுள்ள கீழ்வரும் உரையாடல் இந்த சந்தர்பத்துக்கு பொருத்தமானது.

அவனிடம் கேட்கப்பட்டது ”உலகில் இரண்டு வர்க்கங்கள் உள்ளது. அவை எவை என சொல்லுங்க பார்ப்போம்”
“எந்த வகுப்பு”, அவன் வியந்தான்.
உலகில் இரு சாதிகள் உண்டு. அவை எவை எனக் கூற முடியுமா உன்னால்?“
“ஒன்று பிராமணர், இன்னொன்று பிராமணர் அல்லாதோர்”
(அறைக்குள்) சிரிப்பொலி அலையென எழுந்தது

பிராமணர், பிராமணர் அல்லாதோர் எனும் வகைப்பாடு தன்னளவில் ஒரு வெளிப்படையான ஏற்புடைமையை கொண்டிருக்கிறது; இது தமிழகத்தில் நாம் யோசிக்கிற, உணர்கிற, செயல்படுகிற விதத்தை கட்டமைக்கிறது. பரஸ்பர எதிர்வுகள் மற்றும் பகைமையின் அடிப்படையில் இவை அர்த்தம் கொள்ளுவதும் அதேயளவு முக்கியமானது தான். The Brahmin in the Tamil Country (தமிழகத்தில் பிராமணர்) எனும் நூலின் முன்னுரையில் என்.சுப்பிரமணியன் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “இந்த நூலை எழுதுவதால் நான் கொஞ்சம் ஆபத்தை மேற்கொண்டுள்ளதை அறிவேன். இதை கொள்கையை துறந்த ஒருவனின் பிராமணர்களுக்கு எதிரான எழுத்து என சிலர் பார்க்க தயாராவார்கள். இன்னும் சிலர் பிராமணர்களுக்கு ஆதரவாய் அறிக்கை விடுக்கும் ஒரு கம்யூனிஸ்டாகவும் என்னைப் பார்ப்பர்”. சுப்பிரமணியன் எதிர்நோக்குகிற ஆபத்து என்பது சமகால தமிழகத்தில் பிராமண பிராமணர் அல்லாதோர் பகைமைக்கு அப்பாற்பட்டு ஒரு அரசியல் களம் இல்லாமல் போனது பற்றியது – இது உண்மையாகவோ அவரது கற்பனையாகவோ இருக்கலாம்.

