Tuesday, October 14, 2014

ஜெயலலிதா கார்ப்பரேட்டுகளுக்கு எதிரானவரா?


ஜெயலலிதாவையும் கலைஞரையும் ஒப்பிட்டு ஒரு நண்பர் பேசிக் கொண்டிருந்தார். கலைஞர் ஆட்சிக்கு வந்ததும் சினிமா, கேபிள், சிமிண்ட் என எல்லா கார்ப்பரேட் நிறுவனங்களையும் தனது குடும்பத்தினதாக மாற்றிக் கொள்வார். ஜெயலலிதா கார்ப்பரேட்டுகளுக்கு மறைமுகமாக எதிராக இருக்கிறார். அம்மா தண்ணீர், உணவகம் என்றெல்லாம் கொண்டு வருகிறார் என்றார்.


நான் சொன்னேன் ஜெயலலிதாவால் கார்ப்பரேட்டுகளை தாங்கிக் கொள்ள முடியாது. அவர் கார்ப்பரேட்டுகளுக்கு மேல் உச்ச கார்ப்பரேட்டாக தான் இருக்க வேண்டும் என நினைப்பார் என்றேன். மேலும் அவர் வெளிப்படையாக 20 லட்சம் கல்லூரி ஆசிரியர் வேலைக்காக வாங்கும்படி கல்லூரி நிர்வாகங்களை தூண்டியது என்னைப் போன்றவர்களின் வயிற்றில் அடித்துள்ளது. நிறைய பேர் வட்டிக்கு வாங்கிக் கொடுத்தால் தான் வேலை எனும் நிலை வந்துள்ளது. ஆனால் என்னுடைய கனவு ஒரு காலத்தில் அரசு இந்த கட்டிங் கலாச்சாரத்தில் இருந்து வெளிவந்து தானாகவே உற்பத்தி பண்ணி சம்பாதிக்க வேண்டும் என்பது. கார்ப்பரேட்டுகளின் பங்குகளில் 50 சதவீதம் அரசுடைமையாக இருக்க வேண்டும் என்பது. பார்ப்போம்!

No comments: