ஒரு நண்பர் சொன்னார்: “மனுஷ்யபுத்திரனை
ஒரு வாரம் பேஸ்புக் லாக் இன் பண்ணாமல் இருக்க சொல்லுங்க. அவதூறுகளில் நனையாமல் அப்ப
தான் அவர் நிம்மதியாக இருப்பார்”. நான் நினைத்தேன்: “மனுஷ்யபுத்திரன் பேஸ்புக் வராமல்
இருப்பதா? அது பேஸ்புக்கே ஷட்டரை இழுத்து மூடி விடுவது போல் அல்லவா? அதற்கு சூரியன்
கிழக்கே உதிக்காமல் இருக்ணும், நிலா தோன்றாமல் இருக்கணும், ஜெயலலிதா கலைஞர் மாதிரி
ஆகணும், கலைஞர் காமராஜர் மாதிரி ஆகணும்”.
Thursday, June 27, 2013
Wednesday, June 26, 2013
புரூஸ்லீயை கொன்றது யாரு? - அதிஷா (athishaonline.com)
புரூஸ்லீயின் மரணம் குறித்து பல்வேறு கதைகள் சொல்லப்படுவதுண்டு. ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு ரகம். ஆனால் எல்லாமே அமானுஷ்யமும், சுவாரஸ்யமும் நிறைந்ததாக இருக்கும். அதில் மிகசிறந்ததும் எனக்கு பிடித்ததும் வைரத்தூள் கதைதான். புரூஸ்லீயைக் கொல்ல அவருடைய மனைவியே மோதிரத்திலிருந்த வைரத்தை பொடிபண்ணி பாலில் கலந்து கொடுத்ததாகவும், அதை குடித்ததால்தான் புரூஸ்லீ இறந்துபோனதாகவும் மிகபிரபலமான ஒரு கதை உண்டு.
Tuesday, June 25, 2013
கனிமொழியை ஆதரிப்பதன் அறிவீனம்
நம் காலத்தின் மிகப்பெரிய துயரம்
குற்றவாளிகளை எளிதில் பூஜை செய்து தீபாராதனை காட்டி புனிதர்களாக்குவது. அவர்களை மிக
எளிதில் கோடிக்கணக்கான ரூபாயை சுருட்டி விட்டு பத்து வருடங்களுக்கு மேல் நீடிக்கும்
வழக்குகளின் புதிர்பாதைகளில் மறைந்து போவார்கள். அப்படி மறைந்து போனால் கூட பரவாயில்லை.
வழக்கின் சூடு தணியும் சட்டென்று ஒரு பெரும் அரசியல் பதவியையும் அடைந்து விடுவார்கள்.
அவரை ஆதரிக்கும் சிலர் “யார் தான்
ஊழல் பண்ணவில்லை. அவங்க பதவியில் இருக்காங்கன்னா இவரும் பதவி அடையலாமே?” என அற்பமாக
நியாயப்படுத்துகிறார்கள். கனிமொழியின் ராஜ்யசபா தேர்வும் அதை நம் மீடியாவும் விமர்சகர்களும்
கையாளும் விதம் நமக்குள் புரையோடியுள்ள ஒரு பெரும் சீர்கேட்டைத் தான் காட்டுகிறது.
Sunday, June 23, 2013
Thursday, June 20, 2013
Wednesday, June 19, 2013
ஸ்ரீசாந்த்: குற்றமும் தண்டனையும்
ஸ்பாட் பிக்ஸிங் ஊழலில் ஸ்ரீசாந்த்
மாட்டியுள்ளது இந்திய கிரிக்கெட்டின் கசப்பான பக்கங்களில் ஒன்று. போன முறை ஐ.பி.எல்லில்
ஸ்ரீவஸ்தவா போன்ற மூன்றாம் நிலை வீரர்கள் மாட்டி தடை செய்யப்பட்டார்கள். அதற்கு வெகுமுன்
அசருதீன், ஜடேஜா, மோங்கியா ஆகியோர் சூதாட்ட குற்றம் சுமத்தப்பட்டு தடைக்குள்ளானார்கள்.
இவர்களில் ஜடேஜா மட்டுமே குறிப்பிடத் தக்க இழப்பு.
Tuesday, June 18, 2013
Thursday, June 13, 2013
பெண் மொழியும் ஆண் மொழியும் ஒன்றாகும் போது…
பெண்கள் சந்தித்துக் கொள்ளும்
போது சுவிட்சு போட்டாற்போல பேச ஆரம்பிப்பார்கள். என்ன பேசலாம் என்கிற தயக்கமெல்லாம்
அதிகம் இருப்பதில்லை. பெண்கள் தம்மிடையே ஒரு உணர்வுபூர்வ கனெக்ஷனை எளிதில் உருவாக்குவார்கள்.
அது அவர்களின் வலிமை.
ஒரு பெண் மனசை இன்னொரு பெண்ணால்
தான் புரிந்து கொள்ள முடியும் என்று நம் சினிமாவில் அடிக்கடி ஒரு வசனம் வரும். ஆனால்
நடைமுறையில் இது உண்மையா?
Monday, June 10, 2013
நாய்ப் பிரியர்களும் நாய் வெறியர்களும்
சென்னை மாநகராட்சி நாய்களுக்கான
புகலிடம் அமைக்கப் போவதாய் கூறி மறைமுகமாய் மொத்த தெருநாய்களையும் ஒழித்துக்கட்ட திட்டமிட்டிருக்கிறது.
இது ஒரு பக்கம் வரவேற்பையும் இன்னொரு பக்கம் வருத்தத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
Thursday, June 6, 2013
இளவரசன் திவ்யா பிரிவும் சில பரிந்துரைகளும்
இளவரசன் திவ்யா திருமண முறிவில்
காதல் தம்பதிகளுக்கு/ ஜோடிகளுக்கு ஒரு பாடம் உள்ளது.
1.
காதலில் வெற்றி பெற காதல் மட்டுமே போதாது. நிறைய
தந்திரங்களும் அரசியல் பண்ணவும் தெரிந்திருக்க வேண்டும்.
2.
காதல் ஜோடிகள் தமது காதலரின் பெற்றோரை எப்போதும்
ஒரு போட்டியாளராக அல்லது எதிரியாகத் தான் நினைக்க வேண்டும். இனிமையாக அவர்களிடம் பேசலாம்
பழகலாம். ஆனால் எப்போதும் முதுகுக்குப் பின் ஒரு கத்திக் குத்துக்கு தயாராக இருக்க
வேண்டும்
3.
இது தான் மிக முக்கியமானது. காதலி அல்லது காதல்
மனைவியை தக்க வைக்க (ஆம் தக்க வைப்பது தான் ஆகப்பெரும் சாதனை) நிறைய பேசி அப்பெண்ணை
உங்களது அலைவரிசையில் வைத்திருக்க தெரிய வேண்டும். நிறைய நாடகங்கள் போட வேண்டும்.
Sunday, June 2, 2013
இந்திய கிரிக்கெட்டின் காட்பாதர்
இந்திய கிரிக்கெட்
வாரியத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்து ஸ்ரீனிவாசன் தற்காலிகமாக விலகுகிறார். இது
அவரை கடுமையாக விமர்சித்து கேள்வியெழுப்பிய மீடியாவின் வெற்றி. ஆனாலும் ஸ்ரீனிவாசனின்
வெற்றியும் தான். அவர் தன்னிடத்தில் தனக்கு அணுக்கமான ஜக்மோஹன் தால்மியாவை தலைவராக
நியமித்து விட்டு செல்கிறார். அவரது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஊழல்களை விசாரிக்கும்
குழுவிலும் அவர் நியமித்த தென்னிந்திய நீதிபதிகள் தாம் இருக்கிறார்கள். அவர்கள் எந்தளவுக்கு
நியாயமாக நடந்து கொள்வார்கள் என்பது சந்தேகமே. தால்மியாவும் சென்னை அணியில் கலைத்து
விட போவதில்லை. இவ்வளவு கூச்சல் ஆர்ப்பாட்டத்துக்கு பிறகு இரு தரப்புக்கும் அதிக சேதமின்றி,
வெற்றி தோல்வி எதுவும் இன்றி ஆட்டம் டிரா ஆகிறது. மீடியா ஒரு தார்மீக வெற்றியும் ஸ்ரீனிவாசன்
ஒரு நடப்பியல் வெற்றியும் பெற்றுள்ளார்.
திருமாவேலனும் கலைஞரும்
இவ்வார ஆனந்த விகடனில் பலரும் பாராட்டுகிற திருமாவேலனின் கலைஞர் கட்டுரை எனக்கு ஏமாற்றமாக இருந்தது. அதில்
அவர் சொல்லி உள்ளதை விட வேண்டுமென்றே சொல்லாமல் விட்டது அதிகம்.
Subscribe to:
Posts (Atom)