கடந்த எட்டு சதாப்தங்களாய் தமிழகத்தில் பிராமண, பிராமணர் அல்லாதோர் பற்றின இருமை அடையாளங்களை வைத்து அரசியல் செய்வதன் விளைவுகள் ஒரேபடியான முக்கியத்துவம் கொண்ட்து, கணிசமானது. சுதந்திரத்துக்கு பின்னான காலகட்டம் குறித்த சில சுருக்கமான சுட்டிகளை இதை விளக்கும் பொருட்டு அளிக்கிறேன்: (1) முதல் இந்திய அரசியலமைப்பு சட்ட்திருத்தமான 1951 அறிமுகப்படுத்தப்பட்ட சட்டப்பிரிவு 15(4) கல்வி நிறுவன்ங்களிலும் அரசு வேலைகளிலும் பிராமணர் அல்லாதோருக்கு ஒதுக்கீட்டை உறுதி செய்த்து – இது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மதராஸ் மாநிலத்தில் நடந்த போராட்டங்களின் விளைவாக செய்யப்பட்ட்து; (2) ஒரு பிராமணர் கூட இல்லாமல் அமைச்சரவை அமைக்கப்பட்ட முதல் மாநிலம் இந்தியாவில் தமிழகம் தான். காமராஜரின் தலைமையில் 1954இல் இது அமைக்கப்பட்ட்து. சுவாரஸ்யமாக, முன்னர் தீண்டப்படாத சாதியாக இருந்த சமூகமொன்றை சேர்ந்த காமராஜர் தான் அப்போது காங்கிரஸ் அமைச்சரவைத் தலைவர். காலனிய காலகட்ட்த்தில் பிராமணர்கள் ஆதிக்கம் செலுத்திய தேசிய காங்கிரஸ் கட்சி கூட பிராமணர் அல்லாதோரின் கைக்கு 1950களில் சென்று விட்டிருந்த்து; (3) 1970களில் தமிழக அரசியலில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் இரண்டுமே பிராமணர் அல்லாதோருடன் கூட்டணி அமைத்த கட்சிகளாகவே இருந்தன. தமிழக அரசியலை இன்றும் தீர்மானிக்கிற போக்காக இது உள்ளது; எதிர்காலத்திலும் மாறுவதாக தெரியவில்லை; (4) 1990 ஆக்ஸ்டில் இந்திய பிரதமர் வி.பி சிங் பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு அரசு வேலைகலில் 27 சதவீத ஒதுக்கீடு அறிவித்த போது வடக்கு இந்தியாவில் மேல்சாதியினர் பரவலாக பெரும் போராட்டங்கள் நட்த்தினர். ஆனால் தமிழகத்தில் இந்த அறிக்கை வரவேற்கும் தீர்மானம் ஆகஸ்டு 21 1990 அன்று வெளியிடப்பட்ட்து. இந்த தீர்மானத்தை மாநில அரசு பொதுச்சுற்றுக்காக அச்சிட்ட்து; (5) அகில இந்திய அளவில் பிராமணர அல்லாதோருக்கு அரசு வேலையிலும் கல்வி வாய்ப்பிலும் ஒதுக்கீட்டை எதிர்க்கும் வலதுசாரி இந்து அமைப்புகள் தமிழகத்தில் மேற்சொன்ன தீர்மான்ங்களை ஆதரிக்கின்றன. இங்குள்ள பரவலான அரசியல் கருத்தொற்றுமைக்கு எதிராக செயல்பட்டால் தமக்கு ஏற்கனவே உள்ள சிறு இடமும் காலியாகி விடும் என இக்கட்சிகள் அறியும்.

பிராமணர் மற்றும் பிராமணர் அல்லாதோரின் வம்சாவளிகள்
இந்த பின்னணியில் இருந்து, இந்நூலில் என்னுடைய நோக்கம் என்பது பிராமணர் மற்றும் பிராமணர் அல்லாதோரின் எதிர்ப்பின் வம்சாவளிகளை, இந்த எதிர்ப்பு எவ்வாறு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக, விளக்கம் தேவையற்றதாக, இயல்பானதாக மாறியுள்ளது என்பவற்றின் சம்பவப்புள்ளிகளை கோடிணைப்பதாகும். காலப்போக்கில் இந்த எதிர்ப்பு பெற்றுள்ள உண்மைத்தன்மை மற்றும் அரசியல் வெற்றி சாத்தியங்களை விவரிக்கும் போது நான் பிரதானமாய் பிராமணர் அல்லாதோர் எனும் அடையாளம் ஒரு அரசியல் வகைமையாக எவ்வாறு நீண்டகால இயல்பாக்கம் அடைந்துள்ளது என்பதிலும், இதன் செயலமுறைகள் எவ்வாறு காலனியவாதத்தின் கீழ் பிராமண அடையாளத்தின் மறுமொழிதலுக்கு வழிகோலியது என்பவற்றில் தான் கவனம் செலுத்தப் போகிறேன். ஆக, இந்த புத்தகத்தின் மைய அச்சு என்பது தமிழ் பிராமணர் என்பதாக இருக்கப் போகிறது. ‘பிராமணர் அல்லாதோர்’ எனும் பதத்தை அது ஒரு கருத்தாக்கத்தை வெளிப்படுத்தும்படி கட்டமைக்கப்படுகிறது என்கிற பார்வையில் இருந்து நோக்கும் போது பிராமணர் மையமானவர்கள் ஆகிறார்கள். புதிதாய் தோன்றுவதன் அரசியல் என புது படையாளங்களின் வருகையை வர்ணித்த வில்லியம் கொனொலி அதன் மூலம் அடையாளங்களை தம்மை கற்பனை செய்து, முன்னிறுத்தி, உறுதிப்படுத்துவதன் செயல்பாட்டை இவ்வாறு சித்தரிக்கிறார்: “புதிதாய் தோன்றுவதன் அரசியல் பழைய பன்மய, நீதிசார், சட்டபூர்வ அமைப்பை நகர்த்தி விட்டு அவ்விட்த்தில் புது அடையாளங்களை கொண்டு வந்து சேர்க்கும் ஒரு போராட்ட செயல்பாடு”. மேலும்: “பண்பாட்டு தளத்தில் ஒரு புது அடையாளத்தை தோற்றுவிப்பதில் அது முன்னேறுகிற அளவைப் பொறுத்து புதிதாய் தோன்றுவதன் அரசியல் என்பது ஏற்கனவே நன்கு ஸ்திரப்பட்டு விட்ட அடையாளங்களின் வடிவம் மற்றும் தனித்துவத்தை மாற்றும்”. கொனொலி கூறுவதை வைத்துப் பார்க்கையில், காலனிய காலத்தில் தமிழகத்தில் பிராமணர் மற்றும் பிராமணர் அல்லாதோரின் அடையாளங்கள் இரண்டும் எவ்வாறு பரஸ்பரம் ஒன்றையொன்று தக்க வைத்திருந்தன என தகவல்பூர்வமாய் சித்தரிக்கவும் வெளிப்படுத்தவும் நான் முயலப் போகிறேன். வேறு சொற்களில் கூறுவதானால், பிராமணர் அல்லாதோர் எனும் வகைமை சகஜமாக்கல் – அதாவது அதை வெளிப்படையான, இயல்பான மற்றும் அடியாழத்தில் நிலைகொண்ட வகையாக மாற்றும் செயல்பாடு - எவ்வாறு இன்னொரு புறம் ஏற்கனவே இருந்த பிராமண அடையாளத்தை மறுகட்டமைத்தது என்பது என் அக்கறையாக இருக்கப் போகிறது. ஆக, நாம் அடுத்து பார்க்கப் போவது போல, காலனிய காலகட்ட்த்தில் பிராமண, பிராமணர் அல்லாதோர் அடையாளங்களின் கூட்டுருவாக்கம் தமிழகத்தில் முன்பிருந்த சமூக-அரசியல் ஏற்பாடுகளை, இசைவை அசைத்துப் பார்த்த்து, ‘பன்மய, நீதிசார், சட்டபூர்வம்’ குறித்து புது அடிப்படை எண்ணங்களை உள்ளே கொணர்ந்தது.

இன்னும் குறிப்பாய், இந்நூல் பிராமணர், பிராமணர் அல்லாதோர் என்பன சொல்லாடலின் பொருட்களாய் மாறியதன் வரலாற்று, அரசியல் ஊகங்களை - அதாவது பிராமணர், பிராமணர் அல்லாதோர் பற்றி பேசுவதன் சாத்தியங்களை தளர்த்திய வெளிப்பாட்டு புரிதலின் இயங்கு முறைகள் - இந்நூல் சித்தரிக்க முயலும். இந்நூல் இவ்வாறு பிராமணர் மற்றும் பிராமணர் அல்லாதோர் வகைமைகளை தோற்றுவிப்பதன் பின்னிருந்த வரலாற்று குறிப்புத்தன்மைகளை – இது இன்று இவ்வகைமைகள் பெற்றுள்ள மெய்மை சார்ந்த இயல்புத்தன்மையை அசைத்துப் பார்க்க உதவும், ஒரு மொழிசார் பகுதியில் வலராற்றுரீதியான மெய்மை மூலஆய்வை செய்வது என நோக்கம் எனவும் ஒரு அர்த்த்த்தில் கூறலாம். வலராற்றுரீதியான மெய்மை மூலஆய்வை ஒரு வகையான விமர்சனம் எனக் கூறும் மைக்கேல் பூக்கோ அதன் குணாதசியங்களை இவ்வாறு விளக்குகிறார்: “உலகுதழுவிய மதிப்பு சம்பிரதாய் வடிவங்களை தேடுவதற்காய் இந்த வகை விமர்சனத்தை இனி யாரும் பயிலப் போவதில்லை. மாறாய், நம்மை கட்டுவிப்பதிலும், நம்மை செய்வது யோசிப்பது, சொல்வது ஆகியவை ஒட்டி செயல்படும் தனிமனித நிலைகளாய் பார்ப்பதலும் பங்களித்த சம்பவங்களை வரலாற்றுபூர்வமாய் ஆராயும் ஒன்றாக இது மாறப் போகிறது”. ஒரு நவீன ‘மதசார்பற்ற’ பொதுவெளியில் சாதியை ’பேசப்படத்தக்கதாக’ மாற்றும் வடிவங்களை உருவாக்கியதன் வழி காலனியம் பிராமணர் மற்றும் பிராமணர் அல்லாதோர் அடையாள உருவாக்கத்தில் பெரும்பங்கு ஆற்றியது. இது காலனிய தென்னிந்தியாவில் பிராமணர் அல்லாதோர் அடையாளத்தின் உருவாகத்திற்கான ‘புதிதாய் தோன்றுவதன் அரசியலிற்கு’ ஒரேநேரம் வாய்ப்புகளையும், தடைகளையும் தோற்றுவித்த்து.

அடையாளங்களையும் பழக்கங்களை வரலாற்றுபூர்வமாகவும், சந்தேகத்திற்குரிய தற்செயல்வாத நோக்கிலும் பார்க்கும் வம்சாவசளி அணுகுமுறையை நான் தேர்ந்தது பிரக்ஞைபூர்வமான ஒன்று. தென்னிந்தியாவின் பிராமணர் அல்லாதோர் குறித்து இதுவரை உள்ள எழுத்துக்களில் உள்ள இரு பிரதானமான, பிரச்சனைக்குரிய, அணுகுமுறைகளின் விளைவு தான் எனது இந்த தேர்வு.

முதலில், பிராமணர் அல்லாதோர் அரசியலின் சில முக்கிய கருத்துக்கள் பிராமணர் அல்லாதோர் அடையாளத்தை கற்பிதம் என குறைவாக மதிப்பிடுகின்றன, அது நடைமுறைப்பட்டு, உண்மையாகவே விளைவுகளை ஏற்படுத்தி இருந்த போதிலும். ஓரளவு சமீபமாய் 1989இல் இது குறித்து எழுதும் என்.சுப்பிரமணியனால் பிராமணர் அல்லாதோர் எனும் பதம் ‘வலுவற அற்பமான ஒன்று, அது தர்க்கரீதியாய் நாற்காலி மேஜை மற்ரும் முட்டைக்கோசை கூட குறிக்கலாம்’ என கோர முடிகிறது. சுப்பிரணியனைப் போன்ற ஒரு உள்ளூர் ‘புலம்பல்’ வரலாற்றாசிரியரை விட. கேம்பிரிட்ஜ் பள்ளி எனப்படும் டேவிச் வாஷ்புரூக் மற்றும் கிறிஸ்டபர் பேக்கர் போன்ற நன்கறிந்த வரலாற்றாசிரியர்கள் தாம் இந்த நிலைப்பாட்டை இன்னும் முறையாக விவாதித்திருக்கிறார்கள். காம்பிரிட்ஜ் பள்ளி வரலாற்றாசிரியர்கள் காலனியாதிக்கத்திற்கு உட்பட்டோரின் அரசியலை குழுக்களுக்கு உட்பட்டதாக காட்டியுள்ளார்கள்; இந்த குழுக்கள் என்பவை பக்கவாட்டாய் அடையாளங்களினூடாய் பகிரப்படுவது அன்றி காப்பாளர்-வாடிக்கையாளர் தொடர்புவலை சார்ந்து செங்குத்தாக உருவாவதாக சித்தரித்தார்கள். இந்த கட்டமைப்பினுள் அரசியல் என்பது குறுகின பொருளாதார மற்றும் அதிகார ஆர்வங்களால் தூண்டப்படுவதாக பார்க்கப்படுகிறது. இந்த கட்டமைப்பினுள், அடையாளங்களின் உருவாக்கம் மதிப்பற்றதாகிறது. ஆக, வாஷ்புரூக் இவ்வாறான பிராமணர் அல்லாதோர் குறித்த அடையாள விளக்கத்தினால் ஆச்சரியப்பட்டு தானே ஆக வேண்டும்: “மிகுதியான வகுப்புவாத (சாதிய) கலவரம் [மதராஸ் மாநிலத்தில்] தோன்றிய போது, அது ஆக கவனத்திற்குரிய வகையில் இருந்தது. 98 சதவீத மக்கள் தொகையை பிரதிநுத்துவப்படுத்துகிற, கணிசமான வளம் மற்றும் அரசியல் அதிகாரத்தை கொண்டுள்ள, ஒரு சமூகம் [பிராமணர் அல்லாதோர்], இரண்டு சதவீதத்துக்கும் குறைவான, அதே அளவிலான பொருளாதார மற்றும் அரசியல் வளங்களை சற்றும் கொண்டிராத, மற்றொரு சமூகத்தை [பிராமணர்கள்] தம்மை ஒடுக்கியதாக கூறி கடுமையாக சாடினார்கள்”. அதே போன்று “மன்றங்கள், அமைச்சர்கள் மற்றும் வாக்காளர் தொகுதிகளின் காலகட்டத்தில் இந்தியாவின் புது அரசியலின் பொது தன்மையாக சிறுபான்மையினரை பாதுகாக்கும் அமைப்புகள் திகழ, (மக்கள் தொகையில் 98 சதவீதத்தை, உள்ளூர் சமூகத்தில் கணிசமான செல்வம் மற்றும் செல்வாக்கை கொண்டுள்ள கணிசமான ஆட்களை உள்ளடக்கிய) ஒரு பெரும்பான்மையினரை பாதுகாப்பதாய் கோருகிற அமைப்பொன்றை காண்பது என்பது - ஒருவேளை முரண்பாடாக அல்லவெனினும் - விநோதமாக கூட படலாம்”. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், பிராமணர் அல்லாதோரின் அடையாள விளக்கத்தில் ஓரளவிலான புரிதலின்மையை நாம் இங்கே காண்கிறோம். இது ஆச்சரியத்திற்குரிய ஒரு தருணமாக உள்ளது.

ஏற்கனவே உள்ள இலக்கியத்தில் இரண்டாவது போக்கு என்பது பிராமணர் அல்லாதோரின் அடையாள தோற்றத்தை அமைப்புரீதியாய் தவிர்க்க இயலாத்தாய் பார்ப்பது. அதாவது, அதன் தோற்றம் எந்த ஆச்சரியத்தையும் தரவில்லை. உதாரணமாய், என்.ராம், காலனிய காலத்து பிராமணர் அல்லாதோரின் அரசியலை பற்றி எழுதுகையில் இவ்வாறு கோருகிறார்:

நவீன காலனிய சமூகத்தில், சமூக சமத்துவத்திற்கான, சாதிய ஆதிக்கத்திற்கு எதிரான ஒரு அமைப்பு ஒரு பிராமணர் அல்லாத நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்பது ஆச்சரியம் அல்ல; ஏனென்றால் இந்து படிநிலையில் பிராமணரே முதன்மை சாதியாக, வர்ணாசிரம அமைப்பின் மைய அச்சாக இருந்தனர். சொல்லப் போனால், பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி துவங்கி இந்து சமூகத்தில் பிராமணர்கள் அனுபவித்து வந்துள்ள அனுகூலங்கள் பற்றியும், கீழ்த்தட்டை சேர்ந்த சாதிகளின் ஆட்களும், குழுக்களும் அவர்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக தன்னியல்பாய் கிளர்ந்து எழுந்தெழுந்ததற்கும் கணிசமான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

ஆட்கள் தன்னிச்சையாய் கிளர்ந்தெழுந்தனர்’ என்பது பிராமணர் அல்லாதோர் அடையாளம் வந்தடைந்ததை தவிர்க்க இயலாத ஒன்றாக இது குறிக்கிறது; மேலும் ஒரு குறிப்பிட்ட இயல்புதன்மையையும் இது அதற்கு அளிக்கிறது. பிராமணர் அல்லாதோரின் அமைப்பு பற்றி அதன் கொள்கை வகுப்பாளர்கள்  எழுதிய வெகுமக்கள் வரலாறுகளின் தனித்த போக்காகவும் இது உள்ளது.


No comments: